Friday 19 December 2014

தனிநாடாகிறது பாலஸ்தீனம்

கடந்த 2012 ஆம் ஆண்டு .நா. சபையில் பாலஸ்தீனத்திற்கு உறுப்பினரல்லாத தனிநாடு அந்தஸ்து வழங்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 20 மாதங்களாக பாலஸ்தீனம் தனிநாடாக ஆவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இம்மாத இறுதியில் .நா. பாதுகாப்பு சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 2016 ஆம் ஆண்டு பாலஸ்தீனம் தனிநாடாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றதுஅதன் ஒருபகுதியாகவே கடந்த 02.06.14 காசாவை ஆட்சி செய்து வந்த ஹமாசும்மேற்கு கரையை ஆட்சி செய்து ஃபதஹ் இயக்கமும் இணைந்து ஒன்றுபட்ட பாலஸ்தீன நிர்வாகத்தை அமைத்தன.ஒன்றுபட்ட பாலஸ்தீன அதிபராக மஹ்மூது அப்பாசும், பாலஸ்தீன நிர்வாக தலைவராக அல்ஹம்து லில்லாஹ்வும் செயல்பட்டு வருகின்றனர்.

துருக்கியின் அரசியல் அழுத்தம்

பாலஸ்தீனத்தை தனிநாடாக்கும் முயற்சியில் .நா. சபைக்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் கடும் அரசியல் அழுத்தங்களை தந்து வந்தார் இஸ்லாமிய உலகின் சிறந்த தலைவர் துருக்கி அதிபர் டாக்டர் ரஜப் தய்யிப் எர்துகான்ஒருபக்கம் எர்துகானின் அழுத்தம். இன்னொரு பக்கம் ஐரோப்பாவில் பெருகி வரும் முஸ்லிம்களின் அழுத்தம். அத்துடன் ஐரோப்பிய அரசியலில் பங்கேற்றுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் முஸ்லிம் எம்.பிக்களின் அழுத்தம் ஆகியவற்றினால் ஐரோப்பிய நாடுகளில் பாலஸ்தீனம் தனிநாடாகுவதற்கு ஆதரவு பெருகி வந்தது.

தனிநாடாகுவதை ஆதரிக்கும் ஐரோப்பிய நாடுகள்

ஹங்கேரி, போலந்து, ஸ்லோவேகியா உட்பட சுமார் 130 நாடுகள் பாலஸ்தீனம் தனிநாடாகுவதை ஆதரித்துள்ள நிலையில், ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் சுவீடன் கடந்த அக்டோபர் மாதம் பாலஸ்தீனம் தனிநாடாகுவதை பாராளுமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றியது.சுவீடனின் இடதுசாரி பிரதமர் ஸ்டீபன் லாஃப்வன்(Stefan Lofven) தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இவ்வாறு பேசினார்.” இஸ்ரேல்பாலஸ்தீனம் இடையிலான மோதலை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வர வேண்டுமெனில், பாலஸ்தீனம் தனிநாடாக வேண்டும் என்றார்.

முன்னதாக இத்தீர்மானம் சுவிடன் பாராளுமன்றத்தில் நிறைவேறுவதற்கு துருக்கியை பூர்வீகமாகக் கொண்ட சுவீடன் நகர்ப்புறம் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முஹம்மது கப்லன் கடுமையாக பணியாற்றினார்.
இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு துருக்கியில் இருந்து காசாவுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்று இஸ்ரேலினால் வழிமறிக்கப்பட்டு துருக்கியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஒன்பது பேரை இஸ்ரேல் சுட்டுக் கொன்ற மாவி மர்மரா கப்பலில் பயணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவீடனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 18 ஆம் தேதி (18.11.14) ஸ்பெயின் பாராளுமன்றத்தில் பாலஸ்தீனம் தனிநாடாகுவதற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, மசோதா வெற்றியடைந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நவம்பர் 28 ஆம் தேதி பிரான்ஸ் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் அல்ஆலி இதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறார். கடந்த பிரான்ஸ் சென்றிருந்த துருக்கி அதிபர் எர்துகான் இது விஷயமாக பிரான்ஸ் அதிபர் ஹாலந்தினை சம்மதிக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்சினைத் தொடர்ந்து பிரிட்டனிலும் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றாக தீ்ர்மானம் நிறைவேற்றப்பட்டு கடைசியில் ஐரோப்பிய யூனியனிலும், .நா. சபையிலும் தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளார் எர்துகான்.

தனிநாடாகுவதை ஆதரிக்கும் ஐரோப்பிய நாடுகள்

ஹங்கேரி, போலந்து, ஸ்லோவேகியா உட்பட சுமார் 130 நாடுகள் பாலஸ்தீனம் தனிநாடாகுவதை ஆதரித்துள்ள நிலையில், ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் சுவீடன் கடந்த அக்டோபர் மாதம் பாலஸ்தீனம் தனிநாடாகுவதை பாராளுமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றியது.

சுவீடனின் இடதுசாரி பிரதமர் ஸ்டீபன் லாஃப்வன்(Stefan Lofven) தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இவ்வாறு பேசினார்.” இஸ்ரேல்பாலஸ்தீனம் இடையிலான மோதலை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வர வேண்டுமெனில், பாலஸ்தீனம் தனிநாடாக வேண்டும் என்றார்.

முன்னதாக இத்தீர்மானம் சுவிடன் பாராளுமன்றத்தில் நிறைவேறுவதற்கு துருக்கியை பூர்வீகமாகக் கொண்ட சுவீடன் நகர்ப்புறம் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முஹம்மது கப்லன் கடுமையாக பணியாற்றினார்.
இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு துருக்கியில் இருந்து காசாவுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்று இஸ்ரேலினால் வழிமறிக்கப்பட்டு துருக்கியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஒன்பது பேரை இஸ்ரேல் சுட்டுக் கொன்ற மாவி மர்மரா கப்பலில் பயணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவீடனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 18 ஆம் தேதி (18.11.14) ஸ்பெயின் பாராளுமன்றத்தில் பாலஸ்தீனம் தனிநாடாகுவதற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, மசோதா வெற்றியடைந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நவம்பர் 28 ஆம் தேதி பிரான்ஸ் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் அல்ஆலி இதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறார். கடந்த பிரான்ஸ் சென்றிருந்த துருக்கி அதிபர் எர்துகான் இது விஷயமாக பிரான்ஸ் அதிபர் ஹாலந்தினை சம்மதிக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்சினைத் தொடர்ந்து பிரிட்டனிலும் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றாக தீ்ர்மானம் நிறைவேற்றப்பட்டு கடைசியில் ஐரோப்பிய யூனியனிலும், .நா. சபையிலும் தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளார் எர்துகான்.

அல்அக்ஸாவும் இஸ்லாமும்

அல்அக்ஸா பள்ளிவாசல் இஸ்லாமிய புனிதத்தலம் என்பது உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்கள் ஒன்றுபட்டுள்ள விஷயமாகும். மத்ஹபுகளை ஏற்றவர்கள்ஏற்காதவர்ககள், ஷியாஅஹ்லுஸ் சுன்னா என பல்வேறு குழுக்கள் , சித்தாந்தப் பிரிவுகள் என மேற்கில் இருந்து கிழக்கு வரை இஸ்லாமிய உலகின் அனைத்துப் பிரிவினரும் இதில் ஒன்றுபட்டே உள்ளனர்.

அல்அக்ஸா தாக்கப்பட்டால் அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்களும்ஆஸ்திரேலியாவில் வாழும் முஸ்லிம்களும் ஒரே உணர்வுடன் தான் அப்பிரச்சினையை பார்ப்பார்கள். இதற்கு முன்னர் ஹிஜ்ரி 492 ஆம் ஆண்டு முதல் ஹி.583 ஆம் ஆண்டு வரை கிறிஸ்தவர்களிடம் சிறைப்பட்டிருந்த அல்அக்ஸாவை மீட்பதற்கு மாவீரன் சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபி தலைமையில் குர்துகள் போராடிய சமயத்தில் முஸ்லிம் உலகின் அனைத்துப் பிரிவினரும் சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபியின் பின்னால் தான் நின்றனர்.

இஸ்ரேலை ஏற்கலாமா? வேண்டாமா? என்பதில் இஸ்லாமிய உலகில் கருத்து வேறுபாடு இருக்கின்றது. ஆனால், அல்அக்ஸாவும்ஜெருசேலம் நகரும் இஸ்லாமிய புனிதத்தலங்கள் என்பதில் முஸ்லிம் உலகில் கருத்து வேறுபாடு இல்லை.


முஸ்லிம்களின் முதல் கிப்லா

அல்அக்ஸா பள்ளிவாசலுக்கு பல்வேறு சிறப்புகள் இஸ்லாத்தில் உண்டு. அவற்றில் ஒன்று அல்அக்ஸா பள்ளிவாசல் தான் முஸ்லிம்களின் முதல் கிப்லாவாகும்ஃபர்ளு தொழுகைகளையும், ஜும்ஆத் தொழுகையையும் மதீனாவுக்கு வந்த பின்பே பாங்கு சொல்லி ஜமாஅத்தாக முஸ்லிம்கள் நிறைவேற்றினார்கள். இவ்வாறு மதீனாவில் ஆரம்பத்தில் சுமார் 16 மாதங்கள் நபி (ஸல்) அவர்களின் தலைமையில் நடத்தப்பட்ட ஜமாஅத் தொழுகைகள் அல்அக்ஸா பள்ளிவாசலை நோக்கி நடத்தப்பட்டன.

திருக்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயமான பகரா அத்தியாத்தின் 150 ஆம் வசனம் இறங்கும் வரை இதுவே நீடித்தது. இன்று மதீனா மாநகரில் இரட்டைக் கிப்லா பள்ளிவாசல் என்ற பெயரில் பள்ளிவாசல் உள்ளது.
தொழுகையிலேயே அல்அக்ஸா திசையில் இருந்து மக்காவில் புனித மஸ்ஜிதுல் ஹராம் திசையை நோக்கி முஸ்லிம்கள் திரும்பியதால் அதற்கு அப்பெயர் வந்தது.

மேலும் நபி (ஸல்) அவர்கள் 16 மாதங்களுக்கு பின்னர் மக்காவில் உள்ள புனித மஸ்ஜிதுல் ஹராம் நோக்கி தொழ ஆரம்பித்ததை யூதர்கள் குறை கூறினர். அதற்கு மறுப்பாக அதே பகறா அத்தியாத்தின் 142, 143 ஆகிய இரண்டு வசனங்கள் இறக்கியருளப்பட்டன. ஆக கிப்லா விஷயத்தில் அல்அக்ஸா தொடர்பாக மூன்று வசனங்கள் இறக்கியருளப்பட்டுள்ளன.

உலகின் இரண்டாவது பள்ளிவாசல்

உலகில் அல்லாஹ்வை வணங்குதற்காக கட்டப்பட்ட இரண்டாவது பள்ளிவாசல் அல்அக்ஸா பள்ளிவாசல் ஆகும். முதலில் மஸ்ஜிதுல் ஹராம் கட்டப்பட்டது. இரண்டாவது அல்அக்ஸா கட்டப்பட்டது. இரண்டுக்கும் இடைப்பட்ட காலம் நாற்பதாண்டுகள் என்றார்கள் அண்ணல் நபி (ஸல்). புகாரி, முஸ்லிம் உட்பட பல்வேறு நபிமொழி நூல்கள் இது குறித்த தகவல்கள் நிரம்பக் கிடைக்கின்றன.

மிஃராஜ் பயணம் தொடங்கிய இடம்

நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் மிக முக்கியமான நிகழ்வு ஏழு வானங்களுக்கு அப்பால் அல்லாஹ்வை அவனின் அரியணையில் போய் சந்தித்த மிஃராஜ் பயண நிகழ்வாகும்புனித மக்கா நகரில் உள்ள மஸ்ஜிதுல் ஹராமில் இருந்து புராக் எனும் வாகனத்தில் இரவில் பாலஸ்தீனத்தில் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸா சென்ற நிகழ்வுவை இஸ்லாமிய அறிஞர்கள் இஸ்ரா பயணம் என்கின்றனர்.

நபி (ஸல்) அவர்களின் இஸ்ரா பயணம் முடிந்த இடமும், மிஃராஜ் பயணம் தொடங்கிய இடமும் அல்அக்ஸா பள்ளிவாசல் தான். இந்த அடிப்படையில் மதீனாவில் உள்ள மஸ்ஜிதுன் நபவீ க்கு வருவதற்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் சென்ற பள்ளிவாசலும் அல்அக்ஸா பள்ளிவாசல் தான்.

மிஃராஜ் பயணத்திற்கு அல்லாஹ் மஸ்ஜிதுல் ஹராமில் இருந்து நேரடியாக வானத்திற்கு அழைத்துச் சென்றிருக்கலாம். ஆனால் பாலஸ்தீனத்தில் உள்ள அல்அக்ஸா பள்ளிவாசலுக்கு நபி (ஸல்) அழைத்துச் சென்று, பின்பு அங்கேயே வானில் இருந்து வந்திறங்க வைத்து கூட்டி வந்தது இவை அனைத்துமே மஸ்ஜிதுல் ஹராமைப் போன்றே அல்அக்ஸா பள்ளிவாசலும் இஸ்லாத்தில் புனிதத்தலம் தான்  என்பதை உணர்த்துவதே வல்லோன் அல்லாஹ்வின் நோக்கமாகும்.

நன்மையை நாடிச் செல்லும் பள்ளிவாசல்

நன்மையை நாடி மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறு பள்ளிவாசல்களுக்கு பயணம் மேற்கொள்ளப்படாது என்றார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அவை, புனித மஸ்ஜிதுல் ஹராம் (மக்கா), புனித மஸ்ஜிதுன் நபவீ (மதீனா), புனித மஸ்ஜிதுல் அக்ஸா (ஜெருசேலம்)” (நூல் : புகாரி, முஸ்லிம்இன்னொரு சந்தர்ப்பத்தில் இப்படிச் சொன்னார்கள் நபி (ஸல்) அவர்கள்மஸ்ஜிதுல் அக்ஸாவில் தொழுதால் 50 ஆயிரம் மடங்கு நன்மை அதிகமாக கிடைக்கும். (நூல்: இப்னு மாஜா)

பாவங்கள் மன்னிக்கப்படும் பள்ளிவாசல்

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “யார் மஸ்ஜிதுல் அக்ஸாவில் இருந்து மஸ்ஜிதுல் ஹராமுக்கு ஹஜ்உம்ராவை நாடி வருகின்றாரோ அவரின் முன் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்”. (நூல் :அபூதாவூதுஇவ்வாறு அல்அக்ஸா இஸ்லாமிய புனிதத்தலங்களில் ஒன்று திருக்குர்ஆன், நபிகளாரின் சுன்னா நிரம்ப ஆதாரங்கள் கிடைக்கிறது.

எது அல்அக்ஸா பள்ளிவாசல்?

இப்போது அல்அக்ஸா பள்ளிவாசல் என்றால் பள்ளிவாசல் மட்டும் என்று இஸ்ரேல் அரசினால் கூறப்படுகின்றது. ஆனால் அல்அக்ஸா என்றால் அதன் வளாகத்தில் உள்ள அனைத்தும் அல்அக்ஸா தான்.அல்அக்ஸா வளாகத்தில் உள்ளகுப்பதுஸ் சுக்ரா’ (ராக்கெட் டூம்) என்றழைக்கப்படும் மஸ்ஜித் உமர், அல்அக்ஸா வளாகத்தில் உள்ள மையவாடி உட்பட அனைத்தும் அல்அக்ஸா தான்.

அஜ்னாதைன் யுத்த வெற்றிக்கு கிறிஸ்தவ கர்தினால்களின் அழைப்பின் பேரில் புகழ்பெற்ற ஜெருசேலம் ஒப்பந்தத்திற்காக பாலஸ்தீனம் வந்த கலீஃபா உமர் (ரழி) அவர்கள் ஒப்பந்தம் நிறைவுற்ற பின்பு அல்அக்ஸா பள்ளிவாசல் பள்ளிவாசல் வந்தார்கள்.அங்குள்ள நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் பயணத்தில் புராக் வாகனத்தை கட்டிப் போட்ட பாறையை விசாரித்தார்கள். அது குப்பை கொட்டும் இடமாக காட்சியளித்தது.

கிறிஸ்தவர்கள் அதனை குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வந்தனர். கலீஃபா உமர் (ரழி) அவர்கள் உடனே விளக்குமாறு கொண்டு வருமாறு சொல்லி, தமது திருக்கரங்களினால் அவ்விடத்தை சுத்தம் செய்தார்கள்கலீஃபா சுத்தம் செய்வதைக் கண்ட சங்கைக்குரிய சஹாபாக்களில் வீரத்தளபதிகளான அபூ உபைதா (ரழி), அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி), முஹம்மது இப்னு மஸ்லமா (ரழி), காலித் இப்னு வலீத் (ரழி), அம்ரு இப்னு ஆஸ் (ரழி), முஆது இப்னு ஜபல் (ரழி), முஆவியா (ரழி) ஆகியோரும், முஸ்லிம் வீரர்களும் சுத்தம் செய்தனர்.

பாரசீகப் பேரரசையும், ரோமப் பேரரசையும் வென்ற அகன்ற இஸ்லாமியப் பேரரசின் கலீஃபா விளக்குமாறு வைத்து சுத்தம் செய்வதைக் கண்ணுற்ற கிறிஸ்தவர்கள் திகைத்துப் போனார்கள். தங்களின் செயலை எண்ணி வெட்கித் தலைகுனிந்தார்கள்.

அல்அக்ஸாவுக்கு இனி இப்படியொரு நிலை ஏற்படக்கூடாது என்றெண்ணிய கலீஃபா உமர் (ரழி),  அந்த இடத்தில் ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள்அதுவே அல்வளாகத்தில் இப்படி தங்கக் கலரில் ஜொலிக்கும் மஸ்ஜிது உமர் (ராக்கெட் டூம்) பள்ளிவாசலாகும். அத்துடன் அல்அக்ஸா சுற்றிலும் வேலியிட்டார்கள்.  பின்பு ஹிஜ்ரி 72 ஆம் ஆண்டு கலீஃபா அப்துல் மலிக் இப்னு மர்வான் ஆட்சிக் காலத்தில் அல்அக்ஸா விரிவுபடுத்தப்பட்டது. மஸ்ஜிது உமர் பள்ளிவாசலில் குப்பா அமைக்கப்பட்டதுஆக அல்அக்ஸா பள்ளிவாசல் மட்டுமல்ல.. அல்அக்ஸா வளாகத்தில் உள்ள அனைத்தும் அல்அக்ஸா என்பதே இஸ்லாமிய அறிஞர்களின் நிலைப்பாடாகும்.

புனித ஜெருசேலம் நகரம்

இஸ்லாத்தில் மக்கா , மதீனா நகரங்கள் எவ்வாறு புனித நகரங்களாக விளங்குகின்றனவோ அவ்வாறே ஜெருசேலம் நகரமும் புனித நகரம் தான்.
மக்கா நகரை புனித கஅபாவின் மூலம் கண்ணியப்படுத்தியதைப் போன்று, மதீனா நகரை புனித மஸ்ஜிதுன் நபவீயினால் கண்ணியப்படுத்தியதைப் போன்று ஜெருசேலம் நகரை அல்அக்ஸா பள்ளிவாசலினால் கண்ணியப்படுத்தியுள்ளான் வல்லோன் அல்லாஹ்.

ஜெருசேலம் என்பதற்கு அரபியில் அல்குத்ஸ் என்ற சொல்லே பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு புனிதமானது என்றே பொருள்ஜெருசேலம் நகரம் குறித்து திருக்குர்ஆனில் ஐந்து இடங்களில்அந்நகரம் இறைவனின் அருளைப் பெற்ற நகரம்என்று கூறப்பட்டுள்ளது. அவ்வசனங்கள் பின்வருமாறு,

1. ”அல்லாஹ் பரிசுத்தமானவன். அவன் (முஹம்மது (ஸல்) எனும்) தன் அடியாரை(க் கஅபாவாகிய ) சிறப்புக்குரிய பள்ளிவாசலில் இருந்து எதனைச் சுற்றியுள்ள பகுதிகளை நாம் பாக்கியமான பகுதிகளாக ஆக்கினோமோ அத்தகைய (அல்குத்ஸ் நகரில் உள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான்.” (அல்குர்ஆன் 17:1)

2.“ (இப்ராஹீம் நபியாகிய) அவரையும், அவரின் சகோதரர் மகன்) லூத்தையும் பாதுகாத்துக் கொண்டு அகிலத்தார்களுக்கு நாம் பாக்கியமான பூமியாக்கித் தந்த (அல்குத்ஸ் எனும்) ஊரில் கொண்டு போய் சேர்த்தோம்.” (அல்குர்ஆன் 21:71)

3. “எவர்களை பலவீனமானவர்கள் என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருந்தார்களோ அந்த மக்களுக்கு மிக்க பாக்கியமுள்ள பூமியின் கிழக்குப் பாகம், மேற்குப் பாகம் ஆகிய அனைத்தையும் சொந்தமாக்கிக் கொடுத்தோம். ஆகவே, இஸ்ராயீலின் சந்ததிகள் (ஃபிர்அவ்னால்) ஏற்பட்ட கஷ்டங்களை ) பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்ததன் காரணமாக (அவர்களுக்கு) உங்கள் இறைவன் கொடுத்த வாக்குறுதி மிக நல்லவிதமாக நிறைவேறியது.” (அல்குர்ஆன் 7:137)

4. “சுலைமானுக்கு வேகமான காற்றையும் நாம் வசப்படுத்திக் கொடுத்திருந்தோம். அது அவருடைய உத்தரவின்படி மிக்க பாக்கியம் பெற்ற ஊருக்கு (அவரை எடுத்து)ச் செல்லும்.” (அல்குர்ஆன் 21:81)

5. (சபாவாசிகளாகிய) அவர்களின் ஊருக்கும் நாம் அருள்புரிந்த ஊர்களுக்கும் இடையில் தொடர்ச்சியாகப் பல கிராமங்களை ஏற்படுத்தி அவற்றில் பாதைகளை அமைத்து இரவு பகலில் எந்நேரத்திலும் அச்சமற்றவர்களாக அதில் பயணம் செய்யுங்கள் (என்று கூறியிருந்தோம்.)” (அல்குர்ஆன் 34:18)

இவ்வசனத்தில் இடம் பெற்றுள்ளநாம் அருள் புரிந்த ஊர்கள்என்பதற்கு நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அல்அக்ஸா பள்ளிவாசல் அமைந்துள்ள ஊர் என்றே விளக்கமளித்துள்ளார்கள்அல்அக்ஸா பள்ளிவாசலும், ஜெருசேலம் நகரும் முஸ்லிம்களின் ஆதிக்கத்தில் வருவதற்கே முன்பே நன்மையை நாடி முஸ்லிம்கள் பயணம் செய்யும் மூன்று பள்ளிவாசல்களில் ஒன்று என்று அதனை அடையாளப்படுத்தினார்கள் அண்ணல் நபி (ஸல்). மக்கா, மதீனா நகரங்களைப் போன்று ஜெருசேலம் நகருக்கு அல்அக்ஸா பள்ளிவாசலில் தொழுவதற்காக முஸ்லிம்கள் பயணம் செய்வார்கள் என்பதையும், அல்அக்ஸா முஸ்லிம்களின் பள்ளிவாசலாகவே கியாமத் நாள் நீடித்திருக்கும் என்பதையும் அது உணர்த்தவே செய்யும்.

அல்அக்ஸாவில் எல்லை மீறிய யூத ராணுவம்

இஸ்லாமிய மார்க்கத்தில் மூன்றா வது புனிதத்தலமாக விளங்கும் அல்அக்ஸா பள்ளிவாசலில் கடந்த அக்டோபர் மாதம் யூத ராணுவமும், வலதுசாரி யூத தீவிரவாதிகளும் வன்முறையில் ஈடுபட்டார் கள்அல்அக்ஸாவுக்கு செல்பவர்கள் அதன் சுவற்றில் துப்பாக்கித் தோட்டாக்களின் சுவடுகள் பதிந் திருப்பதைக் காணலாம். கடந்த அக்டோபர் மாதம் பள்ளிவாசலினுள் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டன. உள்பள்ளியினுள் தொழுகையாளிகளின் முன்பு யூத ராணுவத்தினர் பூட்ஸ் கால்களுடன் நின்ற அவலங்களும் நடந்தன.

ஒருநாள் முழுவதும் அல்அக்ஸாவை பூட்டிப் போட்டு இமாம் உட்பட யாரையும் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்திய அவலமும் கடந்த மாதம் நடந்ததுஇது 1917 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தில் இருந்த காலம் உட்பட கடந்த 100 ஆண்டுகளில் நடக்காத நிகழ்வாகும்.

அல்அக்ஸா வன்முறைஎர்துகான் கடும் கண்டனம்

அல்அக்ஸா வன்முறைக்கு இக்வான்களும், உலகெங்கும் வாழும் இஸ்லாமிய இலட்சியவாதிகளும், துருக்கி அதிபர் டாக்டர் ரஜப் தய்யிப் எர்துகானும் கடும் கண்டனம் தெரிவித்தனர்தமது கண்டனத்தை எர்துகான் இவ்வாறு பதிவு செய்திருந்தார்.“ பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதல் குறித்து நாங்கள் பேசக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் பூட்ஸ் கால்களுடன் அல்அக்ஸா பள்ளியினுள் நுழைந்து தொழுது கொண்டிருந்தவர்களை சுட்டுள்ளனர். இதனை ஏற்க இயலாதுஅல்அக்ஸாவின் மீதான தாக்குதலை எங்கள் நாட்டின் மீதான தாக்குதலாக நாங்கள் கருதுகிறோம். அல்அக்ஸா பாலஸ்தீன மக்களின் பள்ளிவாசல் மட்டுமல்ல. அது எங்களுக்கும்உலக முஸ்லிம்களுக்கும் சொந்தமான பள்ளிவாசலாகும். அது எங்களின் புனிதத்தலங்களில் ஒன்று.” (டெய்லி சபாஹ் 20.11.14)

மறுநாள் 21.11.14 துருக்கி வந்திருந்த அல்ஜீரியா பிரதமர் உடனான சந்திப்புக்கு பின்பு எர்துகான் இவ்வாறு பேசினார்அல்அக்ஸா பள்ளிவாசல் உலக முஸ்லிம்களின் புனிதத்தலங்களில் ஒன்று. அது முஸ்லிம்களின் முதல் கிப்லா. அல்அக்ஸாவின் மீதான தாக்குதல் துருக்கியின் மீதான தாக்குதலாகவே எடுத்துக் கொள்ளப்படுகின்றதுஉலக முஸ்லிம்கள் பாலஸ்தீன விவகாரத்தையும், அல்அக்ஸா எல்லை மீறலையும் கவனித்துக் கொண்டு தான் உள்ளனர். முஸ்லிம்கள் ஒன்றும் பார்வையற்றவர்களாக இல்லை.

இஸ்லாமிய புனிதத்தலமான அல்அக்ஸாவினுள் நவம்பர் 5 ஆம் தேதி இஸ்ரேலிய ராணுவத்தினர் ரெய்டு நடத்தியதையும், பூட்ஸ் கால்களுடன் நுழைந்ததையும் எளிதாக எடுத்துக் கொள்ள இயலாது. எக்காரணம் சொன்னாலும் அதனை ஏற்க இயலாதுஇஸ்ரேல் தனது ஆக்கிரமிப் பையும், தாக்குதலையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனம் நாகரிக சமுதாயத்தில் சகிக்க இயலாததாகும்.” (டெய்லிசபாஹ், அல்குத்ஸ் யு.கே.)

மூன்றாவது இன்திஃபாளா

இன்திஃபளா என்றால் எழுச்சி என்பது பொருள். இஸ்ரேலின் பயங்கரவாத அடாவடிகளுக்கும்காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களுக்கும் எதிராக இதுவரை பாலஸ்தீன மக்கள் இரண்டு இன்திஃபாளாக்களை நடத்தியுள்ளனர்முதல் இன்திஃபாளா 1987 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை நடந்தது. முதல் இன்திஃபாளாவில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்களும், நூற்றுக்கணக்கான இஸ்ரேல் வீரர்களும் கொல்லப்பட்டனர்.

இரண்டாம் இன்திஃபாளா 2000 ஆம் ஆண்டு ஷாப்ராஷாத்திலா அகதிகள் முகாம் படுகொலை அரசியல்வாதி ஏரியல் ஷரோன் அல்அக்ஸா பள்ளிவாசலுக்கு வந்து அத்துமீறிய போது ஏற்பட்டது. இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளுக்குள் நுழைந்து பாலஸ்தீனர்கள் தாக்குதல் நடத்தினார்கள்கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேலிய ராணுவம் அல்அக்ஸாவில் எல்லை மீறிய போது ஹமாஸ் இவ்வாறு எச்சரித்தது. “ இஸ்ரேல் அல்அக்ஸாவில் அடாவடி செய்தால் மூன்றாவது இன்திஃபாளா ஏற்படுவதற்கு அது காரணமாகி விடும் என்றது.

ஆனால், யூதப் பண்டிகையானசுகூத்பண்டிகையை காரணம் காட்டி பல நூற்றுக்கணக்கான வலதுசாரி யூதர்களை அல்அக்ஸாவுக்குள் அனுமதித்து கலவரங்கள் செய்தது இஸ்ரேல்தொடர்ந்து அல்அக்ஸாவில் நுழைந்த இஸ்ரேல் ராணுவத்தினர் பள்ளிவாசலின் முதல் வரிசையில் தொழுகையாளிகளின் முன்பு பூட்ஸ் கால்களுடன் நின்றனர்இது பாலஸ்தீன மக்களுக்கு மத்தியிலும், உலகெங்கும் வாழும் முஸ்லிம்களுக்கு மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. விளைவு காசா மற்றும் மேற்கு கரையில் செயல்படும் பாலஸ்தீன விடுதலை முன்னணி எனும் அமைப்பு மூன்றாவது இன்திஃபாளாவை அறிவித்தது.

தொடர்ந்து கடந்த 18.11.14 அன்று மேற்கு ஜெருசேலத்தில் உள்ள யூத தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலுக்கு பொறுப்பேற்ற பாலஸ்தீன விடுதலை முன்னணி  அல்அக்ஸா வன்முறைக்கு பதிலடியாக தமது இயக்கத்தின் இரண்டு வீரர்கள் அதில் ஈடுபட்டதாக அறிவித்தது. தாக்குதலில் எட்டு இஸ்ரேலியர்கள் காயமடைந்தனர்ஏற்கனவே இரண்டு இன்திஃபாளாக்களை இஸ்ரேல் சந்தித்துள்ளது. ஆதலால் இன்திஃபாளாவின் விளைவுகள் அதற்கு நன்கு தெரிய செய்யும். ஆதலால் அந்நாடு அலறித் துடித்தது.

ஜோர்டான் இஸ்ரேல் பேச்சுவார்த்தை

இஸ்ரேல் தாக்கப்பட்டால் இஸ்ரேலை விட கடுமையாக அலறும் நாடு அமெரிக்கா. இஸ்ரேல் தாக்கப்பட்டவுடன் பாய்ந்து வந்தார் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி1967 ஆம் ஆண்டு அரபுஇஸ்ரேல் போரில் மேற்கு கரையில் உள்ள ஜெருசேலம் நகரை ஜோர்டானிடமிருந்தே இஸ்ரேல் கைப்பற்றியது. ஆதலால், இம்முறை கெய்ரோ செல்லாமல் ஜோர்டான் தலைநகர் அம்மான் வந்தார் கெர்ரிகெர்ரியின் மத்தியஸ்தில் ஜோர்டான் மன்னர் அப்துல்லாஹ் நெதன்யாகு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அல்அக்ஸாவுக்குள் தொழுகை நடைபெற ஒத்துழைப்பதற்கு நெதன்யாகு ஒத்துக் கொண்டார்.

ஜோர்டான் அரசுக்கு இக்வான்களின் அழுத்தம்

அல்அக்ஸா பள்ளிவாசலின் வக்ஃபு நிர்வாகம் இப்போதும் ஜோர்டான் அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. ஆதலால் அல்அக்ஸாவின் மீதான வன்முறைக்கு ஜோர்டானில் கடும் கண்டனம் எழுந்தது. ஜோர்டான் இக்வான்கள் துணைத் தலைவர் பனீ இர்ஷீது மிகப் பெரிய எழுச்சியை தலைமை தாங்கி நடத்தினார். இக்வான்களின் அரசியல் கட்சி இஸ்லாமிய செயல் முன்னணி (Islamic Action Front) கட்சியும் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தியது.

இஸ்ரேலுக்கு எதிராக ஜோர்டானில் மக்கள் எழுச்சி உருவாகுவதை கண்டு அச்சப்பட்ட ஜோர்டான் மன்னர் அப்துல்லாஹ் இஸ்ரேலுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தார்இதற்கிடையே கெர்ரி மத்தியஸ்தில் நெதன்யாகுவுடன் சமாதானம் செய்து கொண்டு அப்துல்லாஹ் மோதலை முடிவுக்கு கொண்டு வந்தார்.

இக்வான்கள் தலைவர் கைது

நெதன்யாகு தாக்குதலை அறிவித்த பின்பு இஸ்ரேல் ராணுவம் அல்அக்ஸாவில் அடாவடிகளில் ஈடுபடுவதைக் கைவிடவில்லை. இதனால் கொதிப்படைந்தார்கள் ஜோர்டான் பாராளுமன்ற உறுப்பினர்கள்விளைவு பாராளுமன்ற அவையில் மேற்கு ஜெருசேலம் யூத தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தி இறந்த பாலஸ்தீன விடுதலை முன்னணியின் இரண்டு வீரர்களின் பெயரில் சூரா ஃபாத்திஹா ஓதி ஈஸால் சவாப் செய்தார்கள். (அல்குத்ஸ் 19.11.14)

(ஈஸால் சவாப் என்றால் இறந்தவர்களின் மீது திருக்குர்ஆன் ஓதி அதன் நன்மைகளை இறந்தவர்களுக்கு ஹதியா செய்யும் வழக்கம். பாரம்பரிய அஹ்லுஸ் சுன்னா முஸ்லிம்களிடம் இது வழக்கத்தில் உள்ளது.)

பாராளுமன்றத்தில் நடந்த ஈஸால் சவாப் நிகழ்ச்சிக்கு ஜோர்டானுக்கான இஸ்ரேல் தூதர் டேனியன் நெவோ (daniel nevo) கடும் கண்டனம் தெரிவித்தார். (அல்குத்ஸ் யு.கே.25.11.14) மீண்டும் இஸ்ரேல்ஜோர்டான் அரசியல் உறவில் உரசல்கள் தொடங்கின. இதற்கிடையே பிரச்சினைக்கு முடிவுக்கு கொண்டு இக்வான்களை பலிகொடுக்க முடிவு செய்தது ஜோர்டான் அரசுவிளைவு ஜோர்டான் இக்வான்கள் இயக்கத்தின் துணைத் தலைவர் பனீ இர்ஷீது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இஸ்ரேலின் புதிய மசோதா

பாலஸ்தீனம் தனிநாடாகுவதை தடுப்பதற்கு அல்அக்ஸா பள்ளிவாசலின் மீது தாக்குதல் நடத்தி பாலஸ்தீன மக்களை அடிபணிய வைத்திட இஸ்ரேல் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடியவே இன்னொரு வழியில் நரித்தனம் செய்தது இஸ்ரேல்இஸ்ரேலினுள் பாலஸ்தீனர்கள் சுமார் ஒரு மில்லியன் பாலஸ்தீனர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களின் குடியுரிமை ரத்து செய்யும் விதமாகயூதர்களுக்கு மட்டுமே தேசிய உரிமை எனும்புதிய மசோதாவை இஸ்ரேல் பாராளுமன்றத்தில் கடந்த 23.11.14 தாக்கல் செய்தார் நெதன்யாகு. பாராளுமன்றத்தில் 26 ஆம் தேதி அம்மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இம்மசோதா இஸ்ரேல்பாலஸ்தீன அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இடையூறாக ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

                                                                     - மௌலவி அபுல் ஹசன் ஆலிம் ஃபாஸி.M.A



No comments:

Post a Comment