Saturday, 19 January 2013

நாடாளுமன்ற தாக்குதல் வழக்கு அடுத்த பலிகடா அப்சல் குரு .....

  10.12.2012 அன்று நமது மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் அப்சல் குருவின் கருணை மனு மீதான முடிவு இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடருக்குப்பின் எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். The Hindu 11.12.2012
 
     டிசம்பர் 22, 2012 அன்றே நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்துள்ள நிலையில் இனி ஒரு நாள் திடுதிப்பென தூக்கிலிட்டு விட்டோம் என்ற செய்திகள் வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அப்சல் குரு நமது நாடாளுமன்ற தாக்குதல் முயற்சியில் (13.12.2001) தூக்குத்தண்டனை உறுதி செய்யப்பட்ட குற்றவாளி. தூக்கிலிடப்பட்ட பின் வளரும் விவாதங்கள் எந்த நியாயத்தையும் வழங்கிவிடமாட்டா. யாருடைய கண்களையும் திறந்து எந்தப் பலனுமில்லை.
 
     ஆனால் நீதிக்கான நமது போர் தொய்வின்றி தொடரும். இந்த வகையில் அப்சல் குரு விவகாரத்திலும் அவர் குற்றம் சாட்டப்பெற்ற நாடாளுமன்ற தாக்குதலையும் குறித்து நாம் பல தொடர்களை வைகறையில் வெளியிட்டுள்ளோம்.
 
     அவை நாடாளுமன்ற தாக்குதல் வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்என்ற பெயரில் நூலாகவும் வெளி வந்துள்ளது. அந்த நூலிலும் அதற்கு பின்னர் வந்த தொடரிலும் இடம் பெறாத பல தகவல்களை இடம் பெற செய்கின்றோம்.
 

இருட்டடிப்பு செய்யப்பட்ட ஒரு பெரும் உண்மை:

     PUDR People’s for Democratic Rights என்ற ஜனநாயக உரிமைகளுக்கான அமைப்பு ஓர் ஆவணத் தொகுப்பை வெளியிட்டது. அதற்கு டிசம்பர் 13 ஜனநாயகத்தின் மேல் தீவிரவாதம் என தலைப்பிட்டிருந்தது
 
     இதில் வந்த உண்மைகளை நமது தொலைக்காட்சிகள் ஏறெடுத்தும் பார்த்திட்ட தாகத் தெரிந்திடவில்லை.
 
     அதில் பக்கம் 47 இல் கணீர் என்றொரு பிரகடனம் Finally, parts of Afzal’s 313 when conjoined and interpreted raise daka      issues about the complicity of the security agencies in the conspiracy     புரியும்படியாக இதைச் சொன்னால்:
 
     அப்சல் குரு நீதிபதியின் முன் கொடுத்த வாக்கு மூலத்தின் ஒரு பகுதியையும் இதர தடயங்களையும் தொகுத்து ஓர் ஆய்வுக்கு உட்படுத்தினால் நாடாளுமன்றத் தாக்குதல் சதியில் பாதுகாப்பு படைகளும் தங்கள் கைவரிசையைக் காட்டி இருக்கின்றன என்ற கசப்பான உண்மை வெளிவருகின்றது.
 
     நமது நாடாளுமன்ற தாக்குதல் அதை தாக்கிட நடந்த முயற்சியில் நமது பாதுகாப்பு படைகளின் பங்குஎன்பவை எத்துணை பாரதூரமான பதிவு. இதில் இன்றளவும் எந்த விசாரணையும் இல்லை அரசு தரப்பிலிருந்து.
 
     ஆனால் ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் கழகம் ஒரு பெரும் ஆய்வை நடத்தி ஆவணத் தொகுப்பொன்றை மக்கள் மன்றத்தில் வைத்திருக்கின்றது. அதில் இந்த வரிகள் ஒரு பெரும் சவாலை தொடுத்துக் கொண்டே இருக்கின்றன.
 
     அதனை மீடியாக்கள் கண்டுகொள்ளவே இல்லை.
 
     மொத்தத்தில் கஷ்மீரின் STF - Special Task Force என்ற சிறப்புப்படையும் ராஜ்பிர் சிங் என்ற டெல்லி காவல்துறை ஆணையரும் ஏற்பாடு செய்ததே இந்த நாடாளுமன்ற தாக்குதல் முயற்சி என அந்த PUDR People’s Union Democracy Rights  அறிக்கை உணர்த்திற்று.
 
     இதில் கைதிகளாக காவல் துறையின் கட்டுப்பாட்டிலிருந்த பல கஷ்மீர் முஸ்லிம்கள் பயன்படுத்தப்பட்டார்கள்.
 
     அப்சல் குருவின் விவகாரத்திலும் இதுவே நடந்தது. அதனை சுருக்கமாக இங்கே தருகின்றோம்.
 

அப்சல் யார்?

     முஹம்மத் அப்சல் வறுமையில் வாடிய ஓர் ஏழைக் குடும்பத்தைச் சார்ந்தவர். அவருடைய தந்தை அவருடைய இளம் பருவத்திலேயே இறந்து  போனார். அவருடைய அண்ணன் ஏஜாஸ் அஹ்மத் தான் அவரை வளர்த்தார். ஏஜாஸால் நன்றாக படித்திட இயலவில்லை. அதனால் அவன் தன் தம்பியை படிக்க வைக்க விரும்பினார். தம்பி அப்சல் குரு படிப்பதில் ஆர்வம் காட்டினான். அப்சல் குரு நன்றாக படித்து ஒரு மருத்துவராக ஆகிட வேண்டும் என்று விரும்பினான். இந்த இலட்சியத்தை அடைந்திட ஏஜாஸ் உதவி செய்தார்.
 

காஷ்மீரில் போர்:

     அப்சல் மருத்துவ படிப்பின் முதலாண்டில் படித்துக் கொண்டிருந்தான். அப்போது தான் கஷ்மீரின் இளைஞர்கள் ஒரு பெரும் போராட்டத்தை நடத்தினார்கள். அந்தப் போராட்டம் 1987ல் கஷ்மீரில் நடந்த பொது தேர்தலுக்கெதிரான போராட்டம். இந்த தேர்தலில் ஜெயித்தவர்கள் சிறையிலடைக்கப் பட்டார்கள். மக்களுக்கு துரோகம் செய்தவர்கள் சட்டசபைக்கு அனுப்பப்பட்டார்கள் (ஒரு பெரும் ஜனநாயக படுகொலை நடந்தது)
 
     இந்த போராட்டம் காலாகாலமாக கஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, ஒடுக்குமுறை இவற்றிற்கு எதிராக எழுந்தது. தாமாக மக்கள் படை திரண்டு பல பத்தாண்டுகளாக நடந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நடத்திய போராட்டம். இந்தப் போராட்டத்தில் நடந்த ஊர்வலங்கள் பல மைல்கள் நீளங் கொண்டவை. ஆயிரக் கணக்கான இளைஞர்கள் வெகுண்டெழுந்தார்கள்.
 
     தாங்கள் உலகில் வைத்திருந்த அபிலாஷைகளைப் புறந்தள்ளிவிட்டு தங்களது இல்லங்களை துறந்து பனிமண்டலங்களைக் கடந்து பள்ளத்தாக்குகளைக் கடந்து பாகிஸ்தான் கைவசமுள்ள கஷ்மீருக்கு சென்று ஆயுத பயிற்சி எடுக்கச் சென்றார்கள். அப்சல் குருவும் அவர்களில் ஒருவன்.
 
     மூன்று மாதங்களுக்கு பின் அவன் திரும்பி வந்து விட்டான். காரணம் பாகிஸ்தானும் தன் அரசியல் விளையாட்டுகளுக்காக கஷ்மீர் இளைஞர்களை பயன்படுத்துகின்றது என்பதை தெரிந்து கொண்டான். அதனால் அவனது சிந்தனைகள் மாறின. அவன் திரும்பி வந்தான். நமது எல்லைப் பாதுகாப்பு படையிடம் சரணடைந்தான். அவன் சரணடைந்ததற்கு நமது எல்லைப் பாதுகாப்பு படையினர் விதித்த நிபந்தனை அவன் இன்னும் இரண்டு பேரை சரணடைந்திட செய்திட வேண்டும். இந்த நிபந்தனையையும் அவன் நிறைவேற்றிடவே செய்தான்.
 

     அப்சல் வேலை தேடினான் வாழ்வதற்கு. மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்யும் வேலை ஒன்று அவனுக்கு கிடைத்தது. இது அவனுடைய மருத்துவராக வேண்டும் என்ற ஆசையை ஓரளவுக்கு ஈடு செய்வதாக இருந்தது. இதில் மாதம் ஐந்து ஆயிரம் ரூபாய் வருவாயாகக் கிடைத்தது. அவன் திருமணம் செய்து கொண்டான்.
 
     திருமணமான இரண்டு நாள் கழித்து கஷ்மீரின் சிறப்புப் படையைச் சார்ந்த சிலர் அவன் வீட்டுக்கு வந்தார்கள். அவனை அவர்களுடைய முகாமிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே அவனை அவர்கள் ஏறத்தாழ ஒரு மாதம் வைத்திருந்தனர். ஒவ்வொரு நாளும் அவன் குரூரமான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டான்.
 
     அவனுடைய மலத்துவாரத்தில் பெட்ரோலை ஊற்றினார்கள். குளிர்ந்த நீரில் பல நாள்கள் வைக்கப்பட்டிருந்தான். கடுமையான உதைகளுக்கும் அடிகளுக்கும் ஆளாக்கப்பட்டான்.
 
     அவனை இந்த சித்திரவதைகளிலிருந்து விடுவித்து வெளியே விட வேண்டும் என்றால் ஒரு லட்சம் ரூபாயைத் தந்திட வேண்டும் என நிபந்தனை விதித்தார்கள் STF என்ற கஷ்மீர் சிறப்புப்படையினர். இந்த சிறப்புப்படையினர் கஷ்மீர் மக்களிடம் தண்டால் வசூல் செய்வதில் மிகவும் பிரசித்து பெற்றவர்கள்.
 
     அப்சல் குருவின் மனைவி தபசும் தன்னிடமிருந்த எல்லா அணிமணிகளையும் விற்ற பின் தான் இந்த ஒரு லட்சம் ரூபாயை ஏற்பாடு செய்திட முடிந்தது. அப்சல் பயன்படுத்திக் கொண்டிருந்த ஸ்கூட்டரை அவனுடைய தாய் விற்று விற்றாள், இந்த ஒரு லட்சம் ரூபாய் என்ற இலக்கை அடைந்திட.
 
     ஒரு லட்ச ரூபாயைத் தந்தார்கள். அப்சலை மீட்டார்கள். ஆனால் அவனை ஒரு நடைபிணமாகவே அவன் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தார்கள்.
 
     அப்சல் சிறப்பு படைகளின் கைகளிலிருந்த நாள்களை அந்தக் குடும்பத்தினரால் மறந்திட இயலவில்லை.
 
     மக்கள் எழுச்சி : அடுத்து அப்சல் சிறப்பு படையின் (எஸ்டிஎஃப்-இன்) தகிடுதத்தங்களை வெளியே சொன்னால் என்ன நடக்குமோ, இந்தச் சிறப்புப் படையினர் என்ன செய்வார்களோ என்ற பீதியும் பயமும் அப்சலின் குடும்பத்தைத் தொற்றிக் கொண்டது.
 
     இந்த பயம் அப்சலை விட அவனுடைய அண்ணன் ஏஜாஸை அதிகமாக தொற்றிக் கொண்டது. மொத்த குடும்பமும் பீதி வயப்பட்டது.
 
     இந்த சிறப்பு படையை அகற்றிட வேண்டும். அது நடத்தும் சித்திரவதைக் கூடங்கள் அகற்றப்பட வேண்டும் என்றும் மக்கள் போராடினார்கள். உலகெங்கிலுமிருந்து கஷ்மீரைப் பார்வையிட வந்த மனித உரிமை அமைப்புகள் போராடின. ஆனால் நம் நாட்டு ஊடகங்களோ நம் நாட்டில் இயங்கும் மனித உரிமை அமைப்புகளோ இதை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
 
     நம் நாட்டு மனித உரிமை அமைப்புகள் கஷ்மீர் மக்களைச் சித்திரவதைச் செய்தால் அது நாட்டுப்பற்று என எடுத்துக்கொள்கின்றார்கள் என்று நந்திதா ஹாக்சர் ஆதங்கப்படுகின்றார்
 
     இந்த நந்திதா ஹாக்சர் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் பிரதான குற்றவாளி SAR ஜீலானிக்காக வாதாடியவர்.
 
     எஸ்.டி.எஃப் என்ற கஷ்மீர் சிறப்புப் படையின் மீது மக்கள் எந்த அளவுக்கு வெறுப்புக் கொண்டார்கள், அந்த வெறுப்பால் அவர்கள் எவ்வாறு ஒருமுகப்பட்டு நின்றார்கள் என்றால் இந்த சிறப்புப்படையை அகற்றிடு வேன் என்று வாக்குறுதி கொடுத்தால் தேர்தலில் வென்றிடலாம் என்ற நிலை இருந்தது.
 
     உண்மையில் இப்படியொரு வாக்குறுதியை தேர்தல் வாக்குறுதியாக வழங்கித்தான் முஃத்தி செய்யீத் என்பவர் கஷ்மீர் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்தார். (மேலே சொன்ன மேற்கோள்)
 
     சில நாட்கள் கழித்து இந்த சிறப்பு படையினர் அப்சலிடம் அவர்கள் சொல்லும் நபர்களை வேவு பார்த்து தகவல் தந்திட வேண்டும் எனக் கட்டாயப்படுத்தினார்கள். இராம் மோகன் ராண் என்ற 22 ராஷ்டிரிய்ய ரைபிள் படையைச் சார்ந்தவர் அப்சலை அழைத்துச் சென்று அவனுடைய மறைவிடங்களில் மின்சாரத்தை பாய்ச்சினார். அவரை அவமானப்படுத்தினார்கள். வதைத்தார்கள். வைதார்கள்.
 
தொடரும் சித்திரவதை:     அடிக்கடி அவர்கள் அப்சலை அழைத்து சென்று சித்ரவதை செய்தார்கள். ஒரு நாள் இரவு டி.எஸ்.பி வினாய் குப்தாவும் டி.எஸ்.பி டாரிந்தர் அவர்களும் எங்கள் வீட்டுக்கு வந்து இருந்தவர்கள். அனைவரையும் வாய்க்கு வந்தபடி வைதார்கள். அப்சலை அழைத்து சென்றார்கள். மீண்டும் பணம் கேட்டார்கள். மிச்சம் மீதி இருந்தனவற்றை விற்றுத் தந்து தான் அப்சலை மீட்டிட முடிந்தது.
 
     இந்த கொடுமைகள் தாழாமல் அவர் டெல்லிக்கு வந்து விடுவது என்று முடிவு செய்தார். அங்கே தனது வியாபாரத்தை தொடர்ந்தார். டெல்லி பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். படித்து பட்டமும் பெற்றார்.
 
     முஹம்மத் : ஒரு முறை அவர் குடும்பத்தவர்களைப் பார்க்க வந்த போது சிறப்புப் படையினர் அவரை அழைத்துச் சென்றனர். ஹும்ஹாமா என்ற இடத்திலுள்ள சிறப்பு படையின் முகாமில் வைத்து முஹம்மத் என்பவரையும் தாரிக் என்பவரையும் அறிமுகப்படுத்தினார்கள். அதில் முஹம்மத் என்பவரை டெல்லிக்கு அழைத்துச் சென்றிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்கள். அந்த முஹம்மத் யார் என்பதோ அந்த முஹம்மதை எஸ்.டி.எஃப் என்ற சிறப்பு படையினர் ஏன் டெல்லிக்கு அழைத்துச் செல்ல கட்டாயப்படுத்துகின்றார்கள் என்பதோ அப்சலுக்குத் தெரியாது.
 
     இந்நிலையில் அவர் இனி கஷ்மீரிலிருந்து தன் குடும்பத்தவர்களை டெல்லி அழைத்து வந்திட வேண்டும் என முடிவு செய்தார். அவருக்கொரு மகனும் பிறந்திருந்தான்.
 
     டெல்லியில் இந்திராவிகாரின் ஒரு வீட்டுக்கு ஏற்பாடு செய்தார். பெருநாளுக்கு கஷ்மீருக்கு வந்து குடும்பத்தினருடன் பெருநாள் கொண்டாடிவிட்டு குடும்பத்தோடு டெல்லி சென்றிட கஷ்மீர் சென்றார். ஸ்ரீநகர் பஸ் நிலையத்தில் இறங்கினார். தயாராக இருந்த கஷ்மீர சிறப்புப்படையினர் அவரைக் கைது செய்தார்கள். நாடாளுமன்றத் தாக்குதலில் இணைத்தார்கள். இப்போது தூக்கு மேடைக்கே கொண்டு சென்று விட்டார்கள்.
 
     பாட்னாவிலிருந்து தூக்குக் கயிரு தருவிக்கப்பட்டது. தூக்கில் யார் போடுவது என்பதும் முடிவாகி விட்டது.
 
     ஒருவேளை இறந்த பின் அவர் என்ன என்ன அறிக்கை விட வேண்டும் என்பதும் எழுதி வாங்கப்பட்டிருக்கும்.
 
 

அப்சல் குருவிடம் வாக்குமூலம் வாங்கியவரின் வாக்குமூலம்

     நமது பாரத நாட்டில் அப்பாவி முஸ்லிம்களை சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி வாக்குமூலங்களை வாங்கிடுவதற்கென ஐந்து சித்திரவதைக் கூடங்கள் இருக்கின்றன. இதனை நாம் வைகறை வெளிச்சத்தில் ஏற்கனவே விரிவாக வெளியிட்டிருக்கின்றோம்.
 
     இந்த வழியிலேயே காஷ்மீர் எஸ்.டி.எஃப்-ஐ சார்ந்த டிரேவிந்தர் சிங்  என்பவர் அப்சல் குருவையும் சித்திரவதைச் செய்து வாக்குமூலம் வாங்கி இருக்கின்றார். இவர் தான் சித்திரவதை செய்ததை பர்வேஷ் புகாரி என்ற பத்திரிகையாளரிடம் இப்படி கூறுகின்றார்:
 
     நான் என்னுடைய முகாமில் வைத்து அப்சல் குருவை பல நாட்கள் சித்ரவதைச் செய்தேன். விசாரித்தேன். அவனை கைது செய்ததை நாங்கள் எங்களுடைய எந்தப் பதிவேட்டிலும் பதிந்திடவில்லை. அவனை எங்களுடைய முகாமில் வைத்து எப்படியெல்லாம் சித்திரவதைச் செய்தோம் என்பதை விளக்கியிருக்கின்றானோ அது அத்தனையும் உண்மை. அன்றைய நாட்களில் அது தான் எங்களுடைய வழக்கம். நாங்கள் அவனுடைய மலத்துவாரத்தில் பெட்ரோலை ஊற்றினோம். நான் அவன் மீது மின்சாரத்தை பாய்ச்சி சித்திரவதை செய்தேன். ஆனாலும் அவனுடைய உறுதியை என்னால் உடைத்திட இயலவில்லை. அவனை நாங்கள் எவ்வளவு குரூரமாக சித்திரவதை செய்திட இயலுமோ அவ்வளவு குரூரமாக சித்திரவதை செய்தோம். ஆனாலும் அவன் கொஞ்சமும் விட்டுக் கொடுக்கவில்லை. நாங்கள் எங்களால் இயன்ற எல்லா குரூரங்களையும் கட்டவிழ்த்து விட்டோம்.  அவன் எதையும் ஒத்துக் கொள்ளவில்லை. காசிபாபா என்ற பாகிஸ்தான் உளவுத்துறையின் ஏஜெண்டுக்கும் அவனுக்கும் தொடர்பிருக்கின்றது என நாங்கள் சொல்லிடச் சொன்னோம். ஆனாலும் அவன் கிஞ்சிற்றும் விட்டுக் கொடுத்திடவில்லை. அவன் மலைபோல் நின்று விட்டான். நான் சித்திரவதை செய்வதில் கடுமையானவன். யாரை வேண்டுமானாலும் பணிய வைத்திடுபவன் என்ற பெயரையும் புகழையும் பெற்றவன். என்னுடைய சித்திரவதைக்குப் பின்னும் ஒருவன் குற்றமற்றவனாக வருகின்றான் என்றால் எவனும் அவனை சீண்டிட முடியாது. அவனை நல்லவன் என்றே மொத்த காவல் துறையும் எடுத்துக் கொள்ளும்.
 
     பர்வேஷ் பாரி இந்தப் பேட்டியை ஒரு பேட்டி என்ற அளவில் அல்லாமல் தனிப்பட்ட சம்பாஷனை என்ற பெயரில் டிரேவிந்தர் சிங் என்ற கஷ்மீரின் சிறப்புப் படையின் தலைவரிடமிருந்து கறந்த தகவலாகும்.
 
     இதனை தெஹல்கா பாணி என்றும் சொல்வார்கள்.
 
     டிரேவிந்தர சிங் தான் கொடுமையானவன் சித்திரவதைச் செய்பவன் என்பனவற்றை எள்ளளவும் மறைப்பவனல்ல. ஒரு தொலைக்காட்சியில் இப்படி பேட்டிக் கொடுத்தான். சித்திரவதை தான் தீவிரவாதத்தை தடுக்கும் ஒரே வழி. நான் அதை நாட்டுக்காக செய்கின்றேன். (அதே ஆதாரம் அதே பக்கம்)
 
     உண்மையில் அப்பாவிகளை இவன் செய்யும் தீவிரவாத செயல்களை ஒத்துக் கொள்வதற்கே இவன் சித்திரவதைகளைச் செய்கின்றான். பதவி உயர்வும் பணமும் தான் இவனது குறிக்கோள்.
 
     இதே அப்சல் குருவின் குடும்பத்தில் இருந்த கடைசி காசு வரைக்கும் கறந்தெடுத்தவன் இவன். இறுதியில் அவனை தூக்கு மேடையில் கொண்டு நிறுத்தி விட்டான்.
 

அப்சல் குருவே இலக்கு:

     அப்சல் குருவை தூக்கிலே போட்டுத்தான் எல்லா உண்மைகளையும் மண்மூடிப்போகச் செய்திட வேண்டும் என்பதை இன்னொரு நிகழ்வு உண்மைப் படுத்தும்.
 
     காவல்துறையினர் நீதிமன்றங்களில் அவனுடைய குற்றங்களை நிரூபிக்க வேண்டும் என்பதை விட மக்கள் மன்றத்தில் அவனை குற்றவாளியாகக் காட்டிட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார்கள். இதற்காக ஒரு பெரும் ஏற்பாட்டைச் செய்தார்கள். அது  அப்சல் குருவை பிடித்து வந்து நான் தான் குற்றவாளி என தொலைக்காட்சியின் முன் சொல்லிட வைத்தார்கள்.
தொலைக்காட்சிப்பேட்டி:     டிசம்பர், 13, 2001 இல் நாடாளுமன்றத் தாக்குதல் முயற்சி நடைபெற்று டிசம்பர் 20 2001ல் தொலைக்காட்சி பேட்டி எடுத்தன
 
     இந்த பேட்டிகள் எங்கு வைத்து எடுக்கப்பட்டன என்பது இன்னும் விநோதமானது.
 
     இந்த பேட்டி டெல்லியிலுள்ள சிறப்பு காவல் நிலையத்தின் அலுவலகத்தில் வைத்து எடுக்கப்படுகின்றது. பேட்டிகளை ஒருங்கி ணைத்து வழிநடத்திக் கொண்டிருந்தவர் காவல் துறையின் ஸ்பெஷல் செல் பிரிவின் தலைவர் ராஜ்பிர் சிங். கஷ்மீர் எஸ்.டி.எஃப்க்குப் அடுத்ததாக நாடாளுமன்ற தாக்குதலின் மொத்த மூளையும் இவர் தான். அப்சல் குருவை தூக்கில் போட்டு அரசு முகவாண்மைகளின் சதிகளை மொத்தமாக மறைத்திட வெகு நாட்களுக்கு முன்னரே முடிவு செய்திருந்தார் இவர்.
 
      பேட்டியின் போது அப்சல் குருவிடம் ஒரு கேள்வி. ஒசாமா பின் லேடன் அவர்கள் பற்றிய இலக்கியங்கள் SAR ஜீலானியிடம் இருந்தனவா?
 
     இந்தக்கேள்விக்கு அப்சல்குரு SAR ஜீலானி என்பவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது எனப்பதில் சொல்லுகின்றார். உடனேயே டெல்லி சிறப்புப்பிரிவு படையைச் சார்ந்த ராஜ்பிர்சிங் காட்சிகளை நிறுத்த சொல்லுகின்றார். இதனை நீதிமன்றம் இப்படிப்பதிவு செய்கின்றது.
 
     ஷஹீர்கான் ஆஜ்தக் என்ற தொலைக்காட்சி செய்தி நிறுவனத்தின் முதன்மை செய்தியாளர் சிறப்பு நீதிமன்றத்தில் இப்படி கூறினார்:
 
     நான் ஆஜ்தக் டிவி சானலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றேன். நான் குற்றம் சுமத்தப்பட்ட முஹம்மத் அப்சல்குரு என்பவரை 20 டிசம்பர் 2001ல் டெல்லி சிறப்பு காவல் பிரிவின் லோடி ரோடு அலுவலகத்தில் வைத்துப் பேட்டிக் கண்டேன். இந்த பேட்டி 15 நிமிடங்கள் தொடர்ந்தன.
 
     நான் அப்சலிடம் கேட்டக் கேள்வி SAR ஜீலானி இடமிருந்து ஒசாமா பின்லேடன் பற்றி இலக்கியங்கள் எதுவும் கைப்பற்றப்பட்டனவா? என்பதாகும்
 
     அப்சல் குரு தன்னுடைய பதிலில் தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறினார்.
 
     எனக்குப்பின் அதாவது ஆஜ்தக் தொலைக்காட்சிக்குப் பின் வேறு சில தொலைக்காட்சிகளும் பேட்டி     எடுத்தன. நான் பேட்டி எடுக்கும்போது என்.டி.டி.வி தொலைக்காட்சியை சார்ந்தவர்களும் அங்கு இருந்தார்கள். நான் ஆஜ்தக் தொலைக் காட்சிக்காக பேட்டி எடுத்த பின் சில தொலைக்காட்சி நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் என்னிடம் ஜீலானியின் நாடாளுமன்றத் தாக்குதலில் பங்கு பற்றி கேட்டார்கள். நான் அவர்களிடம் ஜீலானி அப்பாவி எனக் கூறினேன். உடனேயே காவல் துறை துணை ஆணையர் ராஜ்பீர்சிங் எழுந்து என்னிடம் ஜீலானி பற்றி யாரிடமும் எதுவும் சொல்லிடக் கூடாது என்றார். இந்த சம்பவம் சாட்சியம் எண் 4-கின் முன்னாலேயே நடந்தது. குற்றம் சாட்டப்பெற்ற ஏனையோரை பேட்டிக் காண எங்களை அனுமதிக்கவில்லை.
 
     அதன் பின் ராஜ்பீர்சிங் எழுந்தார். என்னிடம் வந்தார். அவர் குற்றம் சுமத்தப்பட்ட அப்சல் குருவிடம் SAR ஜீலானியைப் பற்றி யார் கேள்வி கேட்டாலும் எதுவும் சொல்ல வேண்டாம் என என்னிடம் சொன்னதும் உண்மையே.
 
     ஆனால் ராஜ்பீர்சிங் இப்படிச் சொல்லிடும் போது நான் அப்சல்குருவைப் பேட்டி எடுத்து முடித்திருந்தேன்.
 
     அதன்பின் ராஜ்பீர்சிங் என்னிடம் வந்து ஜீலானி பற்றி அப்சல் குரு சொன்னவற்றை தொலைக்காட்சியில் காட்டிட வேண்டாம் எனக்கூறினார். அதேபோல் நாங்கள் 20 டிசம்பர் 2001 மாலை 5 மணிக்கு இந்தப் பேட்டியை ஒளிபரப்பு செய்த போது அந்த வரிகளை விலக்கிக் கொண்டோம். ஆனால் 100 நாட்களுக்குப் பின் நாங்கள் மறு ஒளிபரப்பு செய்தபோது அந்த வரிகளையும் சேர்த்துதான் ஒளிபரப்புச் செய்தோம்.

     நீதிமன்ற பதிவுகளிலிருந்து:( (PUDR: report december 13 Terror over democrasy page 208, 209, 210 deposition of aaj tak principal correspondent oct 10 2002 dw4) இங்கே நாம் கவனிக்க வேண்டியது எல்லோமே முன்னரே முடிவு செய்யப்பட்டிருக்கின்றது. அப்சல் குருவை மக்கள் மன்றத்தில் பிரதான குற்றவாளியாகக் காட்டி விட்டு அவனை தூக்கில் போட்டு மொத்த சதியையும் ஒன்றாக மூடி விட வேண்டும் என்பதே தொடக்க நாள் முதல் திட்டம்.
 
     அதனால் காவல் நிலையத்தில் வைத்த ஒரே ஒரு குற்றம் சுமத்தப்பட்டரை பேட்டி எடுத்திருக்கிறார்கள்.   மக்கள் மன்றத்தில் அவரது வாயைக் கொண்டே அவரை குற்றவாளி என சொல்லிட வைத்த பின்பு சாட்சியங்கள் சட்டத்தின் சீரான நடவடிக்கைகள் எல்லாம் எதற்கு?
 
     குற்றம் நிரூபிக்கப்படும் வரை குற்றம் சுமத்தப்பட்டவரை நிரபராதிஎன்றே கொள்ள வேண்டும் என்ற சட்டத்தின் பொன்னான கோட்பாடுகளை காவல்துறை காற்றிலே பறக்க விட்டது. நீதித்துறை இதனை கண்டித்தது. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையுமில்லை.
 
     ஆனால் அப்சல் குரு விவகாரத்தில் குறிப்பாக நாடாளுமன்ற தாக்குதலில் இஃது இன்னும் ஒருபடி மேலே நடந்தது. அதாவது காவல்துறை ஜோடித்த மொத்தப் பொய் வழக்கையும் மையமாகக் கொண்டு ஒருபடமே எடுக்கப்பட்டது. இதை ஸீ நியூஸ் நிறுவனம் எடுத்தது. திரைப்படத்தின் பெயர் டிசம்பர் 13”. வழக்கு நடந்துக் கொண்டிருக்கும் போது படம் ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தில் எல்லோருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்படுகின்றது. அந்த தூக்குத் தண்டனையே தீர்ப்பிலும் கீழ் நீதிமன்றத்தால் வழங்கப்படுகின்றது. தீர்ப்பு இப்படித்தான் இருக்கவேண்டும் எனத் திரைப்படம் நீதிமன்றங்களுக்கு அழுத்தங்களை தந்தது. அதுதான் மக்கள் எதிர்பார்க்கும் தீர்ப்பு என்றது திரைப்படம். 
 
     அதாவது வழக்கு நடந்து முடிவதற்கு முன்னரே முஸ்லிம்கள் குறிப்பாக கஷ்மீர் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்றும் மக்கள் மனதில் பதிய வைத்து விட்டார்கள். இனி வழக்கில் என்ன நடந்தால் என்ன? மக்களில் சிலர் தூக்கு எப்போது எனக் கேட்டார்கள். திரையில் பார்ப்பதெல்லாம் நிஜம் என்று நம்பும் மக்கள் தூக்குப் போட்டாகி விட்டதே என்பார்கள். தூக்கில் போடாவிட்டால் என்ன நமது அரசு தீவிரவாதிகளை விட்டுவிடுகின்றதே இதனால் தான் நாட்டில் தீவிரவாதம் பெருகுகின்றது என்பார்கள்.
 
     நாட்டில் நடப்பிலிருக்கும் சட்டங்களின் படி குற்றம் சுமத்தப் பட்டவர்களை தொலைக்காட்சியில் காட்டுவதே தவறு. ஆனால் அவர்களை பேட்டியும் எடுக்கின்றார்கள். திரைப்படமும் எடுக்கின்றார்கள்.
 

உச்சநீதிமன்றத்தின் உச்சபட்ச (அ)நீதி:

     இப்படிப் படம் எடுப்பது தவறு, அதை திரையிட்டது தவறு, அதை உடனேயே நிறுத்த வேண்டும் என நீதிமன்றம் சென்றார்கள். டெல்லி உயர் நீதிமன்றம் ஸ்டே ஐ தடையை வழங்கியது. படமெடுத்தவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்கள். உச்சநீதிமன்றம் நீதிபதிகள் ஊடகங்களின் அழுத்தங்களுக்கு ஆளாகமாட்டார்கள் எனக்கூறி டெல்லி உயர்நீதிமன்றம் விதித்த தடைய அகற்றியது. திரைப்படம் தங்குதடையின்றி ஓடியது. இறுதியில் திரைப்படத்தில் தரப்பட்ட தண்டனையே குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு தரப்பட்டது. கீழ்நீதிமன்ற நீதிபதி திங்காரா கங்காரா என்பவரால் வழங்கப்பட்ட இந்த மொத்த தீர்ப்பும் உயர்நீதிமன்றத்தில் பல திருத்தங்களுக்கும் தலைகீழ் மாற்றங்களுக்கும் உள்ளாகியது.
 
     திரைப்படத்தில் காட்டப்பட்டதைப் போல் நாடாளுமன்ற தாக்குதலின் மூளை என குற்றம் சாட்டப்பட்ட டெல்லி பல்கலைகழக பேராசிரியர் ஷிகிஸி ஜீலானி அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப் பெற்றது. ஆனால் உயர் நீதி மன்றம் அவரை விடுவித்தது.

     உச்சநீதிமன்றத்தின் அநீதியும் அந்த திரைப்படத்தின் தாக்கமும் என்ன விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை நந்திதா ஹாக்சர் என்ற மூத்த வழக்கறிஞர் இப்படி குறிப்பிடுகின்றார்: The Supreme court however  vacated the stay on grounds that judges could not be influenced. it failed to appreciate how such film are responsible for creating a climate of fear and mistrust.Today even post acquittal Geelani cannot get a house on rent. His children find it hard to lead a normal life(source:13 december A Reader with an introduction by Arunthathi Rai Page no:9)
 
     அதாவது உச்சநீதிமன்றம் அந்த தடையை நீக்கிற்று. நீதிபதிகள் ஊடகங்களின் பாதிப்புகளுக்கு உள்ளாகமாட்டார்கள் என காணம் சொன்னது. அதுபோன்ற திரைப்படங்கள் மக்களிடையே அச்சத்தையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்துவதில் பொறுப்பு வகிக்கின்றன என்பதை கண்டு கொள்ள உச்சநீதிமன்றம் தவறிவிட்டது. இப்போது ஜீலானி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டார். ஆனால் அவர் ஒரு சாதாரண வாழ்க்கையை மக்கள் மத்தியில் நடத்துவதற்கு மிகவும் கஷ்டப்படுகின்றார். அவருக்கு ஒரு வாடகை வீடு கிடைப்பதில்லை. அவருடைய குழந்தைகளும் ஒரு சராசரி வாழ்க்கையை நடத்திட முடிவதில்லை (டிசம்பர்13 A Reader page no9)
 
     ஆனால் அப்சல்குருவுக்கு திரைப்படத்தில் தரப்பட்ட தண்டனை மக்கள் மனதில் கடைசிவரை நீடித்தது.
 
 
பொடா
 
அப்சல்குரு விவகாரத்தில் இன்னும் பல விளையாட்டுக்கள்: நாடாளுமன்றத் தாக்குதல் முயற்சி டிசம்பர் 13 2001ல் நடைபெற்று அப்சல் குருவை டிசம்பர் 15 2001  ஆம் ஆண்டு கைது செய்தார்கள். பொடா என்ற பாசிச பயங்கரவாத சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். டிசம்பர் 20ம் நாள் நாடாளுமன்றத் தாக்குதலை பொடாவின் கீழ் கொண்டு வந்தார்கள்.
 
     ஏனெனில் பொடாவின் கீழ் வாங்கப்படும் வாக்குமூலம் சட்டப்படி செல்லும். அதைக் கொண்டே அவனை தண்டிக்கலாம். அத்தோடு தனி நீதிமன்றம் அமைக்கவும் அது வழிவகுத்தது.
 
     இதில் கவனிக்கப்படவேண்டிய இன்னொது விவகாரம் என்னவெனில் பொடாவைக் கொண்டு வருவதற்காக திட்டமிடப்பட்டதே இந்த நாடாளுமன்றத் தாக்குதல். அதுபோது நாட்டை ஆட்சி செய்து கொண்டு இருந்த பாரதீய ஜனதா கட்சியின் ஊழல் ஊரெல்லாம் நாடெல்லாம் பரவி நாடாளுமன்றத்தையும் அதிர்வுகளுக்குள்ளாக்கி கொண்டிருந்தது.
 
ஒப்புதல் வாக்குமூலங்கள் நிராகரிக்கப்பட்டன : தொடர் சித்திரவதை பொடா இவையெல்லாவற்றையும் பயன்படுத்தி வாங்கப்பட்ட வாக்குமூலத்தையும் கூட உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. வழக்கறிஞர் நந்திதா இப்படி குறிப்பிட்டார் வழக்கின் புலனாய்வில் நடந்தது அனைத்தும் சட்டத்திற்கு புறம்பானவை. நீதிமன்றங்களே அக்கறையுடன் சாட்சியங்கள் புகுத்தப் பட்டுள்ளன, டெல்லி காவல் சிறப்பு நிலையத் தின் காவல் துறை அதிகாரிகள் சத்தியப் பிரமாணம் எடுத்து நீதிமன்றங்களில் பொய் சாட்சியம் சொன்னார்கள், அதேபோல் உச்ச நீதி மன்றம் காவல்துறையினர் அப்சல் குருவை சித்திரவதைச் செய்து ஒப்புதல் வாக்குமூலங்களை பெற்றிருக்கின்றார்கள்  என்பதை ஒத்துக் கொள்கின்றது. December 13 A Reader Page : Arundhati Roy & Haksar Page No. 26/27
 
     உச்ச நீதி மன்றம் இப்படி சொன்னது
“All these Lapses and violations of proceedural safeguards guaranteed in the statue itself impell us to hold that it is not safe to act on the alleged confessional statement of Afsal and Place reliance on this item of evidence on which the prosecution places heavy reliance”
Extracted from the Supreme Court Judgement 4/8/2005/ Nirmalang shree Mukerjee. Should Muhammed Afzal die. Page No.128.
 
      அதாவது வாக்குமூலங்கள் வாங்குவதில் சட்டங்கள் உறுதியளித்துள்ள பாதுகாப்புகளில் செய்யப்பட்டுள்ள அத்துமீறல்கள் தொய்வுகள் இவை எங்களை அப்சலின் இந்த வாக்குமூலங்களை சார்ந்திருப்பது சரியல்ல என்பதை உணர்த்துகின்றன. அதை ஒரு சாட்சியம் என எடுத்துக் கொள்வதும் சரியல்ல. ஆனால் அந்த வாக்குமூலத்தின் மீதுதான் அரசு அதிகமாகச் சார்ந்திருக்கின்றது.
 

     இப்படி அப்சலின் வாக்கு மூலம் முற்றாக புறக்கணிக்கப்பட்டுவிட்டது. அப்சல் மீதான மொத்த வழக்கும் அவன் வழங்கிய வாக்கு மூலத்தை நம்பியே இருக்கின்றது. அது முற்றாகப் புறக்கணிக்கப்பட்ட பின் அவனை எப்படித் தூக்கில் போட முடியும்?
 

அப்சல்குரு தீவிரவாத அமைப்புகளைச் சார்ந்தவரா?

     நாடாளுமன்ற தாக்குதல் நடந்தவுடன் லஸ்கரே-இ-தொய்பா, ஜெய்சே முஹம்மது ஆகிய பாகிஸ்தான் அமைப்புகளைச் சார்ந்தவர்களே இந்த தாக்குதலை செய்தார்கள் எனப் பிரகடனப்படுத்தினார்கள். அத்வானி இதில் முன்னிலையில் நின்றார். இதனை அடிப்படையாகக் கொண்டு பாகிஸ்தானோடு ஒரு போருக்கு தயாரானார்கள். 10000 கோடி ரூபாய் செலவில் படைகள் எல்லைகள் நோக்கி நகர்த்தப்பட்டன. இந்த அவசர நடவடிக்கையில் நமது இந்திய இராணுவத்தினர் 800 பேர் இறந்தார்கள். 100 குழந்தைகள் மடிந்தார்கள் நிலத்தில் புதைத்த கண்ணிவெடிகளில் சிக்கி பலநூறு விவசாயிகள் மாண்டார்கள். அணு ஆயுதங்களைப் பற்றிய பேச்சுகளும் வந்தன. ஆனால் எந்த தீர்ப்பும் அப்சல் குருவோ மற்றவர்களோ தீவிரவாத அமைப்புகளைச் சார்ந்தவர்கள் என்பதை குறிப்பிடவில்லை. அவர்கள் யாரும் எந்த அமைப்பும் சார்ந்தவர்களல்லர். குறிப்பாக அப்சல் குரு 1990ல் நமது எல்லை பாதுகாப்பு படையிடம் சரணடைந்தவர். அன்று முதல் அவர் நமது பாதுகாப்பு படைகளின் கண்காணிப்பில் கீழிலிருந்தார். அப்படியிருக்க அவர் பாதுகாப்பு படைகளை விஞ்சி எதுவும் செய்திட இயலாது.
 
     பிரதான மூளை: இத்தனைக்கும் மேலாக அப்சல் குருவின் பிரதான மூளை என்று யாரும் குறிப்பிடப்படவோ குற்றம் சாட்டப்படவோ இல்லை. நாடாளுமன்ற தாக்குதலின் பிரதான மூளை எனக் குற்றம் சாட்டப்பெற்றவர் ஜீலானிதான். ஆனால் அவரை அனைத்துக் குற்றங்களிலிருந்தும் விடுவித்து விட்டார்கள். இந்நிலையில் ஏன் அப்சல் குருவை தூக்கிலிட வேண்டும் எனத் துடிக்கின்றார்கள்.
 

அப்சல்குருவுக்கு அடிக்கடி வந்த போன்

     அப்சல் குரு தான் தனது வழக்கறிஞர் சுஷில் குமாருக்கு எழுதிய கடிதத்தில் எனக்கும் நாடாளுமன்ற தாக்குதலில் கொலை செய்யப்பட்ட முஹம்மத் என்பவருக்கும் பல தொலைபேசி அழைப்புகள் கஷ்மீர் எஸ்டிஎஃப்-ஐ சார்ந்த டிராவிந்தர் சிங் என்பவரிடமிருந்து தான் வந்தது என்பதை நீங்கள் எங்கள் செல்போன்களை ஆய்வு செய்தால் கண்டு கொள்ளலாம் என கூறியுள்ளார். (Arundhati Roy Dec-13 Page No.19)
 
     ஆனால் இன்றளவும் அது குறித்து எந்த ஆய்வும் செயல்படவில்லை. அதனால் தான் இந்த எஸ்.டி.எஃப் என்ற கஷ்மீர் சிறப்புப் படையின் ஏற்பாட்டில் தான் நாடாளுமன்ற தாக்குதல் நடந்திருக்கின்றது என்கின்றது நாடாளுமன்ற தாக்குதலில் ஆய்வாளர்கள், அறிஞர்கள், ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் கழகம் இவை வைக்கும் முறையீடு.
The Right thing to-do would be to a order a retrail Page XXI
 
     அப்சலின் வழக்கை முற்றாக விருப்பு வெறுப்பற்ற ஒரு மறுஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும். அதேபோல் நாடாளுமன்ற தாக்குதல் பற்றியும் குழு புலனாய்விற்கு உத்தரவிட வேண்டும்.
 
     நாடாளுமன்ற தாக்குதலில் உளவுத்துறையின் பங்கு, பாதுகாப்புப் படையினரின் பங்கு, கஷ்மீரில் இயங்கும் எஸ்.டி.எஃப் என்ற கிளர்ச்சிகளுக்கு எதிரான படைகளின் பங்கு, இவற்றை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். சாட்சியங்கள் வாக்கு மூலங்கள் இவற்றில் பல அத்துமீறல்கள் நடந்திருக்கின்றன என்பது ஏற்கனவே நீதிமன்றங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளன.
 
ஆனால் இந்தியாவில் எந்த அரசும் இதைச் செய்யும் என எதிர்ப்பார்ப்பதற்கில்லை - அருந்ததிராய் Dec 13 A Reader Page XXI
“Mohamed Afzal was a pawn in the design of the state” Page 13
 
     முஹம்மத் அப்சல் அரசின் ஏற்பாட்டில் ஒரு பொம்மை - நிர்மலாங்ஹு முகர்ஜி.
 
     அதாவது நிர்மலாங்ஹு முகர்ஜி அப்பட்டமாக அறிவிக்கின்றார் நாடாளுமன்ற தாக்குதலை (ஏற்பாடு செய்த) அரசின் கைகளில் இருந்த ஒரு பொம்மை தான் அஃப்சல். பக்கம் 13 A Reader
 
     ஆனால் யாரும் கொலை செய்யப்படவும் இல்லை. தாக்குதல் நடந்த இடத்திற்கு அவன் செல்லவுமில்லை. இது இந்திய நாடாளுமன்ற தாக்குதல் என்பதால் இதன் எல்லாப் பகுதிகளும் எல்லோருடைய பங்கும் சரியாக சீராக திறந்த மனதுடன் ஆராயப்பட வேண்டும் - ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் கழகம்.
 
எல்லா சாட்சியங்களும் தோற்றுப் போனதால் தான் மக்களின் மனங்களை திருப்திப்படுத்திட ஒரு தூக்கு ஒரு உயிர் பலி என தீர்ப்பளித்திருக்கின்றது உச்ச நீதி மன்றம் நரபலி நிலையிலிருந்து நம் நாடு இன்னும் மீளவில்லை.   
 

மொத்த நாடாளுமன்ற தாக்குதலும் ஒரு மகத்தான உள்ளிருப்பு வேலை

     கசாப் விவகாரம் அப்சல் குரு விவகாரம் இந்த இரண்டும் நமக்கு பல படிப்பினைகளைத் தந்திடும்.
 
     1. இங்கே உளவுத்துறை, கஷ்மீரின் சிறப்பு பாதுகாப்பு படை இவற்றில் ஒரு முஸ்லிமை பிரதிநிதியாக காட்டுவது, அதாவது மொத்த தீவிரவாத தாக்குதலுக்கும் ஒரு முஸ்லிமையே பிரதிநிதியாக்குவது, இதனால் தொடர்ந்து முஸ்லீம்களை தீவிரவாதிகள்எந்த மனசாட்சியுமில்லாமல் தாக்குதலை தொடர்ந்து செய்து கொண்டிருப்பவர்கள் என்ற எண்ணங்களை விதைத்துக் கொண்டே இருப்பது, இப்படி முஸ்லிம்களை முற்றாக வெறுக்கின்ற ஒரு தலைமுறையை வளர்த்தெடுத்து விட்டார்கள். இது இவர்கள் இந்த நாட்டுக்கு செய்த மாபெரும் துரோகம்.
 
     2. இப்படி மொத்த தாக்குதலுக்கும் ஒரு முஸ்லிமை பிரதிநிதித்துவப்படுத்தி அவருக்கு தூக்குத் தண்டனை வழங்கியவுடன் உள்ளிருப்பு வேலைகளைச் செய்த உளவுத்துறையின் கறுப்பாடுகளும் பாதுகாக்கப்பட்டு விடுகின்றனர். இவர்களால் அபிநவ் பாரத் போன்ற இவர்களின் எடுபிடிகளும் உண்மையான குற்றவாளிகளும் பாதுகாக்கப் படுகின்றார்கள். அவர்கள் எப்போதும் பிடிபடாமல் குண்டு வைப்புகளையும் தீவிரவாத தாக்குதல்களையும் தொடருகின்றார்கள். இதனால் தான் இந்தியாவில் குண்டுவடிப்புகள் தொய்வின்றி நடக்கின்றன.
 
     3. அப்சல் குரு கசாப் இவர்கள் இருவருக்கும் வழங்கிய தீர்ப்பில் நமது உச்ச நீதி மன்றம் தரப்பட்ட சாட்சியங்களையும் ஆவணங்களையும் ஆய்வு செய்து தீர்ப்பு வழங்கியதை விட நாட்டு மக்களின் மனசாட்சியை திருப்திபடுத்துவதற்காகவே இவர்களை தூக்கில் போட வேண்டும் என கூறியது.  “The attack on the indian parliment resulted in heavy casualities has shaken the entire nation on the collective conscience of the society will only be satisfied if capital punishment awarded to the offendent”
 
     இதே சொற்களைத் தான் கசாப்-இன் விவகாரத்திலும் உச்சநீதிமன்றம் கூறியது இப்படி. The case has shocked the collective conscience of the indian people as few others cases have Page 350 of the supreme court judgement on 26/11 delivered on....
 
     அதாவது இந்த வழக்கு இந்திய மக்களின் ஒட்டுமொத்தமான மனசாட்சியையும் உலுக்கிற்று வேறு சில வழக்குகளைப்போல். பக்கம் 350 மும்பை தாக்குதலில் உச்ச நீதி மன்ற தீர்ப்பிலிருந்து.
 
     இந்திய அரசியல் நிர்ணய சட்டத்திற்கு அப்பால் நின்று ஒரு புதுக்கொள்கையை உச்ச நீதிமன்றம் வகுக்கின்றது. அதுதான் நாட்டுமக்களின் ஒட்டுமொத்தமான மனசாட்சி என்ற கொள்கை.
 
     மட்டுமல்லாமல் உச்சநீதிமன்றம் வேறு சில வழக்குகளைப்போல் என்ற சொற்களையும் பயன்படுத்தியுள்ளது. இந்தசொற்கள் வரும் நாட்களில் பல வழக்குகளில் அப்பாவிகளைத் தூக்கிலிடவும் அபிநவ் பாரத் போன்ற அமைப்புகளின் தளகர்த்தர்களை காப்பாற்றவும் பயன்படும்.
 
     காலப்போக்கில் உயர் நீதிமன்றங்களும் மாவட்ட முதன்மை நீதிபதிகளும் இந்த உச்ச நீதிமன்ற சொற்களை பயன்படுத்துவார்கள். அப்பாவிகளை தண்டிப்பார்கள்.
 
     காலப்போக்கில் பல உச்சநீதிமன்ற தீர்ப்புகளைப்போல் ஒரு சட்டவிதி என்றாகி விடும்.
 
     இதனை இப்போதே நாம் எதிர்த்தாக வேண்டும். இதில் நாட்டு மக்களின் ஒட்டுமொத்த மனசாட்சி என்ற சொற்களுக்கு என்ன இலக்கணம்? வரையறை? மீடியாக்களில் அடிக்கடி குற்றவாளி எனக்காட்டப்படுவதே போதுமா? உச்ச நீதி மன்றம் தான் சொல்லும் வேறு சில வழக்குகளைப்போல் என்பதில் என்னென்ன வழக்குகள் வருகின்றன? அந்த வழக்குகளில் உச்ச நீதிமன்றம் எப்படி ஒட்டுமொத்த மக்களின் மனசாட்சியை அறிந்தது? இதுவும் இனி தெளிவுக்கு வந்தாக வேண்டும். இங்கே இன்னொரு கேள்வியும் எழுகின்றது. நாட்டின் மனசாட்சி உச்ச நீதிமன்றத்திற்கு குத்தகைக்கு விடப்பட்ட விஷயமா? அப்பாவிகளை தூக்கிலே தொங்கவிடும் போது உலுங்காத கலங்காத மனசாட்சியும் ஒரு மனசாட்சியா? இந்திய குடிமக்களின் மனசாட்சி உச்சநீதிமன்றம் அப்பாவிகளைத் தூக்கிலே தொங்கவிடும் போதெல்லாம் உலுங்கும் என்பதை உச்ச நீதிமன்றம் உணர்ந்திட வேண்டும்.
 
     4. அப்சல் குரு விவகாரத்தில் காவல்துறை நீதிமன்றங்களில் அவனுடைய குற்றங்களை நிரூபிக்க வேண்டும் என்பதை விட மக்கள் மன்றத்தில் அவனை ஒரு குற்றவாளியா காட்டிட வேண்டும்ட என்பதற்காக ஒரு பெரும் ஏற்பாட்டைச் செய்தது அஃது அப்சல் குருவை பிடித்து வந்து தொலைக்காட்சி முன் அமர வைத்து நான் தான் குற்றவாளி எனச் சொல்லிடச் செய்தார்கள்
 
     ஆனால் அவன் உண்மையைச் சொல்லிட தலைப்பட்டபோது காட்சியை துண்டித்துவிட்டார்கள்
 
     டிசம்பர் 13 2001ல் நாடாளுமன்றத் தாக்கிடும் முயற்சி நடைபெற்றது குற்றம் சுமத்தப்பட்ட அப்சல் குருவை டிசம்பர் 20 2001ல் தொலைக்காட்சிகள் பேட்டி எடுக்கின்றன இந்த பேட்டி எங்குவைத்து எடுக்கின்றன என்பது இன்னும் விநோதமானது 
 
     இதில் நாம் பெறும் பாடம் என்னவெனில் முஸ்லிம்களை தீவிரவாதப் பரம்பரையினர் என மக்களை சகோதர சமுதாயத்தவர்களை நம்ப வைக்கும் ஒரு பெரும் முயற்சி இடைவிடாமல் நடந்து கொண்டிருக்கிறது
 
     ஒரு முறை இதனை செய்து சாதித்து விட்டால் அதன் பின் முஸ்லிம்களை எப்படி எப்போது வேண்டுமானாலும் கூட்டாகக் கொலை செய்யலாம் என்ற அனுமதி லைசென்ஸ் எல்லோருக்கும் கிடைத்துவிடுகின்றது
 
     இப்படி ஒரு முயற்சி இடைவிடாமல் நாட்டிலே நடந்து கொண்டிருக்கின்றது என்பதை அண்மையில் தஞ்சை பல்கலைக் கழகம் வெளியிட்ட நூல் ஒன்று தெள்ள தெளிவாக விளக்குகின்றது இப்படி: நவம்பர் 20 2012 இல் நமது உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் அப்சல் ஐயும் இன்னும் வரிசையில் இருக்கும் பலரையும் தூக்கிலிட முடியாது என்கின்றது தி ஹிந்து பத்திரிகை அத்தோடு ஓய்வு பெற்ற உச்ச நீதி மன்ற நீதிபதிகள் 13 வழக்குகளில் தாங்கள் வழங்கிய தூக்குத்தண்டனைகளை ஆயுள் தண்டனையாக மாற்றிட வேண்டும் என குடியரசு தலைவருக்கு எழுதிய கடிதம் நீதிமன்றங்கள் செய்து கொண்டிருந்த கொலைகளில் பெரும் திருப்பம்

நாடாளுமன்ற தாக்குதலில் நமது பாதுகாப்பு முகவாண்மைகளின் உள்ளிருப்பு வேலை என்பதை ஊர்ஜிதப்படுத்தும் பிரிதொரு அத்தாட்சி.

ஹம்சா என்றொருவரை நமது நாடாளுமன்ற வளாகத்தில் வைத்துக் கொலை செய்தார்கள். இந்த ஹம்சா தீவிரவாதிகள் வந்த அம்பாசிடர் காரில் நாடாளுமன்றத் திற்குள் வந்தவர்களில் ஒருவன் எனவும் காட்டப்பட்டது
 
ஆனால் இவன் 2000ஆம் ஆண்டு முதலே எஸ்டிஎஃப் என்ற கஷ்மீரின் சிறப்புபடையின் பாதுகாப்பில் இருப்பவன். இவனை மராட்டிய மாநிலத்தின் தானே மாவட்ட காவல்துறையினர் 2000ஆம் ஆண்டில் கைது செய்து ஜம்மு கஷ்மீர் காவல் துறையிடம் ஒப்படைத்திருக்கின்றனர். 2000ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு காவல் துறையிடம் ஒப்படைக்கப் பட்டவர் எப்படி 2001 இல் நாடாளுமன்றத்தைத் தாக்க வந்தான்.
 
இது நாடாளுமன்ற தாக்குதல் முயற்சியில் எஸ்.டி.எஃப் என்ற சிறப்புப் படையின் கைகள் இருக்கின்றன என்பதை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளக்குகின்றது

Sunday, 6 January 2013

இந்தியாவில் தீவிரவாதிகளை உருவாக்கும் இராணுவக் கல்லூரிக்கு பவள விழா

இராணுவத்தை இந்து மயமாக்கிடும் கல்விக்கூடங்களுக்கு போன்சாலா இந்து இராணுவப் பள்ளிகள் எனப் பெயர்

1937 இல் மாராட்டிய மாநிலம் நாக்பூரில் நிறுவப்பட்ட இந்தக் கொலை பாதக பயிற்சிக் கூடத்திற்கு இந்த ஆண்டில் 75ஆம் அகவை நிறைவு பெறுகின்றது. இதற்கான கோலாகலமான விழாக்கள் எங்கணும் நடைபெற்று வருகின்றன.

இந்தக் கொலை விளையாட்டைக் கற்றுத்தரும் கலாச்சாலைகள் இன்றளவும் பல கோடி முஸ்லிம்களின் உயிர்களையும் பலகோடி கிருஸ்தவர்களின் உயிர்களையும் பல கோடி தலித்களின் உயிர்களையும் குடித்திருக்கின்றன.


இந்த கொலை கலாசாலையை சிந்தையில் முளைக்கச் செய்து செயற்களத்தில் செய்து காட்டிய செம்மல், மூஞ்ஜே என்ற சனாதனவாதிதான். நச்சு மூளைகளின் மையம் எனக் கருதப்படும் சித்பவன பார்ப்பனர்களில் ஒருவர் இவர். 

யார் இந்த மூஞ்சே?

 இவர் தான் இந்தியாவில் வகுப்புவாதத்தையும் பின்னர் வகுப்பு வெறியையும், பின்னர் கொலை பாதகங்களையும் செய்யும் அமைப்புகளின் தந்தை. இவரது கொலை வெறியை நாம் மேலே குறிப்பிட்டுள்ள மூஞ்சே ஆவணங்களிலிருந்து தரப்பட்டுள்ள வரிகள் சுட்டிக்காட்டும்.

                                மூஞ்சே                         சவார்க்கர்
மூஞ்சே
இந்துமகா சபை என்ற அமைப்பையும் பின்னர் சங்கப் பரிவாரத்தின் பிறப்பிடம் எனப் பேசப்படும் ஆர்.எஸ்.எஸ் என்ற ராஷ்டிரிய ஸ்வயம் சேவா சங்கத்தையும் தோற்றுவித்தவர்.

இந்தியா விடுதலை பெற்ற நாள்களில், முஸ்லிம்களுக்கும், இதர சிறுபான்மையினருக்கும் கிடைக்கவிருந்த அத்தனை பாதுகாப்புகளையும், உரிமைகளையும் தட்டிப் பறித்தவர். அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலுடன் கைகோர்த்துக் கொண்டு அரசியல் சாசனம் சிறுபான்மையினருக்கு வழங்கவிருந்த உரிமைகளை (இடஒதுக்கீடு உட்பட்ட உரிமைகளை) வழிமறித்தவர்.

அரசியல் நிர்ணயச் சட்டப் பிரிவுகள் 15, 16(4) ஆகியவை சிறுபான்மையினர் என்ற சொல்லுக்குப் பதிலாக முஸ்லிம்கள், கிருஸ்தவர்கள் என்ற சொற்களையே பயன்படுத்திட இருந்தது. இதை வழிமறித்தார்கள் பட்டேலும் மூஞ்சேவும்.

பின்னர் சிறுபான்மையினர் என்ற பொது சொல்லாட்சியைப் பயன்படுத்திட முடிவு செய்யப்பட்டது. அதையும் வழிமறித்தார்கள் இவர்கள். சமுதாய ரீதியாகவும் பொருளாதர ரீதியாகவும் பின் தங்கியவர்கள் Socially and Economically Backward என்ற சொல்லாட்சியைப் புகுத்தினார்கள்.

இதனால் முஸ்லிம்கள் தங்களிடையே பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் எனச் சிலரை அடையாளப் படுத்திட ஜாதிகளைக் கண்டுபிடிக்கும் பெரும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அந்த முஸ்லிம்கள், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் எனத் தங்களைக் காட்டிக் கொண்டு அரசின் சலுகைகளை எதிர் பார்க்கின்றார்கள். நமது சமுதாய தலைவர்களும் இன்ன ஜாதி எனக் குறிப்பிடுங்கள். அள்ளிக் கொட்டும் அரசு உதவிகளை எனக் கூறி இஸ்லாத்தில் இல்லாத ஜாதியத்திற்கு முத்திரை குத்தினார்கள். இவர்களால் அரசியல் நிர்ணயச் சட்டத்தில் அன்று புகுத்தப்பட்ட சொல்லாட்சியை இன்றளவும் மாற்றிட இயலவில்லை. இத்தனை குழப்பங்களுக்கும் காரணம் அன்று அரசியல் நிர்ணயச்சட்டத்தை எழுதியபோது முறையான சொல்லாட்சி இடம் பெறாமல் தடுத்த சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் மூஞ்சே ஆகியோர் தாம்.

பாசிசத்தை அதன் கோட்டைக்கே சென்று கற்றார் மூஞ்சே! இந்தியாவுக்குள் கொண்டு வந்தார் மூஞ்சே!

இந்துத்துவ சிந்தனையையும் அதனை சிறுபான்மையினரைக் கொலைசெய்யும் இயந்திரமாகவும் ஆக்கிடும் எண்ணங்களைச் சுமந்த டாக்டர் மூஞ்சே, தன்னை இந்தியாவின் விடுதலைப் போர் வீரர் எனக் காட்டிக் கொண்டார்.

உண்மையைச் சொன்னால் அன்றைய நாட்களில் இந்துத்துவா தனக்குள் போர்த்திக் கொண்ட போர்வை சுதந்திரப் போராட்டம். ஆனால் செய்ததெல்லாம் இந்தியாவுக்கு இரண்டகம். அதே போல் காங்கிரஸ் கட்சியை இவர்கள் தங்கள் கைகளில் வைத்திருந் தார்கள். காங்கிரஸ் கட்சிக்குள் பண்டித நேரு அவர்கள் சொன்னது நடக்கவில்லை மூஞ்சேயும், சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களும் சொன்னதெல்லாம் நடந்தன.

எந்த அளவுக்கு இவர்கள் காங்கிரசையும், விடுதலைப் போரையும் பயன்படுத்தினார்கள் என்றால் 1931-இல் லண்டனில் நடந்த வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள செல்பவர்களில் தன்னையும் ஒருவராக ஆக்கிக்கொண்டார் டாக்டர் மூஞ்சே.

லண்டன் வட்ட மேஜை மாநாட்டுக்குச் செல்கின்றேன் என்ற சாக்கில், இவர் ஐரோப்பிய நாடுகளுக்கும் அவற்றுள் குறிப்பாக இத்தாலிக்கும் சென்றார். இத்தாலிக்கு சென்றதன் நோக்கம் அங்கிருந்த பாசிஸ்ட் சிக்னோர் முசோலினியைச் சந்தித்து பாசிசத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவதுதான்.

பாசிசம் என்பது ஒரு படுகொலை பயங்கரவாதம், தங்கள் எதிரிகளை ஈவிரக்கமின்றி கொலை செய்து காட்டுமிராண்டி தனத்தின் வழி தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்பவர்கள் பாசிஸ்டுகள்.

முசோலினி இப்படித்தான் தனது எதிரிகளைக் கொலை செய்து இத்தாலியின் சர்வாதிகாரியாகத் தன்னை ஆக்கிக் கொண்டான். முசோலினியின் முத்திரைகளுள் ஒன்று அவன் தன் எதிரிகளுக்கெதிராக இளைஞர்களைத் தயார் செய்ய பல இராணுவப் பள்ளிக்கூடங்களை நடத்தினான். அவற்றில் இளைஞர்களுக்குக் கற்றுத் தரப்படுவதெல்லாம் எதிரிகளுக்கெதிராக பொய்யும், புரட்டுகளுமே. எதிரிகளுக்கெதிராக இப்படிப் பொய்யையும், போலியையும் சொல்லி இளைஞர்களின் மனங்களில் தீயை மூட்டிய பின் கைகளில் குரூர ஆயுதங்களைத் தந்து கூட்டுக் கொலைகளை நடத்துவார்கள்.

இந்தப் பாசிசப் பள்ளிக் கூடங்களுக்கு இத்தாலியில் முசோலினி வைத்த பெயர்: CENTRAL MILITARY SCHOOL OF PHYSICAL EDUCATION: மத்திய உடற்பயிற்சி கல்வி இராணுவப்பள்ளி. இவை ACADEMY OF PHYSICAL EDUCATION உடற்பயிற்சி கல்வியகத்தின் கீழ் இயங்கின.

முசோலினி
இத்தாலியின் பலீலியா என்ற இடத்திலும், ஆன்காடிஷி என்ற இடத்திலும் இந்தக் கல்வி நிலையங்கள் இயங்கி வந்தன. வட்டமேஜை மாநாட்டிற்கு செல்வதாகக் கூறிய மூஞ்சே இத்தாலியின் பாசிசத்தால் மிகவும் கவரப்பட்டவர் இதனால் இத்தாலிக்குச் சென்று முசோலினியைச் சந்தித்தாரர். இந்த சந்திப்பு மார்சு 19ஆம் நாள் 1931 மதியம் மூன்று மணிக்கு நடந்தது. முசோலினியின் பாசிச அரசு மாளிகையான பலோசா வெளிபியாவில் இது நடந்தது.

இப்படி உலகின் படுகொலைப் புகழ், முசோலினியைச் சந்தித்ததை டாக்டர் பி.எஸ்.மூஞ்சே தனது நாட்குறிப்பில் மிகவும் லாவகமாகப் பதிமூன்று பக்கங்கள் எழுதி வைத்தார் அதில், நான் அவருடைய அறைக்கு (முசோலினியின் அறைக்கு) வருகிறேன் என்றவுடன் அவர் எழுந்தார், சற்று முன்னே நடந்து வந்து என்னை வரவேற்றார். நான் தான் டாக்டர் மூஞ்சே எனச் சொல்லிக் கொண்டு அவருடன் கைக்குலுக்கிக் கொண்டேன். அவர் என்னைப்பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்திருந்தார் போலும். என்னோடு அரைமணிநேரம் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அவர் என்னிடம் “இராணுவப்பயிற்சி தரும் பள்ளிக் கூடங்களை நீங்கள் பார்த்தீர்களா?” எனக்கேட்டார். அதற்குப் பதிலாக, “நான் மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி தருவதில் ஆர்வம் உள்ளவன். ஆதலால் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளிலுள்ள இராணுவக் கல்லூரிகளைச் சென்று பார்த்தேன். நான் இன்று காலையிலும் பிற்பகலும் இங்குள்ள பாலீலா, பாசிச அமைப்பு, பாசிச கல்விக்கழகம் ஆகியவற்றப் பார்வை யிட்டேன். அவை என்னை வெகுவாகக் கவர்ந்தன. இத்தாலிக்கு இவை மிகவும் அவசியம். இவற்றில் எந்தத் தவறுமில்லை. ஆனால் அடிக்கடி இந்த பாசிச அமைப்புகளையும் உங்களையும் பத்திரிகைகள் இடித்து எழுதுவதைப் படித்திருக்கின்றேன்”. எனப் பதில் சொன்னேன்.

நான் சொல்லி முடித்ததும் சிக்னோர் முஸோலினி என்னிடம், “இவைப் பற்றி உங்கள் கருத்தென்ன?” எனக்கேட்டார். நான் சொன்னேன், “கனவானே! நான் இவற்றால் அலாதியாகக் கவரப் பட்டுள்ளேன். வளரும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும், இதுபோன்ற அமைப்புகள் மிகவும் முக்கியம். இந்தியாவின் இராணுவ வளர்ச்சிக்கு இது மிகவும் முக்கியம். நான் இதற்காக ஓர் அமைப்பை ஏற்கனவே இந்தியாவில் தொடங்கி விட்டேன். இது என் மனதில் தனியாக உதித்தது. வாய்ப்புக் கிடைத்தால் நான் இந்தியாவிலும், இங்கிலாந்திலும், பாலீலா பயிற்சி முகாம் பற்றியும், பாசிச அமைப்புகள் பற்றியும் புகழ்ந்து பேசுவேன்.”

இதைச் செவிமடுத்த சிக்னோர் முஸோலினி மிகவும் மகிழ்ச்சியடைந்தார். என்னிடம் “நன்றி! ஆனால் உங்கள் நாட்டில் இது மிகவும் கடினம். உங்கள் முயற்சியில் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகின்றேன்” என்றார். இதைச் சொன்தும் நானும் எழுந்தேன். அவரும் எழுந்தார்(Source : Economic and Political Weekly - January 22, 2000) இந்தப் பின்னணியில் தான் நாக்பூரில் வீற்றிருக்கும் இந்து பாசிச பள்ளியைத் தொடங்கும் முன் மத்திய இந்து இராணுவ சங்கத்தை டாக்டர் பி.எஸ்.மூஞ்சே தொடங்கினார்.

டாக்டர் மூஞ்சேயும் ஹெட்கேவரும்

ஹெட்கேவர்
ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பைத் தொடங்கியவர் என்ற பேச்சு வந்தாலே அதனைத் தொடங்கிய ஹெட்கேவர்தான் முன் வருவார். அப்படி இருக்க எப்படி ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பைத் தொடங்கியவர் என மூஞ்சேயை குறிப்பிடலாம் என்ற வினா எழும்.

உண்மையில் ஹெட்கேவருக்கு எல்லா உதவிகளையும் செய்தவர் டாக்டர் மூஞ்சேதான். ஹெட்கேவரின் வரலாற்றை எழுதிய க.பி.வி. தேஷ்பாண்டே, எஸ்.ஆர்.இராமசாமி ஆகியோர் இப்படிக் குறிப்பிட்டார்கள். “ஹெட்கேவரை மூஞ்சேதான் தன் வீட்டில் வளர்த்தார். பின்னர் மூஞ்சேதான் ஹெட்கேவரை கல்கத்தாவிலுள்ள தேசிய மருத்துவக்கல்லூரியில் படிக்க அனுப்பி வைத்தார். அங்குள்ள ஒரு தீவிரவாத அமைப்புடன் தொடர்பை ஏற்படுத்துவது தான் அவரை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பியதன் நோக்கம்” ஆதாரம்: DR. HEDGEWER, THE EPOCH MAKER, By B.V.DESHPANDE. AND S.R.RAMASAMY, SAHITHIYA SINDU; BAWGALORL, 1931 pages: 14-32 இதனால் ஹெட்கேவரை உருவாக்கியவர் டாக்டர் மூஞ்சேதான் என்கிறார், ஆய்வாளர் மார்சியா கேசலோரி. (ECONOMIC AND POLITICAL WEEKLY, JANYARY 22.2000) 

போன்சாலா இந்து இராணுவப் பள்ளியின் இன்றைய சதிகள் 

இந்து இளைஞர்களில் பெரும்பாலும் திக்கற்றோர் வக்கற்றோர் இவர்களே இங்கு சேர்க்கப் படுகின்றார்கள் முஸ்லிம்களுக்கெதிராகவும் சிறுபான்மையினருக்கெதிராகவும் வெறியூட்டப்படுகின்றார்கள். சிறுபான்மையினரை அழிக்க வேண்டும் என இங்கே பாடம் சொல்லித் தரப்படுகின்றது. போதிய அளவுக்கு வெறியூட்டிய பின் ஆயுத பயிற்சிகள் தரப்படுகின்றன. இந்தப் பயிற்சிகளைத் தருபவர்கள், நமது இராணுவத்தில் பணியாற்றிடும் பயிற்சியாளர்கள் தாம். இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுபவர்கள், இங்கே நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.  இந்த இந்து இராணுவப்பள்ளியில் பயின்று வெற்றிபெறும், வெறியூட்டப் பட்ட மாணவர்கள், இராணுவத்தில் இணைக்கப்படுகின்றார்கள். இதன் மூலம் நமது இந்திய இராணுவம் இந்துத்துவமயமாக்கப் படுகின்றது
.
பிரசாந்த் புரோகித்
2008 செப்டம்பர் மாலேகான் குண்டு வெடிப்பு கபளீகரங்களில் பல உண்மைகள் உலகுக்குத் தெரிந்திட வந்தன. அதில்தான் இராணுவ தளபதி பிரசாந்த் புரோகித் இன் தீவிரவாத சதுராட்டங்கள் நாட்டையே உலுக்கி எடுத்தன. அவர் இராணுவத்தளபதி மட்டுமல்ல, அபிநவ் பாரத் என்ற தீவிரவாத அமைப்பினை இயக்குபவரும் கூட என்பன தெரிய வந்தன. இதில் நடைபெற்ற ஆய்வுகளில் போன்ஸாலா இந்து இராணுவப் பள்ளிதான், நாட்டில் நடந்த குண்டு வெடிப்புகளின் மையம் என்பது தெரியவந்தது. இந்த வகையில் போன்ஸாலா இராணுவப் பள்ளியின் சாதனைகள் இப்படித் தொடருகின்றன.

சாதனை 

நந்தேத் குண்டுவெடிப்புகள்.

நந்தேத் என்பது மராட்டிய மாநிலத்திலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்று. இங்கே மொத்தம் எட்டு லட்சம் மக்கள் வாழுகின்றார்கள். இவர்களில் ஐந்து லட்சம் இந்து பெருங்குடி மக்கள். மூன்று லட்சம் முஸ்லிம்கள். இரண்டு லட்சம் சீக்கிய சகோதரர்களும் மற்ற சமுதாயத்தவர்களும் வசிக்கிறார்கள். இந்த நந்தேத் பெருநகரில் வகுப்புக் கலவரம் ஒன்றை நிகழ்த்திட திட்டம் போட்டார்கள் சங்கப் பரிவாரத்தினர். அத்திட்டத்தில், முஸ்லிம்கள் பள்ளிவாசலில் அதிகமாகக் கூடும் வெள்ளிக்கிழமையில் குண்டு வெடிக்கச் செய்யவேண்டும். அடுத்த நாள் சீக்கியர்களின் வழிபாட்டுத்தலமாகிய குருத்துவாரா ஒன்றில் குண்டு வெடிக்கச் செய்திட வேண்டும். இந்த இரு நிகழ்வுகளும், சீக்கிய அன்பர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் ஒரு பெரும் மோதலை உருவாக்கும், மொத்தக் குழப்பத்தில் நாம் குளிர் காயலாம் எனத் திட்டமிட்டிருந்தனர்.

இந்தத் திட்டத்தை நிறைவேற்றிட அவர்களுக்கு அழகியதொரு வாய்ப்பும் கிடைத்தது. ஆமாம் சீக்கிய பெண் ஒருத்தி ஒரு முஸ்லிமுடன் காதலில் வீழ்ந்தாள். இருவரும் நந்தேதை விட்டு ஓடி விட்டார்கள். இது முஸ்லிம்களுக்கும் சீக்கியர்களுக்கும் இடையிலிருந்த பிணைப்பை பகையாக மாற்றிட இருந்தது.

இந்நிலையில் பள்ளி வாசல் ஒன்றில் குண்டு வெடித்தால் பழி சீக்கியர்கள் மேல் விழும். அடுத்த நாள் குருத்துவாராவில் குண்டொன்று வெடித்தால் முஸ்லிம்கள் பழிக்குப்பழி செய்து விட்டார்கள் என்ற எண்ணம் வலுக்கும். இரண்டு சமுதாயமும் இரத்த ஆற்றில் மிதக்கும். அதனால் உடனேயே இரண்டு பள்ளி வாசல்களிலும், ஒரு குருத்துவாராவிலும் குண்டுவைக்க ஏற்பாடு செய்தார்கள். பரிவாரத்தின் முன்னாள் ஆர். எஸ்.எஸ் உறுப்பினர் லஷ்மன் ராஜ்கொண்டுவார்கர் என்பவரின் வீட்டைத் தேர்ந்தெடுத்து அவசர அவசரமாகக் குண்டுகளைச் செய்திட முயற்சி செய்தார்கள். இதில் அவ்வீட்டின் செந்தக்காரரான லஷ்சுமன் ராஜ் கொண்டுவாரின் மகன் நரசும் பங்கெடுத்துக் கொண்டான்.

இந்தக் குண்டுகளைச் செய்திடும் நுணுக்கங்கள் அவர்கள் 2000 ஆம் ஆண்டு போன்ஸாலா இந்து இராணுவப் பள்ளியில் நடந்த 40 நாள் பயிற்சி முகாமில்தான் கற்றார்கள். அப்போது 40 பேருக்கு குண்டு செய்வது எப்படி என்பது குறித்த குறிப்புகளும் வழங்கப்பட்டன. அந்தக் குறிப்புகளைப் பார்த்தே குண்டுகளைச் செய்து கொண்டிருந்தார்கள்.

குண்டுகளை செய்வதில் தேர்ச்சி பெற்ற ஹிம்மான் பான்சி, ராகுல் பாண்டே ஆகியோரும் நந்தேத் குண்டு தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டார்கள். இவர்களுடன் 1. மாருதி கேஷவ்வாக், 2.யோகஹேஹ் விதுல்கார் (தேஷ் பாண்டே) 3. குருராஜ் ஜெய்ராம் திப்திவார் 4. ராகுல் மனோகர் - ஆகியோரும் ஈடுபட்டார்கள்.

குண்டுகளைப் பள்ளிவாசலில் வைப்பது யார் என்பது முடிவு செய்யப்பட்டு, தேவையான ஜுப்பாவும், ஒட்டுத்தாடியும் குல்லாவும் வாங்கி வைக்கப்பட்டுவிட்டன. அதே போல் குருத்துவாராவில் குண்டு வைப்பது யார் என்பதும் முடிவு செய்யப் பட்டு, அதற்கான தலைப்பாகையும் தாடியும் வாங்கி வைக்கப்பட்டிருந்தன.

திட்டம் முழுமையாக நிறைவேறிட இருந்த நேரத்தில் தான் குண்டுகள் செய்து கொண்டிருக்கும் போதே (6 ஏப்ரல் 2006ல்) வெடித்து விட்டன. குண்டு வெடிப்பில் நரேஷ், ஹிமான்ஷி பான்சே ஆகிய இருவரும் அங்கேயே சின்னாபின்னமாகிப் போனார்கள். எஞ்சியோர் காயம்பட்டு மருத்துவமனைகளில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தந்த வாக்கு மூலத்தில் தான் இந்த உண்மைகள் உலகுக்கு தெரிய வந்தன.

அவர்கள் இதற்கு முன், ஜால்னா எனுமிடத்தில் வெள்ளிக்கிழமை பள்ளி வாசலில் குண்டு வைத்ததிலும், பூர்னா என்னுமிடத்தில் வெள்ளிக்கிழமை குண்டு வைத்ததிலும் பலநூறு முஸ்லிம்கள் இறந்தார்கள். இதே போல் பார்பானி எனுமிடத்திலுள்ள பள்ளிவாசலில் ஒரு வெள்ளிக்கிழமை குண்டு வைத்தார்கள்.

ஆனால் அதிகமான முஸ்லிம்கள் இறக்கவில்லை. இந்தக் குறையை நிறைவு செய்ய இதனால் அடுத்த வெள்ளிக் கிழமை ஒரு பைக்கில் இரண்டு பேர் சென்று தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களில் பலரை சுட்டுக்கொன்று விட்டு வந்து விட்டார்கள்.

இந்தத் துப்பாக்கி பயிற்சியும் மூஞ்சேயின் இந்து இராணுவ பயிற்சி மையம் வழங்கியதுதான்.

போன்ஸாலா இராணுவப்பள்ளி சாதனை எண்.2

போன்ஸாலா இந்து பள்ளிக்கூடத்தில் பாடம் பயின்றவர்கள் ஜால்னா, பார்பானி, பூர்னா ஆகிய இடங்களில் வைத்த குண்டுகளால் மடிந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை உலகுக்கு பெரிதாகத் தெரிந்திடவில்லை, அவர்கள் வடித்த கண்ணீரும் அநாதைகளான குடும்பங்களும் குழந்தைகளும் கணவனை இழந்து விதவைகளான பெண்களும் நமது ஊடகங்களுக்குத் தெரிந்திடவில்லை. அதனால் உலகத்துக்கும் தெரிந்திடவில்லை. நமது ஊடகங்கள் அப்படி.

2006ஆம் ஆண்டு நந்தேத்தில் போட்ட திட்டம் வெற்றி பெற்றிடவில்லை என்றாலும் இந்துத்துவ தீவிரவாதிகள் மனம் தளர்ந்திடவில்லை. இது அவர்களின் நிரந்தர மனநிலை. 2007இல் ஒரு திட்டத்தை போட்டார்கள். மீண்டும் முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழ்ந்திடும் இடங்களில் குண்டு வைத்திட வேண்டும் முஸ்லிம்களைப் பிணங்களாக ஆக்கிட வேண்டும் பழியை அவர்கள் மீதே போட்டிட வேண்டும் என்பவையே திட்டம். இதற்காக பேக்கரி ஒன்றில் குண்டுகளை தயாரித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களின் தலைவிதி அவர்கள் குண்டு தயாரித்துக் கொண்டிருக்கும் போதே அது வெடித்துவிட்டது. இரண்டு இந்துத்துவ தீவிரவாதிகள் தடத்திலேயே இறந்தார்கள். இவர்கள், 2000-மே மாதத்தில் போன்ஸாலா இந்து இராணுவப்பள்ளியில் பயிற்சி எடுத்தவர்கள் என்பது பின்னர் கண்டு பிடிக்கப்பட்டது.

2000- மே மாதம் தரப்பட்ட, இந்த குண்டு வெடிப்பு பயிற்சியில் இவர்களுடன் இன்னும் 115 பேர் கலந்து கொண்டார்கள். ஆனால் அவர்களை இன்றளவும் காவல்துறையால் அடையாளம் கண்டிட இயலவில்லை (கண்டிட விரும்பவில்லை). காரணம் தீவிரவாதிகள் இந்துக்களாக இருந்தால் நம் நாட்டில் பின்பற்றப்படும் நெறிமுறையே வேறு. இதில் மிகவும் வருந்ததத்தக்க செய்தி என்னவெனில் இந்த போன்ஸாலா பள்ளியில் குண்டு தயாரிக்க பாடம் பயின்றவர்கள் சுதந்திரமாக நாடெங்கும் குண்டு வெடிப்புகளை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு குண்டு வெடிப்பிலும் அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு கொண்டிருக்கின்றார்கள். அந்தக் குடும்பங்கள் அலைகழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்துத்துவ தீவிரவாதிகளுக்கு கைது செய்யப்பட்டவுடன் பிணை கிடைத்து விடுகின்றது.

சாதனை 3

இந்துத்துவ தீவிரவாதிகளுக்கு அரசு அதிகாரிகளே வழங்கும் பயிற்சி

2001ஆம் ஆண்டு இந்த போன்ஸாலா இந்து இராணுவப்பள்ளி நாற்பது நாள் பயிற்சி முகாம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தது. இந்தப்பயிற்சி முகாமில், ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பைச் சார்ந்தவர்களும் பஜ்ரங்தள் என்ற தீவிரவாத அமைப்பைச் சார்ந்தவர்களும் கலந்து கொண்டார்கள். மொத்தமாக இதில் 115 பேர் கலந்து கொண்டார்கள். மராட்டிய மாநிலத்திலிருந்து மட்டும் 54 பேர் கலந்து கொண்டார்கள்.

பயிற்சி களத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ஆயுதங்களை கையாளுவது எப்படி என்றும் குண்டு தயாரிப்பது எப்படி என்றும் குண்டுகளை வெடிக்கச் செய்வது எப்படி என்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதில் நெஞ்சை உலுக்கும் செய்தி என்னவெனில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சார்ந்தவர்களுக்கும் பஜ்ரங்தளம் என்ற  அமைப்பை சார்ந்தவர்களுக்கும் இந்த பயிற்சிகளை வழங்கியவர்கள் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள், (இப்போதும்) பணியிலிருக்கும் அதிகாரிகள்,. ஓய்வு பெற்ற மூத்த மத்திய உளவுத்துறை அதிகாரிகள் ஆகியோராவர்.

இராணுவ அதிகாரிகளும் மத்திய உளவுத்துறை அதிகாரிகளும் முஸ்லிம்கள் வாழ்ந்திடும் பகுதிகளில் குண்டுவைக்கும் கும்பல்களுக்கு பயிற்சி வழங்குகிறார்கள் என்றால் இவர்கள் பணிகாலங்களில் எத்தகைய மனநிலையோடு பணியாற்றி இருப்பார்கள்? முஸ்லிம்களிடம் எப்படி நடந்திருப்பார்கள்?

இதனை மூத்த காவல்துறை அதிகாரி எஸ்.எம். முஷ்ரிஃப் அவர்கள் தனது ஆய்வு நூலாகிய“Who Killed Karkare” என்ற நூலில் தெளிவுபடுத்தினார்கள். இப்போது மனிதநேய எழுத்தாளர் சுபாஷ் கட்டாடி அவர்கள் தொடர்ந்து மக்கள் மன்றத்தில் இந்த உண்மைகளைச் சொல்லி வருகின்றார்கள். ஆனால் அரசு எந்த நடவடிக்கையையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

சாதனை 4

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியும் போன்ஸாலாவும்

சுதந்திர இந்தியாவின் கீர்த்திக்கும் கித்தாப்பிற்கும் உரியவர் தேசத்தந்தை “மஹாத்மா காந்தி”. அவரை கொலைச் செய்தவர் நாதுராம் கோட்சே! இவர் மராட்டிய மாநிலத்தின் ஒரு முக்கிய நகரமான பூனாவைச் சார்ந்தவர்.

ஒரு கோட்சேவைத் தந்ததோடு நின்றுவிடவில்லை. பல தேசத் துரோகிகளைத் தந்திருக்கிறது பூனா. மும்பைத்தாக்குதல் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் குண்டுகளை வெடிக்கச் செய்து அப்பாவி முஸ்லிம்களைக் கொலை செய்தவர் இராணுவத் தளபதி புரோகித். இவர் அபிநவ் பாரத்தின் பணிகளை லாவகமாக நிறைவேற்றிட தேர்ந்தெடுத்திட்ட தலைமையகம் பூனாதான்.

இந்த பூனாவின் புரோகித்-ஐ தயாரித்து தந்ததும் நமது போன்ஸாலா இந்து இராணுவப் பள்ளித்தான்.

ஆமாம் நமது இராணுவத்தில் “short Service Commission” என்ற அடிப்படையில் இளைஞர்கள் சில பலரை தேர்ந்தெடுத்து இராணுவப் பயிற்சிகளைத் தருவார்கள். பிறகு சில காலம் இராணுவத்தில் பயன்படுத்துவார்கள். பின்னர் பிரித்து விட்டு விடுவார்கள். முடிந்தால், அதே இராணுவப் பணியில் தொடரலாம். இல்லையேல் வேறுபடிப்புகள், பள்ளிகள் இவற்றைத் தேடலாம். இந்த அடிப்படையில் அரசு ஆள் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, நமது இராணுவத்தளபதி புரோகித் இதில் தன்னையும் இணைத்துக் கொண்டார். அதற்கான தயாரிப்புகளுக்காக அவர் தன்னை இணைத்துக் கொண்டது, போன்சாலா இராணுவப் பள்ளிதான். இங்கேதான் அவர் தனது வாலிப வயதில் இந்துத் தீவிரவாதத்தைக் கற்றார். (ஆதாரம் Shubash Gatar in Milli Gazettee date: 1-15/April-2012)

அதன் பின்னர் 1993 இதே போன்ஸாலா இந்து இராணுவப் பள்ளியில் பெப்ருவரி மாதம் 20ஆம் நாள் 1993) தொடங்கி நடந்த குண்டுசெய்யும் பயிற்சி அதைவெடிக்கச் செய்யும் பயிற்சி, குண்டு தயாரிக்க ஏனையவர்களுக்குப் பயிற்சி தரும் பயிற்சி ஆகிய அனைத்துப் பயிற்சிகளையும் பெற்றவர்களில் புரோகித் ஒருவர்.



மேலே நாம் சொன்ன 1993இல் தீவிரவாத பயிற்சி எடுத்தவர்களின் பட்டியல் ஒன்றை போன்ஸாலா இந்து இராணுவப் பயிற்சி பள்ளி பாதுகாப்பாக வைத்து வருகிறது. இந்தப்பட்டியலில் புரோகித்-இன் பெயர் இடம் பெற்றதை சுபாஷ் கட்டேடார் அவர்கள் பார்த்துள்ளார்கள். இதனை அவர் தான் அண்மையில் மில்லி கெஜட்-இல் எழுதிய கட்டுரையில் விவரித்துள்ளார்கள். (Milli Gazettee date: 1-15/April-2012)

சாதனை:5

போன்ஸாலா இந்து இராணுவப் பள்ளிக்கூடம் பெற்றெடுத்த பிள்ளைகள்

போன்ஸாலா இந்து இராணுவப் பள்ளியைப் பார்த்த பல இந்துத்துவவாதிகள் குறிப்பாக (இராணுவத்தில் பலர் போற்றும் இந்துத்துவ தீவிரவாதிகள்) சில முதலமைச்சர்கள் இவர்களெல்லாம் ஊக்கமும் உற்சாகமும் பெற்றுள்ளார்கள். அது போன்ற இந்து இராணுவப் பள்ளியைத் தாங்களும் தொடங்கிட வேண்டும் என விரும்பி முன் வந்துள்ளார்கள்.

இந்த விருப்பத்தை நமது இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் உடனேயே செயல்படுத்திடவும் முன் வந்துள்ளார். அவர் தான் கலோனல் (தளபதி) ஜெயந்த் சிட்டாலாட் (Col. Jayanth Chitalad). இவர் நமது இராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போதே இந்துத்துவ தீவிரவாதிகளோடு போதிய அளவு தொடர்பு வைத்திருந்தார். இதனால் அவருக்கு நிரம்பவே வருமானம் வந்தது. இதைக் கொண்டு தனக்கென ஒரு பெரிய பங்களாவை பூனாவில் கட்டிக் கொண்டார்.

தான் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றதும் இந்த பங்களாவிலேயே ஓர் இந்து இராணுவப் பள்ளியைத் தொடங்கினார். அதன் பெயர் மகாராஷ்டிரா மிலிட்டரி ஃபவுண்டேஷன் (MMF- Maharashtra Military Foundation). இந்த இந்து இராணுவப்பள்ளியில் பயிற்சி பெற்ற 1000 பேர் (ஆயிரம் பேர்) முப்படைகளிலும் பணியாற்றிக் கொண்டிருப்பதாக ஜெயந்த் சிற்றாலாட் கூறியுள்ளார்.

இந்தச் செய்தி அவர் “அவுட்லுக்” என்ற ஆங்கிலப் பத்திரிக்கைக்கு கொடுத்தப் பேட்டியில் வெளிவந்துள்ளது. (Source: Outlook Godse’s War Nov-17 2008) இதனை “இந்தியன் எக்ஸ்பிரஸ்” என்ற பத்திரிக்கை தனது “ஆன்லைன்” பதிப்பில் வெளியிட்டிருந்தது.

ஆயிரம் இந்துத்துவவாதிகளை முப்படைகளில் திணித்து விட்டதாகப் பெருமைபடும் ஜெயந்த் சிற்றாலாட் “அவர்கள் என்னால் மூளை சலவைச் செய்யப்பட்டவர்கள். அவர்கள் இந்துத்துவா இந்துராஷ்டிரம் இவற்றிற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்” எனக் கர்ஜிக்கின்றார். இதன் பொருள் இராணுவத்தின் ஒரு பகுதியினர் இவருடைய அதாவது ஜெயந்த் சிற்றாலாட்-இன் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றார்கள்.

இந்த (NMF) இந்து இராணுவப் பள்ளியிலும் பாடம் பயின்றவர்களில் ஒருவர் புரோகித் என்பது கவனிக்கத்தக்கது.

சாதனை எண்:6

இந்துத்துவ தற்கொலை படைகளின் தயாரிப்பு

எங்கள் “போன்ஸாலா மிலிட்டரி பள்ளியில் பாடம் பயின்றவர்களில் 1000 பேர் தற்கொலை தாக்குதல்களுக்குத் தயாராக இருக்கின்றார்கள். அவர்களில் இரண்டு பேர் காவல் துறையிடம் சிக்கிக் கொண்டார்கள். எஞ்சியோர் மிகவும் அழகாகப் பணியாற்றிக் கொண்டிருக் கின்றார்கள்” எனப் பெருமைப்பட கூறிவருகின்றார் போன்சாலா இந்து இராணுவப் பள்ளியின் தலைமை கமாண்டர் (Principal Commander) S.ரெய்க்கர். ஆமாம் போன்சாலா இந்து இராணுவப் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு முதன்மை கமாண்டர் என்று தான் பெயர் (Source: Shubash Gatade Millitarising minds Hinduvaising Nation))

இந்த 1000 தற்கொலை படையினரும் நாட்டில் என்ன செய்து கொண்டி ருக்கின்றார்கள் என்பதை நாம் தெளிவாக யூகித்துவிடலாம்.முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் இடங்களில் தாம் இவர்கள் குண்டுகளை வைக்கின்றார்கள். கூட்டத்திற்குள் புகுந்து குண்டுகளை வைத்திடும் போது, குண்டுகள் வெடிக்கும், அதில் இவர்களும் அதாவது இந்தத் தற்கொலைப்படையினரும் இறந்து விடுகிறார்கள்.

மராட்டிய மாநிலம் நந்தேத்-க்குப் பக்கத்திலுள்ள ஜால்னா, பூர்னா, பார்பானி போன்ற இடங்களில் வெள்ளிக்கிழமை ஜும்மாக்களின் போதுதான் குண்டுகளை வெடிக்கச் செய்தார்கள். இதற்காக இவர்கள் ஒட்டுத் தாடிகளை வைத்துச் சென்றார்கள். முஸ்லிம்களைப் போல் ஜுப்பா அணிந்திருப்பார்கள். இதற்கான உடைகள் இவர்களுக்குத் தாராளமாக வாங்கித் தரப்படுகின்றன.

இப்படித்தான் நந்தேதில், குண்டு செய்யுமிடத்தில் ஜுப்பாவும், ஒட்டுத்தாடியும் சீக்கிய தாடியும், தலைப் பாகையும் கிடைக்கப்பெற்றன.
மாலேகானில் இந்துத்துவ தீவிரவாதிகள் இரண்டு முறை குண்டு வைத்தார்கள். 2006இல் ஒரு முறையும் 2008இல் ஒரு முறையும் (குண்டு வைத்தார்கள்).

2006இல் குண்டு வைடித்தபோது முஸ்லிம்கள் பிணங்களாய் எங்கும் பரவிக் கிடந்தார்கள். இந்தப் பிணங்களை அகற்றிடும் பணியில் காவல் துறையினரும், முஸ்லிம்களும் ஈடுபட்டிருந்தனர். ஒரு முஸ்லிம் டெய்வர் பல பிணங்களை அகற்றுவதில் உதவி செய்தார். அவர் ஓர் பிணத்தைத் தூக்கிடும் போது ஓர் பிணத்திலிருந்து தாடி “பொத்தென்று” கீழே வீழ்ந்தது. அவர் அந்த தாடியையும் அந்தப் பிணத்தையும் எடுத்துக்கொண்டு போய் ஓர் காவல்துறை ஆய்வாளரிடம் தந்தார். அந்தக் காவல் துறை ஆய்வாளர். அந்தப் பிணத்தையும், அதிலிருந்து கழன்றுவந்த ஒட்டுத் தாடியையும் காணமலாக்கி விட்டார். இன்றளவும் இதுபற்றிய தகவல்கள் வெளிவரவில்லை.

இந்த ஒட்டுத் தாடி இந்த போன்ஸாலா பாடசாலையில் பாடம் பயின்ற தற்கொலை படைக்குச் சொந்தமானது தான். ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பில் மீனா என்ற பெண் இந்து தற்கொலை வீராங்கனையைச் சந்தித்தோம்.

குண்டு வெடிப்பில் ஈடுபட்ட பெண்ணொருத்தி (பெயர் மீனா) புதிய சைக்கிள் ஒன்றை ஒரு ரிக்ஷாவில் ஏற்றிடச் சொன்னாள் ரிக்ஷாகாரன் மறுத்து விட்டார். மீனா பெண் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகின்றேன் எனச் சொன்னாள். சைக்கிளை ஏற்றிச் சென்றிடும் போதே அது வெடித்து விட்டது. அதில் ரிக்ஷா ஒட்டுநர் காயம்பட்டார். மரணகாயங்கள். அவரும் இந்த மீனா பெண்ணைப்பற்றி சொல்லிக் கொண்டே இருந்தார். ஆனால் யாரும் அதைக்கண்டு கொள்ளவில்லை. தான் சைக்கிளில் கொண்டு செல்லும் குண்டு வெடிக்கும். அதில் நாம் சிக்கிக் கொள்வோம் “சாவோம்” எனத் தெரிந்து கொண்டே மீனா அந்த சைக்கிள் வெடிகுண்டை கொண்டு சென்றார். இவரும் இந்த தற்கொலை படையைச் சார்ந்தவர் தாம். ஆக ஸி.ஷி.ரெய்கர் சொல்லும் இந்து இராணுவப்பள்ளி படையினர் தாராளமாகப் சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இத்துணை பகிரங்கமான அறிவிப்புக்க ளோடும், முறையான பயிற்சிகளோடும் இந்துத்துவ தீவிரவாதம் வளர்ந்து கொண்டி ருக்கின்றது கண்டு கொள்வார் எவருமில்லை. அரசு அடுத்து எந்த அப்பாவி முஸ்லிமை தீவிரவாதியாகக் காட்டலாம் என்பதிலேயே குறியாக இருக்கின்றது.

சாதனை எண்.7

இதர மாநிலங்களில் பரவல்

போன்ஸாலா இராணுவப்பள்ளி முதலில் நாக்பூரில் 65 ஹெக்டேரில் தொடங்கப் பெற்றது. பின்னர் ‘நாசிக்’ இல் கிளை ஒன்றை தொடங்கியது இதன் பயிற்சி வெற்றி இவற்றால் கவரப்பெற்ற இதர மாநிலங்கள் இதுபோன்ற இந்து இராணுவப்பள்ளியைத் தொடங்கிட முன்வந்துள்ளன.
குஜராத், மத்திய பிரதேசம், உத்தர்காண்ட் ஆகிய மாநிலங்கள் இந்துத்துவ இராணுவப் பள்ளியைத் தொடங்கிட இருக்கின்றன.

இவை அனைத்தும் இப்போது பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியின் கீழிருக்கின்றன.

சாதனை:8

போன்ஸாலா இந்து இராணுவப் பள்ளியின் புதிய பயிற்சிகள்.

1994ஆம் ஆண்டில் போன்ஸாலா சாதனை பவுண்டேஷன் Bhonsala Adventure Foundation என்றொன்றை தொடங்கினார்கள். இதில் சாதனைகளைச் செய்து சாதிப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதில் சிறுபான்மையினரைக் கொலை செய்யும் சாதனை தான் பிரதானம். அதேபோல் மனித ஆளுமைப்பற்றிய வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. Personality Development Course : (PDC)

இராம்தீஸ்:

மாணவர்களின் கோடைகாலங்களில் சிறப்பு இராணுவப் பயிற்சிகள் வழங்கப் படுகின்றன. இங்கே பயிற்சி பெற்றுச் செல்பவர்களுக்கு “இராம்தீஸ்” என்றொரு சிறப்புப் பட்டத்தையும் வழங்குகின்றார்கள்.

போன்ஸாலா இந்து இராணுவப் பள்ளியில் பாடம் பயின்ற இராணுவ அதிகாரிகள்:

பின்வரும் இராணுவ அதிகாரிகள் தாங்கள் இந்து இராணுவப் பள்ளியில் பாடம் பயின்றதாக பெருமைப் படுகின்றார்கள். 1. பரம்வீர் சக்கர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) ஒய்.டி. சகாராபுத் 2.பரம்வீர் சக்கர் (ஓய்வு) விரகாஷ் கிக்கூலி, விர்விமானி, (ஓய்வு) எஸ்.எம்.கற்றாடி, வி.எம்.கேஜர் பண்டிட்ராவ், ஸ்ரீ வி.ஜி.பாக்ரீ

போன்ஸாலா இந்து இராணுவப் பள்ளியில் பாடம் பயின்ற காங்கிரஸ் அமைச்சர்கள் :

மாண்புமிகு வசந்த் சேத்- முன்னாள் மத்திய மந்திரி, ஒரு காங்கிரஸ் தலைவர்,ஸ்ரீவினாயக் ராவ் பாட்டில்- முன்னாள் மராட்டிய மாநில அமைச்சர்.

விருதுகள்:

தங்கள் பள்ளியில் பாடம் பயின்று இந்துத்துவாவிற்கு சிறப்பாகப் பணியாற்றுபவர்களுக்கு விருதுகளை வழங்கும் பழக்கங்களையும் ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர். இந்த விருதுகள், “போன்ஸாலா பூஷன்” என வழங்கப் படுகின்றன.

இப்படி இந்துத் தீவிரவாதத்தை வளர்த்து வரும் இந்தப் பாடசாலையை இழுத்து மூட வேண்டும் என்றொரு கோரிக்கையை நீண்ட நாள்களாவே கம்யூனினிஸ்ட் கட்சிகள், வைகறை வெளிச்சம், மில்லி கெசட் போன்ற பத்திரிக்கைகள் வைத்து வருகின்றன. ஆனால் அரசு இதனை கண்டு கொள்ளவில்லை. மாறாக உற்சாகம் தருகின்றது.

இந்த இந்துத்தீவிரவாத பயிற்சிப் பள்ளியை இழுத்து மூடுவதுடன், இந்த விவகாரம் முடிந்து விடாது. இதில் இன்னும் பல நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. அவை

1. இந்த இந்து இராணுவப் பள்ளியிலும் மகாராஷ்டிரா மிலிட்டரி பவுன்டேஷனிலும் பயின்றவர்கள், எத்தனை பேர் நமது முப்படைகளிலும் ஊடுருவி உள்ளார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டும். அவர்கள் உடனேயே வெளியேற்றப்பட வேண்டும்.

2. 1000 தற்கொலை படைகளில் இரண்டு பேர் தவிர எஞ்சியோர் என்னென்ன செய்து கொண்டிருக் கின்றார்கள் என்பது கண்டறியப் படவேண்டும்.

3. இந்தத் தற்கொலை படையில் குண்டு வைக்கும் போது இறந்தவர்கள் போக எஞ்சி இருப்பவர்கள் எத்தனை பேரை உருவாக்கி இருக்கின்றார்களோ அத்தனை பேரும் கைது செய்யப்பட்டு, இயங்கவிடாமல் தடுத்திட வேண்டும். இவர்கள் நடத்திய குண்டு வெடிப்புகளில் கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் நிபந்தனை இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும். இப்படி நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.

 - எம்.ஜி.எம். 
( Sources : Subhash Gatader / Milli Gazette: 1-15 April 2012/ Outlook Nov.17.2008 IEX : 16 Nov 2002, PTI : Online : Nov: 15,2002)