இராணுவத்தை இந்து
மயமாக்கிடும் கல்விக்கூடங்களுக்கு போன்சாலா இந்து இராணுவப் பள்ளிகள் எனப் பெயர்
1937 இல் மாராட்டிய மாநிலம்
நாக்பூரில் நிறுவப்பட்ட இந்தக் கொலை பாதக பயிற்சிக் கூடத்திற்கு இந்த ஆண்டில்
75ஆம் அகவை நிறைவு பெறுகின்றது. இதற்கான கோலாகலமான விழாக்கள் எங்கணும் நடைபெற்று வருகின்றன.
இந்தக் கொலை விளையாட்டைக்
கற்றுத்தரும் கலாச்சாலைகள் இன்றளவும் பல கோடி முஸ்லிம்களின் உயிர்களையும் பலகோடி
கிருஸ்தவர்களின் உயிர்களையும் பல கோடி தலித்களின் உயிர்களையும்
குடித்திருக்கின்றன.
இந்த கொலை கலாசாலையை
சிந்தையில் முளைக்கச் செய்து செயற்களத்தில் செய்து காட்டிய செம்மல், மூஞ்ஜே என்ற
சனாதனவாதிதான். நச்சு மூளைகளின் மையம் எனக் கருதப்படும் சித்பவன பார்ப்பனர்களில்
ஒருவர் இவர்.
யார் இந்த மூஞ்சே?
இவர் தான் இந்தியாவில்
வகுப்புவாதத்தையும் பின்னர் வகுப்பு வெறியையும், பின்னர் கொலை பாதகங்களையும்
செய்யும் அமைப்புகளின் தந்தை. இவரது கொலை வெறியை நாம் மேலே குறிப்பிட்டுள்ள மூஞ்சே
ஆவணங்களிலிருந்து தரப்பட்டுள்ள வரிகள் சுட்டிக்காட்டும்.
![]() |
மூஞ்சே சவார்க்கர் |
![]() |
மூஞ்சே |
இந்துமகா சபை என்ற
அமைப்பையும் பின்னர் சங்கப் பரிவாரத்தின் பிறப்பிடம் எனப் பேசப்படும் ஆர்.எஸ்.எஸ்
என்ற ராஷ்டிரிய ஸ்வயம் சேவா சங்கத்தையும் தோற்றுவித்தவர்.
இந்தியா விடுதலை பெற்ற
நாள்களில், முஸ்லிம்களுக்கும், இதர சிறுபான்மையினருக்கும் கிடைக்கவிருந்த அத்தனை
பாதுகாப்புகளையும், உரிமைகளையும் தட்டிப் பறித்தவர். அன்றைய உள்துறை அமைச்சர்
சர்தார் வல்லபாய் பட்டேலுடன் கைகோர்த்துக் கொண்டு அரசியல் சாசனம்
சிறுபான்மையினருக்கு வழங்கவிருந்த உரிமைகளை (இடஒதுக்கீடு உட்பட்ட உரிமைகளை)
வழிமறித்தவர்.
அரசியல் நிர்ணயச் சட்டப்
பிரிவுகள் 15, 16(4) ஆகியவை சிறுபான்மையினர் என்ற சொல்லுக்குப் பதிலாக
முஸ்லிம்கள், கிருஸ்தவர்கள் என்ற சொற்களையே பயன்படுத்திட இருந்தது. இதை
வழிமறித்தார்கள் பட்டேலும் மூஞ்சேவும்.
பின்னர் சிறுபான்மையினர்
என்ற பொது சொல்லாட்சியைப் பயன்படுத்திட முடிவு செய்யப்பட்டது. அதையும்
வழிமறித்தார்கள் இவர்கள். சமுதாய ரீதியாகவும் பொருளாதர ரீதியாகவும் பின்
தங்கியவர்கள் Socially and Economically Backward என்ற சொல்லாட்சியைப் புகுத்தினார்கள்.
இதனால் முஸ்லிம்கள் தங்களிடையே
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் எனச் சிலரை அடையாளப் படுத்திட ஜாதிகளைக்
கண்டுபிடிக்கும் பெரும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அந்த முஸ்லிம்கள்,
பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் எனத் தங்களைக் காட்டிக் கொண்டு அரசின் சலுகைகளை
எதிர் பார்க்கின்றார்கள். நமது சமுதாய தலைவர்களும் இன்ன ஜாதி எனக் குறிப்பிடுங்கள்.
அள்ளிக் கொட்டும் அரசு உதவிகளை எனக் கூறி இஸ்லாத்தில் இல்லாத ஜாதியத்திற்கு
முத்திரை குத்தினார்கள். இவர்களால் அரசியல் நிர்ணயச் சட்டத்தில் அன்று
புகுத்தப்பட்ட சொல்லாட்சியை இன்றளவும் மாற்றிட இயலவில்லை. இத்தனை
குழப்பங்களுக்கும் காரணம் அன்று அரசியல் நிர்ணயச்சட்டத்தை எழுதியபோது முறையான
சொல்லாட்சி இடம் பெறாமல் தடுத்த சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் மூஞ்சே ஆகியோர்
தாம்.
பாசிசத்தை அதன் கோட்டைக்கே
சென்று கற்றார் மூஞ்சே! இந்தியாவுக்குள் கொண்டு வந்தார் மூஞ்சே!
இந்துத்துவ சிந்தனையையும் அதனை சிறுபான்மையினரைக் கொலைசெய்யும்
இயந்திரமாகவும் ஆக்கிடும் எண்ணங்களைச் சுமந்த டாக்டர் மூஞ்சே, தன்னை இந்தியாவின்
விடுதலைப் போர் வீரர் எனக் காட்டிக் கொண்டார்.
உண்மையைச் சொன்னால்
அன்றைய நாட்களில் இந்துத்துவா தனக்குள் போர்த்திக் கொண்ட போர்வை சுதந்திரப்
போராட்டம். ஆனால் செய்ததெல்லாம் இந்தியாவுக்கு இரண்டகம். அதே போல் காங்கிரஸ்
கட்சியை இவர்கள் தங்கள் கைகளில் வைத்திருந் தார்கள். காங்கிரஸ் கட்சிக்குள் பண்டித
நேரு அவர்கள் சொன்னது நடக்கவில்லை மூஞ்சேயும், சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களும்
சொன்னதெல்லாம் நடந்தன.
எந்த அளவுக்கு
இவர்கள் காங்கிரசையும், விடுதலைப் போரையும் பயன்படுத்தினார்கள் என்றால் 1931-இல்
லண்டனில் நடந்த வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள செல்பவர்களில் தன்னையும் ஒருவராக
ஆக்கிக்கொண்டார் டாக்டர் மூஞ்சே.
லண்டன் வட்ட மேஜை
மாநாட்டுக்குச் செல்கின்றேன் என்ற சாக்கில், இவர் ஐரோப்பிய நாடுகளுக்கும் அவற்றுள்
குறிப்பாக இத்தாலிக்கும் சென்றார். இத்தாலிக்கு சென்றதன் நோக்கம் அங்கிருந்த
பாசிஸ்ட் சிக்னோர் முசோலினியைச் சந்தித்து பாசிசத்தை இந்தியாவுக்குக் கொண்டு
வருவதுதான்.
பாசிசம் என்பது ஒரு
படுகொலை பயங்கரவாதம், தங்கள் எதிரிகளை ஈவிரக்கமின்றி கொலை செய்து காட்டுமிராண்டி
தனத்தின் வழி தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்பவர்கள் பாசிஸ்டுகள்.
முசோலினி
இப்படித்தான் தனது எதிரிகளைக் கொலை செய்து இத்தாலியின் சர்வாதிகாரியாகத் தன்னை
ஆக்கிக் கொண்டான். முசோலினியின் முத்திரைகளுள் ஒன்று அவன் தன் எதிரிகளுக்கெதிராக
இளைஞர்களைத் தயார் செய்ய பல இராணுவப் பள்ளிக்கூடங்களை நடத்தினான். அவற்றில்
இளைஞர்களுக்குக் கற்றுத் தரப்படுவதெல்லாம் எதிரிகளுக்கெதிராக பொய்யும்,
புரட்டுகளுமே. எதிரிகளுக்கெதிராக இப்படிப் பொய்யையும், போலியையும் சொல்லி
இளைஞர்களின் மனங்களில் தீயை மூட்டிய பின் கைகளில் குரூர ஆயுதங்களைத் தந்து
கூட்டுக் கொலைகளை நடத்துவார்கள்.
இந்தப் பாசிசப் பள்ளிக்
கூடங்களுக்கு இத்தாலியில் முசோலினி வைத்த பெயர்: CENTRAL MILITARY SCHOOL OF
PHYSICAL EDUCATION: மத்திய உடற்பயிற்சி கல்வி இராணுவப்பள்ளி. இவை ACADEMY OF
PHYSICAL EDUCATION உடற்பயிற்சி கல்வியகத்தின் கீழ் இயங்கின.
![]() |
முசோலினி |
இத்தாலியின் பலீலியா என்ற
இடத்திலும், ஆன்காடிஷி என்ற இடத்திலும் இந்தக் கல்வி நிலையங்கள் இயங்கி வந்தன. வட்டமேஜை
மாநாட்டிற்கு செல்வதாகக் கூறிய மூஞ்சே இத்தாலியின் பாசிசத்தால் மிகவும்
கவரப்பட்டவர் இதனால் இத்தாலிக்குச் சென்று முசோலினியைச் சந்தித்தாரர். இந்த
சந்திப்பு மார்சு 19ஆம் நாள் 1931 மதியம் மூன்று மணிக்கு
நடந்தது. முசோலினியின் பாசிச அரசு மாளிகையான பலோசா வெளிபியாவில் இது நடந்தது.
இப்படி உலகின் படுகொலைப்
புகழ், முசோலினியைச் சந்தித்ததை டாக்டர் பி.எஸ்.மூஞ்சே தனது நாட்குறிப்பில்
மிகவும் லாவகமாகப் பதிமூன்று பக்கங்கள் எழுதி வைத்தார் அதில், நான் அவருடைய
அறைக்கு (முசோலினியின் அறைக்கு) வருகிறேன் என்றவுடன் அவர் எழுந்தார், சற்று முன்னே
நடந்து வந்து என்னை வரவேற்றார். நான் தான் டாக்டர் மூஞ்சே எனச் சொல்லிக் கொண்டு
அவருடன் கைக்குலுக்கிக் கொண்டேன். அவர் என்னைப்பற்றி முழுமையாகத் தெரிந்து
வைத்திருந்தார் போலும். என்னோடு அரைமணிநேரம் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அவர்
என்னிடம் “இராணுவப்பயிற்சி தரும் பள்ளிக் கூடங்களை நீங்கள் பார்த்தீர்களா?”
எனக்கேட்டார். அதற்குப் பதிலாக, “நான் மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி தருவதில்
ஆர்வம் உள்ளவன். ஆதலால் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளிலுள்ள
இராணுவக் கல்லூரிகளைச் சென்று பார்த்தேன். நான் இன்று காலையிலும் பிற்பகலும்
இங்குள்ள பாலீலா, பாசிச அமைப்பு, பாசிச கல்விக்கழகம் ஆகியவற்றப் பார்வை யிட்டேன்.
அவை என்னை வெகுவாகக் கவர்ந்தன. இத்தாலிக்கு இவை மிகவும் அவசியம். இவற்றில் எந்தத்
தவறுமில்லை. ஆனால் அடிக்கடி இந்த பாசிச அமைப்புகளையும் உங்களையும் பத்திரிகைகள்
இடித்து எழுதுவதைப் படித்திருக்கின்றேன்”. எனப் பதில் சொன்னேன்.
நான் சொல்லி முடித்ததும்
சிக்னோர் முஸோலினி என்னிடம், “இவைப் பற்றி உங்கள் கருத்தென்ன?” எனக்கேட்டார். நான்
சொன்னேன், “கனவானே! நான் இவற்றால் அலாதியாகக் கவரப் பட்டுள்ளேன். வளரும் ஒவ்வொரு
சமுதாயத்திற்கும், இதுபோன்ற அமைப்புகள் மிகவும் முக்கியம். இந்தியாவின் இராணுவ
வளர்ச்சிக்கு இது மிகவும் முக்கியம். நான் இதற்காக ஓர் அமைப்பை ஏற்கனவே
இந்தியாவில் தொடங்கி விட்டேன். இது என் மனதில் தனியாக உதித்தது. வாய்ப்புக்
கிடைத்தால் நான் இந்தியாவிலும், இங்கிலாந்திலும், பாலீலா பயிற்சி முகாம்
பற்றியும், பாசிச அமைப்புகள் பற்றியும் புகழ்ந்து பேசுவேன்.”
இதைச் செவிமடுத்த
சிக்னோர் முஸோலினி மிகவும் மகிழ்ச்சியடைந்தார். என்னிடம் “நன்றி! ஆனால் உங்கள்
நாட்டில் இது மிகவும் கடினம். உங்கள் முயற்சியில் நீங்கள் வெற்றி பெற
வாழ்த்துகின்றேன்” என்றார். இதைச் சொன்தும் நானும் எழுந்தேன். அவரும்
எழுந்தார்(Source : Economic and Political Weekly - January 22, 2000) இந்தப்
பின்னணியில் தான் நாக்பூரில் வீற்றிருக்கும் இந்து பாசிச பள்ளியைத் தொடங்கும் முன்
மத்திய இந்து இராணுவ சங்கத்தை டாக்டர் பி.எஸ்.மூஞ்சே தொடங்கினார்.
டாக்டர் மூஞ்சேயும்
ஹெட்கேவரும்
![]() |
ஹெட்கேவர் |
ஆர்.எஸ்.எஸ் என்ற
அமைப்பைத் தொடங்கியவர் என்ற பேச்சு வந்தாலே அதனைத் தொடங்கிய ஹெட்கேவர்தான் முன்
வருவார். அப்படி இருக்க எப்படி ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பைத் தொடங்கியவர் என
மூஞ்சேயை குறிப்பிடலாம் என்ற வினா எழும்.
உண்மையில் ஹெட்கேவருக்கு
எல்லா உதவிகளையும் செய்தவர் டாக்டர் மூஞ்சேதான். ஹெட்கேவரின் வரலாற்றை எழுதிய
க.பி.வி. தேஷ்பாண்டே, எஸ்.ஆர்.இராமசாமி ஆகியோர் இப்படிக் குறிப்பிட்டார்கள். “ஹெட்கேவரை
மூஞ்சேதான் தன் வீட்டில் வளர்த்தார். பின்னர் மூஞ்சேதான் ஹெட்கேவரை
கல்கத்தாவிலுள்ள தேசிய மருத்துவக்கல்லூரியில் படிக்க அனுப்பி வைத்தார். அங்குள்ள
ஒரு தீவிரவாத அமைப்புடன் தொடர்பை ஏற்படுத்துவது தான் அவரை மருத்துவக் கல்லூரிக்கு
அனுப்பியதன் நோக்கம்” ஆதாரம்: DR. HEDGEWER, THE EPOCH MAKER, By B.V.DESHPANDE.
AND S.R.RAMASAMY, SAHITHIYA SINDU; BAWGALORL, 1931 pages: 14-32 இதனால்
ஹெட்கேவரை உருவாக்கியவர் டாக்டர் மூஞ்சேதான் என்கிறார், ஆய்வாளர் மார்சியா
கேசலோரி. (ECONOMIC AND POLITICAL WEEKLY, JANYARY 22.2000)
போன்சாலா இந்து இராணுவப் பள்ளியின் இன்றைய சதிகள்
இந்து இளைஞர்களில்
பெரும்பாலும் திக்கற்றோர் வக்கற்றோர் இவர்களே இங்கு சேர்க்கப் படுகின்றார்கள் முஸ்லிம்களுக்கெதிராகவும்
சிறுபான்மையினருக்கெதிராகவும் வெறியூட்டப்படுகின்றார்கள். சிறுபான்மையினரை அழிக்க
வேண்டும் என இங்கே பாடம் சொல்லித் தரப்படுகின்றது. போதிய அளவுக்கு
வெறியூட்டிய பின் ஆயுத பயிற்சிகள் தரப்படுகின்றன. இந்தப் பயிற்சிகளைத் தருபவர்கள்,
நமது இராணுவத்தில் பணியாற்றிடும் பயிற்சியாளர்கள் தாம். இராணுவத்திலிருந்து ஓய்வு
பெறுபவர்கள், இங்கே நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இந்த
இந்து இராணுவப்பள்ளியில் பயின்று வெற்றிபெறும், வெறியூட்டப் பட்ட மாணவர்கள்,
இராணுவத்தில் இணைக்கப்படுகின்றார்கள். இதன் மூலம் நமது இந்திய இராணுவம்
இந்துத்துவமயமாக்கப் படுகின்றது
.
![]() |
பிரசாந்த் புரோகித் |
2008 செப்டம்பர்
மாலேகான் குண்டு வெடிப்பு கபளீகரங்களில் பல உண்மைகள் உலகுக்குத் தெரிந்திட வந்தன.
அதில்தான் இராணுவ தளபதி பிரசாந்த் புரோகித் இன் தீவிரவாத சதுராட்டங்கள் நாட்டையே
உலுக்கி எடுத்தன. அவர் இராணுவத்தளபதி மட்டுமல்ல, அபிநவ் பாரத் என்ற தீவிரவாத அமைப்பினை
இயக்குபவரும் கூட என்பன தெரிய வந்தன. இதில் நடைபெற்ற ஆய்வுகளில் போன்ஸாலா
இந்து இராணுவப் பள்ளிதான், நாட்டில் நடந்த குண்டு வெடிப்புகளின் மையம் என்பது
தெரியவந்தது. இந்த வகையில் போன்ஸாலா இராணுவப் பள்ளியின் சாதனைகள் இப்படித்
தொடருகின்றன.
சாதனை 1
நந்தேத் குண்டுவெடிப்புகள்.
நந்தேத் என்பது
மராட்டிய மாநிலத்திலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்று. இங்கே மொத்தம் எட்டு லட்சம்
மக்கள் வாழுகின்றார்கள். இவர்களில் ஐந்து லட்சம் இந்து பெருங்குடி மக்கள். மூன்று
லட்சம் முஸ்லிம்கள். இரண்டு லட்சம் சீக்கிய சகோதரர்களும் மற்ற சமுதாயத்தவர்களும்
வசிக்கிறார்கள். இந்த நந்தேத் பெருநகரில் வகுப்புக் கலவரம் ஒன்றை நிகழ்த்திட
திட்டம் போட்டார்கள் சங்கப் பரிவாரத்தினர். அத்திட்டத்தில், முஸ்லிம்கள்
பள்ளிவாசலில் அதிகமாகக் கூடும் வெள்ளிக்கிழமையில் குண்டு வெடிக்கச் செய்யவேண்டும்.
அடுத்த நாள் சீக்கியர்களின் வழிபாட்டுத்தலமாகிய குருத்துவாரா ஒன்றில் குண்டு
வெடிக்கச் செய்திட வேண்டும். இந்த இரு நிகழ்வுகளும், சீக்கிய அன்பர்களுக்கும்
முஸ்லிம்களுக்குமிடையில் ஒரு பெரும் மோதலை உருவாக்கும், மொத்தக் குழப்பத்தில் நாம்
குளிர் காயலாம் எனத் திட்டமிட்டிருந்தனர்.
இந்தத் திட்டத்தை
நிறைவேற்றிட அவர்களுக்கு அழகியதொரு வாய்ப்பும் கிடைத்தது. ஆமாம் சீக்கிய பெண்
ஒருத்தி ஒரு முஸ்லிமுடன் காதலில் வீழ்ந்தாள். இருவரும் நந்தேதை விட்டு ஓடி
விட்டார்கள். இது முஸ்லிம்களுக்கும் சீக்கியர்களுக்கும் இடையிலிருந்த பிணைப்பை
பகையாக மாற்றிட இருந்தது.
இந்நிலையில் பள்ளி
வாசல் ஒன்றில் குண்டு வெடித்தால் பழி சீக்கியர்கள் மேல் விழும். அடுத்த நாள்
குருத்துவாராவில் குண்டொன்று வெடித்தால் முஸ்லிம்கள் பழிக்குப்பழி செய்து
விட்டார்கள் என்ற எண்ணம் வலுக்கும். இரண்டு சமுதாயமும் இரத்த ஆற்றில் மிதக்கும்.
அதனால் உடனேயே இரண்டு பள்ளி வாசல்களிலும், ஒரு குருத்துவாராவிலும் குண்டுவைக்க
ஏற்பாடு செய்தார்கள். பரிவாரத்தின் முன்னாள் ஆர். எஸ்.எஸ் உறுப்பினர் லஷ்மன்
ராஜ்கொண்டுவார்கர் என்பவரின் வீட்டைத் தேர்ந்தெடுத்து அவசர அவசரமாகக் குண்டுகளைச்
செய்திட முயற்சி செய்தார்கள். இதில் அவ்வீட்டின் செந்தக்காரரான லஷ்சுமன் ராஜ்
கொண்டுவாரின் மகன் நரசும் பங்கெடுத்துக் கொண்டான்.
இந்தக் குண்டுகளைச்
செய்திடும் நுணுக்கங்கள் அவர்கள் 2000 ஆம் ஆண்டு போன்ஸாலா இந்து இராணுவப்
பள்ளியில் நடந்த 40 நாள் பயிற்சி முகாமில்தான் கற்றார்கள். அப்போது 40 பேருக்கு
குண்டு செய்வது எப்படி என்பது குறித்த குறிப்புகளும் வழங்கப்பட்டன. அந்தக்
குறிப்புகளைப் பார்த்தே குண்டுகளைச் செய்து கொண்டிருந்தார்கள்.
குண்டுகளை செய்வதில்
தேர்ச்சி பெற்ற ஹிம்மான் பான்சி, ராகுல் பாண்டே ஆகியோரும் நந்தேத் குண்டு
தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டார்கள். இவர்களுடன் 1. மாருதி கேஷவ்வாக், 2.யோகஹேஹ்
விதுல்கார் (தேஷ் பாண்டே) 3. குருராஜ் ஜெய்ராம் திப்திவார் 4. ராகுல் மனோகர் -
ஆகியோரும் ஈடுபட்டார்கள்.
குண்டுகளைப் பள்ளிவாசலில்
வைப்பது யார் என்பது முடிவு செய்யப்பட்டு, தேவையான ஜுப்பாவும், ஒட்டுத்தாடியும்
குல்லாவும் வாங்கி வைக்கப்பட்டுவிட்டன. அதே போல் குருத்துவாராவில் குண்டு வைப்பது
யார் என்பதும் முடிவு செய்யப் பட்டு, அதற்கான தலைப்பாகையும் தாடியும் வாங்கி
வைக்கப்பட்டிருந்தன.
திட்டம் முழுமையாக
நிறைவேறிட இருந்த நேரத்தில் தான் குண்டுகள் செய்து கொண்டிருக்கும் போதே (6 ஏப்ரல்
2006ல்) வெடித்து விட்டன. குண்டு வெடிப்பில் நரேஷ், ஹிமான்ஷி பான்சே ஆகிய இருவரும்
அங்கேயே சின்னாபின்னமாகிப் போனார்கள். எஞ்சியோர் காயம்பட்டு மருத்துவமனைகளில்
உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தந்த வாக்கு மூலத்தில் தான் இந்த
உண்மைகள் உலகுக்கு தெரிய வந்தன.
அவர்கள் இதற்கு முன்,
ஜால்னா எனுமிடத்தில் வெள்ளிக்கிழமை பள்ளி வாசலில் குண்டு வைத்ததிலும், பூர்னா
என்னுமிடத்தில் வெள்ளிக்கிழமை குண்டு வைத்ததிலும் பலநூறு முஸ்லிம்கள் இறந்தார்கள்.
இதே போல் பார்பானி எனுமிடத்திலுள்ள பள்ளிவாசலில் ஒரு வெள்ளிக்கிழமை குண்டு
வைத்தார்கள்.
ஆனால் அதிகமான
முஸ்லிம்கள் இறக்கவில்லை. இந்தக் குறையை நிறைவு செய்ய இதனால் அடுத்த வெள்ளிக்
கிழமை ஒரு பைக்கில் இரண்டு பேர் சென்று தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களில் பலரை
சுட்டுக்கொன்று விட்டு வந்து விட்டார்கள்.
இந்தத் துப்பாக்கி
பயிற்சியும் மூஞ்சேயின் இந்து இராணுவ பயிற்சி மையம் வழங்கியதுதான்.
போன்ஸாலா இராணுவப்பள்ளி சாதனை எண்.2
போன்ஸாலா இந்து
பள்ளிக்கூடத்தில் பாடம் பயின்றவர்கள் ஜால்னா, பார்பானி, பூர்னா ஆகிய இடங்களில்
வைத்த குண்டுகளால் மடிந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை உலகுக்கு பெரிதாகத் தெரிந்திடவில்லை,
அவர்கள் வடித்த கண்ணீரும் அநாதைகளான குடும்பங்களும் குழந்தைகளும் கணவனை இழந்து
விதவைகளான பெண்களும் நமது ஊடகங்களுக்குத் தெரிந்திடவில்லை. அதனால் உலகத்துக்கும்
தெரிந்திடவில்லை. நமது ஊடகங்கள் அப்படி.
2006ஆம் ஆண்டு நந்தேத்தில்
போட்ட திட்டம் வெற்றி பெற்றிடவில்லை என்றாலும் இந்துத்துவ தீவிரவாதிகள் மனம்
தளர்ந்திடவில்லை. இது அவர்களின் நிரந்தர மனநிலை. 2007இல் ஒரு திட்டத்தை
போட்டார்கள். மீண்டும் முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழ்ந்திடும் இடங்களில் குண்டு
வைத்திட வேண்டும் முஸ்லிம்களைப் பிணங்களாக ஆக்கிட வேண்டும் பழியை அவர்கள் மீதே
போட்டிட வேண்டும் என்பவையே திட்டம். இதற்காக பேக்கரி ஒன்றில் குண்டுகளை
தயாரித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களின் தலைவிதி அவர்கள் குண்டு
தயாரித்துக் கொண்டிருக்கும் போதே அது வெடித்துவிட்டது. இரண்டு இந்துத்துவ
தீவிரவாதிகள் தடத்திலேயே இறந்தார்கள். இவர்கள், 2000-மே மாதத்தில் போன்ஸாலா இந்து
இராணுவப்பள்ளியில் பயிற்சி எடுத்தவர்கள் என்பது பின்னர் கண்டு பிடிக்கப்பட்டது.
2000- மே மாதம் தரப்பட்ட,
இந்த குண்டு வெடிப்பு பயிற்சியில் இவர்களுடன் இன்னும் 115 பேர் கலந்து
கொண்டார்கள். ஆனால் அவர்களை இன்றளவும் காவல்துறையால் அடையாளம் கண்டிட இயலவில்லை
(கண்டிட விரும்பவில்லை). காரணம் தீவிரவாதிகள் இந்துக்களாக இருந்தால் நம் நாட்டில்
பின்பற்றப்படும் நெறிமுறையே வேறு. இதில் மிகவும் வருந்ததத்தக்க செய்தி என்னவெனில்
இந்த போன்ஸாலா பள்ளியில் குண்டு தயாரிக்க பாடம் பயின்றவர்கள் சுதந்திரமாக
நாடெங்கும் குண்டு வெடிப்புகளை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு குண்டு
வெடிப்பிலும் அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.
அந்தக் குடும்பங்கள் அலைகழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்துத்துவ
தீவிரவாதிகளுக்கு கைது செய்யப்பட்டவுடன் பிணை கிடைத்து விடுகின்றது.
சாதனை 3
இந்துத்துவ
தீவிரவாதிகளுக்கு அரசு அதிகாரிகளே வழங்கும் பயிற்சி
2001ஆம் ஆண்டு இந்த
போன்ஸாலா இந்து இராணுவப்பள்ளி நாற்பது நாள் பயிற்சி முகாம் ஒன்றிற்கு ஏற்பாடு
செய்தது. இந்தப்பயிற்சி முகாமில், ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பைச் சார்ந்தவர்களும்
பஜ்ரங்தள் என்ற தீவிரவாத அமைப்பைச் சார்ந்தவர்களும் கலந்து கொண்டார்கள். மொத்தமாக
இதில் 115 பேர் கலந்து கொண்டார்கள். மராட்டிய மாநிலத்திலிருந்து மட்டும் 54 பேர்
கலந்து கொண்டார்கள்.
பயிற்சி களத்தில் கலந்து
கொண்டவர்களுக்கு ஆயுதங்களை கையாளுவது எப்படி என்றும் குண்டு தயாரிப்பது எப்படி
என்றும் குண்டுகளை வெடிக்கச் செய்வது எப்படி என்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இதில் நெஞ்சை உலுக்கும் செய்தி என்னவெனில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை
சார்ந்தவர்களுக்கும் பஜ்ரங்தளம் என்ற
அமைப்பை சார்ந்தவர்களுக்கும் இந்த பயிற்சிகளை வழங்கியவர்கள் ஓய்வு பெற்ற இராணுவ
அதிகாரிகள், (இப்போதும்) பணியிலிருக்கும் அதிகாரிகள்,. ஓய்வு பெற்ற மூத்த மத்திய
உளவுத்துறை அதிகாரிகள் ஆகியோராவர்.
இராணுவ அதிகாரிகளும் மத்திய
உளவுத்துறை அதிகாரிகளும் முஸ்லிம்கள் வாழ்ந்திடும் பகுதிகளில் குண்டுவைக்கும்
கும்பல்களுக்கு பயிற்சி வழங்குகிறார்கள் என்றால் இவர்கள் பணிகாலங்களில் எத்தகைய
மனநிலையோடு பணியாற்றி இருப்பார்கள்? முஸ்லிம்களிடம் எப்படி நடந்திருப்பார்கள்?
இதனை மூத்த காவல்துறை
அதிகாரி எஸ்.எம். முஷ்ரிஃப் அவர்கள் தனது ஆய்வு நூலாகிய“Who Killed
Karkare” என்ற நூலில் தெளிவுபடுத்தினார்கள். இப்போது மனிதநேய எழுத்தாளர்
சுபாஷ் கட்டாடி அவர்கள் தொடர்ந்து மக்கள் மன்றத்தில் இந்த உண்மைகளைச் சொல்லி
வருகின்றார்கள். ஆனால் அரசு எந்த நடவடிக்கையையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
சாதனை 4
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியும் போன்ஸாலாவும்
சுதந்திர இந்தியாவின்
கீர்த்திக்கும் கித்தாப்பிற்கும் உரியவர் தேசத்தந்தை “மஹாத்மா காந்தி”. அவரை
கொலைச் செய்தவர் நாதுராம் கோட்சே! இவர் மராட்டிய மாநிலத்தின் ஒரு முக்கிய நகரமான
பூனாவைச் சார்ந்தவர்.
ஒரு கோட்சேவைத் தந்ததோடு
நின்றுவிடவில்லை. பல தேசத் துரோகிகளைத் தந்திருக்கிறது பூனா. மும்பைத்தாக்குதல்
மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் குண்டுகளை வெடிக்கச் செய்து அப்பாவி
முஸ்லிம்களைக் கொலை செய்தவர் இராணுவத் தளபதி புரோகித். இவர் அபிநவ் பாரத்தின்
பணிகளை லாவகமாக நிறைவேற்றிட தேர்ந்தெடுத்திட்ட தலைமையகம் பூனாதான்.
இந்த பூனாவின் புரோகித்-ஐ
தயாரித்து தந்ததும் நமது போன்ஸாலா இந்து இராணுவப் பள்ளித்தான்.
ஆமாம் நமது இராணுவத்தில்
“short Service Commission” என்ற அடிப்படையில் இளைஞர்கள் சில பலரை தேர்ந்தெடுத்து
இராணுவப் பயிற்சிகளைத் தருவார்கள். பிறகு சில காலம் இராணுவத்தில் பயன்படுத்துவார்கள்.
பின்னர் பிரித்து விட்டு விடுவார்கள். முடிந்தால், அதே இராணுவப் பணியில் தொடரலாம்.
இல்லையேல் வேறுபடிப்புகள், பள்ளிகள் இவற்றைத் தேடலாம். இந்த அடிப்படையில் அரசு ஆள்
எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, நமது இராணுவத்தளபதி புரோகித் இதில் தன்னையும் இணைத்துக்
கொண்டார். அதற்கான தயாரிப்புகளுக்காக அவர் தன்னை இணைத்துக் கொண்டது, போன்சாலா
இராணுவப் பள்ளிதான். இங்கேதான் அவர் தனது வாலிப வயதில் இந்துத் தீவிரவாதத்தைக்
கற்றார். (ஆதாரம் Shubash Gatar in Milli Gazettee date: 1-15/April-2012)
அதன் பின்னர் 1993 இதே போன்ஸாலா
இந்து இராணுவப் பள்ளியில் பெப்ருவரி மாதம் 20ஆம் நாள் 1993) தொடங்கி நடந்த
குண்டுசெய்யும் பயிற்சி அதைவெடிக்கச் செய்யும் பயிற்சி, குண்டு தயாரிக்க
ஏனையவர்களுக்குப் பயிற்சி தரும் பயிற்சி ஆகிய அனைத்துப் பயிற்சிகளையும்
பெற்றவர்களில் புரோகித் ஒருவர்.
மேலே நாம் சொன்ன 1993இல்
தீவிரவாத பயிற்சி எடுத்தவர்களின் பட்டியல் ஒன்றை போன்ஸாலா இந்து இராணுவப் பயிற்சி
பள்ளி பாதுகாப்பாக வைத்து வருகிறது. இந்தப்பட்டியலில் புரோகித்-இன் பெயர் இடம்
பெற்றதை சுபாஷ் கட்டேடார் அவர்கள் பார்த்துள்ளார்கள். இதனை அவர் தான் அண்மையில்
மில்லி கெஜட்-இல் எழுதிய கட்டுரையில் விவரித்துள்ளார்கள். (Milli Gazettee date:
1-15/April-2012)
சாதனை:5
போன்ஸாலா இந்து இராணுவப் பள்ளிக்கூடம் பெற்றெடுத்த பிள்ளைகள்
போன்ஸாலா இந்து இராணுவப்
பள்ளியைப் பார்த்த பல இந்துத்துவவாதிகள் குறிப்பாக (இராணுவத்தில் பலர் போற்றும்
இந்துத்துவ தீவிரவாதிகள்) சில முதலமைச்சர்கள் இவர்களெல்லாம் ஊக்கமும் உற்சாகமும்
பெற்றுள்ளார்கள். அது போன்ற இந்து இராணுவப் பள்ளியைத் தாங்களும் தொடங்கிட வேண்டும்
என விரும்பி முன் வந்துள்ளார்கள்.
இந்த விருப்பத்தை நமது
இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் உடனேயே செயல்படுத்திடவும் முன்
வந்துள்ளார். அவர் தான் கலோனல் (தளபதி) ஜெயந்த் சிட்டாலாட் (Col. Jayanth
Chitalad). இவர் நமது இராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போதே இந்துத்துவ
தீவிரவாதிகளோடு போதிய அளவு தொடர்பு வைத்திருந்தார். இதனால் அவருக்கு நிரம்பவே
வருமானம் வந்தது. இதைக் கொண்டு தனக்கென ஒரு பெரிய பங்களாவை பூனாவில் கட்டிக்
கொண்டார்.
தான் இராணுவத்திலிருந்து
ஓய்வு பெற்றதும் இந்த பங்களாவிலேயே ஓர் இந்து இராணுவப் பள்ளியைத் தொடங்கினார்.
அதன் பெயர் மகாராஷ்டிரா மிலிட்டரி ஃபவுண்டேஷன் (MMF- Maharashtra Military
Foundation). இந்த இந்து இராணுவப்பள்ளியில் பயிற்சி பெற்ற 1000 பேர் (ஆயிரம் பேர்)
முப்படைகளிலும் பணியாற்றிக் கொண்டிருப்பதாக ஜெயந்த் சிற்றாலாட்
கூறியுள்ளார்.
இந்தச் செய்தி அவர்
“அவுட்லுக்” என்ற ஆங்கிலப் பத்திரிக்கைக்கு கொடுத்தப் பேட்டியில் வெளிவந்துள்ளது.
(Source: Outlook Godse’s War Nov-17 2008) இதனை “இந்தியன் எக்ஸ்பிரஸ்”
என்ற பத்திரிக்கை தனது “ஆன்லைன்” பதிப்பில் வெளியிட்டிருந்தது.
ஆயிரம் இந்துத்துவவாதிகளை
முப்படைகளில் திணித்து விட்டதாகப் பெருமைபடும் ஜெயந்த் சிற்றாலாட் “அவர்கள்
என்னால் மூளை சலவைச் செய்யப்பட்டவர்கள். அவர்கள் இந்துத்துவா இந்துராஷ்டிரம்
இவற்றிற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்” எனக் கர்ஜிக்கின்றார். இதன்
பொருள் இராணுவத்தின் ஒரு பகுதியினர் இவருடைய அதாவது ஜெயந்த் சிற்றாலாட்-இன்
கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றார்கள்.
இந்த (NMF) இந்து இராணுவப்
பள்ளியிலும் பாடம் பயின்றவர்களில் ஒருவர் புரோகித் என்பது கவனிக்கத்தக்கது.
சாதனை எண்:6
இந்துத்துவ தற்கொலை படைகளின் தயாரிப்பு

மராட்டிய மாநிலம்
நந்தேத்-க்குப் பக்கத்திலுள்ள ஜால்னா, பூர்னா, பார்பானி போன்ற இடங்களில்
வெள்ளிக்கிழமை ஜும்மாக்களின் போதுதான் குண்டுகளை வெடிக்கச் செய்தார்கள். இதற்காக
இவர்கள் ஒட்டுத் தாடிகளை வைத்துச் சென்றார்கள். முஸ்லிம்களைப் போல் ஜுப்பா
அணிந்திருப்பார்கள். இதற்கான உடைகள் இவர்களுக்குத் தாராளமாக வாங்கித்
தரப்படுகின்றன.
இப்படித்தான் நந்தேதில்,
குண்டு செய்யுமிடத்தில் ஜுப்பாவும், ஒட்டுத்தாடியும் சீக்கிய தாடியும், தலைப்
பாகையும் கிடைக்கப்பெற்றன.
மாலேகானில் இந்துத்துவ
தீவிரவாதிகள் இரண்டு முறை குண்டு வைத்தார்கள். 2006இல் ஒரு முறையும் 2008இல் ஒரு
முறையும் (குண்டு வைத்தார்கள்).
2006இல் குண்டு வைடித்தபோது
முஸ்லிம்கள் பிணங்களாய் எங்கும் பரவிக் கிடந்தார்கள். இந்தப் பிணங்களை அகற்றிடும்
பணியில் காவல் துறையினரும், முஸ்லிம்களும் ஈடுபட்டிருந்தனர். ஒரு முஸ்லிம் டெய்வர்
பல பிணங்களை அகற்றுவதில் உதவி செய்தார். அவர் ஓர் பிணத்தைத் தூக்கிடும் போது ஓர்
பிணத்திலிருந்து தாடி “பொத்தென்று” கீழே வீழ்ந்தது. அவர் அந்த தாடியையும் அந்தப்
பிணத்தையும் எடுத்துக்கொண்டு போய் ஓர் காவல்துறை ஆய்வாளரிடம் தந்தார். அந்தக்
காவல் துறை ஆய்வாளர். அந்தப் பிணத்தையும், அதிலிருந்து கழன்றுவந்த ஒட்டுத்
தாடியையும் காணமலாக்கி விட்டார். இன்றளவும் இதுபற்றிய தகவல்கள் வெளிவரவில்லை.
இந்த ஒட்டுத் தாடி இந்த
போன்ஸாலா பாடசாலையில் பாடம் பயின்ற தற்கொலை படைக்குச் சொந்தமானது தான். ஜெய்ப்பூர்
குண்டு வெடிப்பில் மீனா என்ற பெண் இந்து தற்கொலை வீராங்கனையைச் சந்தித்தோம்.

இத்துணை பகிரங்கமான
அறிவிப்புக்க ளோடும், முறையான பயிற்சிகளோடும் இந்துத்துவ தீவிரவாதம் வளர்ந்து
கொண்டி ருக்கின்றது கண்டு கொள்வார் எவருமில்லை. அரசு அடுத்து எந்த அப்பாவி
முஸ்லிமை தீவிரவாதியாகக் காட்டலாம் என்பதிலேயே குறியாக இருக்கின்றது.
சாதனை எண்.7
இதர மாநிலங்களில் பரவல்
போன்ஸாலா இராணுவப்பள்ளி
முதலில் நாக்பூரில் 65 ஹெக்டேரில் தொடங்கப் பெற்றது. பின்னர் ‘நாசிக்’ இல் கிளை
ஒன்றை தொடங்கியது இதன் பயிற்சி வெற்றி இவற்றால் கவரப்பெற்ற இதர மாநிலங்கள்
இதுபோன்ற இந்து இராணுவப்பள்ளியைத் தொடங்கிட முன்வந்துள்ளன.
குஜராத், மத்திய
பிரதேசம், உத்தர்காண்ட் ஆகிய மாநிலங்கள் இந்துத்துவ இராணுவப் பள்ளியைத் தொடங்கிட
இருக்கின்றன.
இவை அனைத்தும்
இப்போது பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியின் கீழிருக்கின்றன.
சாதனை:8
போன்ஸாலா இந்து இராணுவப்
பள்ளியின் புதிய பயிற்சிகள்.
1994ஆம் ஆண்டில் போன்ஸாலா
சாதனை பவுண்டேஷன் Bhonsala Adventure Foundation என்றொன்றை தொடங்கினார்கள். இதில்
சாதனைகளைச் செய்து சாதிப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதில்
சிறுபான்மையினரைக் கொலை செய்யும் சாதனை தான் பிரதானம். அதேபோல் மனித ஆளுமைப்பற்றிய
வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. Personality Development Course : (PDC)
இராம்தீஸ்:
மாணவர்களின் கோடைகாலங்களில்
சிறப்பு இராணுவப் பயிற்சிகள் வழங்கப் படுகின்றன. இங்கே பயிற்சி பெற்றுச்
செல்பவர்களுக்கு “இராம்தீஸ்” என்றொரு சிறப்புப் பட்டத்தையும் வழங்குகின்றார்கள்.
போன்ஸாலா இந்து இராணுவப்
பள்ளியில் பாடம் பயின்ற இராணுவ அதிகாரிகள்:
பின்வரும் இராணுவ
அதிகாரிகள் தாங்கள் இந்து இராணுவப் பள்ளியில் பாடம் பயின்றதாக பெருமைப்
படுகின்றார்கள். 1. பரம்வீர் சக்கர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) ஒய்.டி. சகாராபுத்
2.பரம்வீர் சக்கர் (ஓய்வு) விரகாஷ் கிக்கூலி, விர்விமானி, (ஓய்வு)
எஸ்.எம்.கற்றாடி, வி.எம்.கேஜர் பண்டிட்ராவ், ஸ்ரீ வி.ஜி.பாக்ரீ
போன்ஸாலா இந்து இராணுவப்
பள்ளியில் பாடம் பயின்ற காங்கிரஸ் அமைச்சர்கள் :
மாண்புமிகு வசந்த்
சேத்- முன்னாள் மத்திய மந்திரி, ஒரு காங்கிரஸ் தலைவர்,ஸ்ரீவினாயக் ராவ் பாட்டில்-
முன்னாள் மராட்டிய மாநில அமைச்சர்.
விருதுகள்:
தங்கள் பள்ளியில் பாடம்
பயின்று இந்துத்துவாவிற்கு சிறப்பாகப் பணியாற்றுபவர்களுக்கு விருதுகளை வழங்கும்
பழக்கங்களையும் ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர். இந்த விருதுகள், “போன்ஸாலா பூஷன்”
என வழங்கப் படுகின்றன.
இப்படி இந்துத்
தீவிரவாதத்தை வளர்த்து வரும் இந்தப் பாடசாலையை இழுத்து மூட வேண்டும் என்றொரு
கோரிக்கையை நீண்ட நாள்களாவே கம்யூனினிஸ்ட் கட்சிகள், வைகறை வெளிச்சம், மில்லி
கெசட் போன்ற பத்திரிக்கைகள் வைத்து வருகின்றன. ஆனால் அரசு இதனை கண்டு கொள்ளவில்லை.
மாறாக உற்சாகம் தருகின்றது.
இந்த இந்துத்தீவிரவாத
பயிற்சிப் பள்ளியை இழுத்து மூடுவதுடன், இந்த விவகாரம் முடிந்து விடாது. இதில்
இன்னும் பல நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. அவை
1. இந்த இந்து இராணுவப்
பள்ளியிலும் மகாராஷ்டிரா மிலிட்டரி பவுன்டேஷனிலும் பயின்றவர்கள், எத்தனை பேர் நமது
முப்படைகளிலும் ஊடுருவி உள்ளார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டும். அவர்கள்
உடனேயே வெளியேற்றப்பட வேண்டும்.
2. 1000 தற்கொலை படைகளில்
இரண்டு பேர் தவிர எஞ்சியோர் என்னென்ன செய்து கொண்டிருக் கின்றார்கள் என்பது
கண்டறியப் படவேண்டும்.
3. இந்தத் தற்கொலை படையில்
குண்டு வைக்கும் போது இறந்தவர்கள் போக எஞ்சி இருப்பவர்கள் எத்தனை பேரை உருவாக்கி
இருக்கின்றார்களோ அத்தனை பேரும் கைது செய்யப்பட்டு, இயங்கவிடாமல் தடுத்திட
வேண்டும். இவர்கள் நடத்திய குண்டு வெடிப்புகளில் கைது செய்யப்பட்ட அப்பாவி
முஸ்லிம்கள் நிபந்தனை இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும். இப்படி நாம் தொடர்ந்து
வலியுறுத்தி வருகின்றோம்.
- எம்.ஜி.எம்.
( Sources : Subhash
Gatader / Milli Gazette: 1-15 April 2012/ Outlook Nov.17.2008 IEX : 16 Nov
2002, PTI : Online : Nov: 15,2002)
The size of question mark about our country's secularism is further developed after knowing the facts of BONSALA. This facts should be communicated to all comrades and like minded hindu friends. Praying Allah for your strength to continue.
ReplyDelete