Showing posts with label Babri masjid. Show all posts
Showing posts with label Babri masjid. Show all posts

Saturday, 19 January 2013

பாபரி மஸ்ஜித்-இன் வழக்கும் மத்தியப்புலனாய்வுத்துறையின் மெத்தனப்போக்கும்


பாபரி மஸ்ஜித் இடிக்கப் பட்டவுடன் அதனை உடனேயே கட்டித்தருவோம் என வாக்களித்தார் நாட்டு மக்களிடம் நரசிம்மராவ் என்ற அப்போதைய பிரதமர். இவர் இந்து தீவிரவாத அமைப்புகளின் பிறப்பிடமாகிய சித்பவன் என்னுமிடத்தை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பின்னர் அந்த வாக்குறுதியைக் காற்றிலே பறக்கவிட்டார். அடுத்தாற்போல் அபார நாடகத்தை அரங்கேற்றினார். அந்த நாடகம் பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குப் பின்னால் ஒரு சதி இருந்ததா? என்பதைக் கண்டுபிடிக்கப் போவதாகவும் அதற்காக மிகவும் ஆழமான விசாரணை ஒன்றை நடத்திட போவதாகவும் பிரகடனப் படுத்தினார்.
 
பள்ளிவாசல் இடிக்கப்பட்ட நான்காவது நாள் ஒரு விசாரணைக்கு (16.12.1992 அன்று) உத்தரவிட்டார். ஒரு விசாரணை கமிஷனையும் நியமித்தார். இந்த விசாரணை கமிஷனின் தலைவராக லிபர்ஹான் என்ற உயர்நீதிமன்ற (ஓய்வு) நீதிபதியை நியமித்தார்.  
 
 இவர் கிடைத்த இந்தப் பதவியை 17 ஆண்டுகள் பயன்படுத்தி பலகோடி ரூபாயைச் சம்பளமாகப் பெற்றார். முடிவில் சங்பரிவாரங் களிடம் வாங்கிட வேண்டியதை வாங்கிவிட்டு “Conspiracy” என்ற சதி என்று பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குப் பின் இல்லை என்று கூறினார். ஆனால் முஸ்லிம்கள் சதி இருக்கிறது என்றும் அதில் அத்வானி உள்ளிட்டோர் உண்டு என்றும் வழக்குத் தொடர்ந்தார்கள். பின்னர் இந்த வழக்குகள் சிபிஐ என்ற மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
சதியைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன்னாள் துணை பிரதமர் எல்.கே அத்வானி, முன்னாள் மத்திய அமைச்சர் முரளிமனோகர் ஜோஷி, விஷ்வ ஹிந்து பரீஷத் அமைப்பைச் சார்ந்த பிரவின் தொகாடியா, சிவசேனை அமைப்பைச் சார்ந்த பால்தாக்கரே இன்னும் பலர். இதை எதிர்த்து அலஹாபாத் உயர்நீதிமன்றம் அப்படியொரு சதி இருக்கவில்லை எனக்கூறி சதி குறித்த குற்றச்சாட்டுகளை விட்டுவிட வேண்டும் எனக்கூறியது.
 
முஸ்லிம்கள் தொடர்ந்து தந்த நெருக்கடிகளால் சி.பி.ஐ இந்த வழக்குகளை உச்சநீதிமன்றம் கொண்டு சென்றது. உச்ச நீதிமன்றத்தில் மத்தியப் புலனாய்வுத்துறை இப்படிக் கூறிற்று:
 
“அத்வானி உள்ளிட்டோர் மீதான பாபரி மஸ்ஜித் இடிப்பு சதி குற்றச்சாட்டை விட்டுவிட இயலாது. அதேபோல் இந்த வழக்கை நாம் ஏனைய வழக்குகளிலிருந்து பிரித்திடவும் இயலாது.”
 
ஏனைய வழக்குகள்: (ஏனைய வழக்குகள் என்பது, 1992இல் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டவுடன் இரண்டு வழக்குகள் பதியப்பட்டன. ஒன்று 197/1992 பிறிதொன்று 198/1992. வழக்கு எண் 198/1992 என்பது பாபரி மஸ்ஜித் இடிப்பில் நேரடியாக தங்களை ஈடுபடுத்திய கரசேவகர்கள். மற்றொன்று சற்று தொலைவில் போடப்பட்ட மேடையில் நின்று உற்சாக உரைகளை நிகழ்த்தி பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு உறுதுணையாக நின்றவர்கள். இவர்கள் வழக்கு எண் 197/1992. இப்போது சிபிஐ சொல்வது இரண்டு வழக்குகளும் ஒன்று தான். எல்லோரும் இடித்தவர்களும் இடிக்க செய்தவர்களும் ஒன்று போலவே விசாரிக்கப்படவேண்டும் என்பதே) இது தான் நமது சட்டங்கள் சொல்லுபவையும்.
 
சி.பி.ஐ என்ற மத்திய புலனாய்வுத்துறை மேலும் கூறியது, வழக்கு எண் 197/1992 என்பதும் வழக்கு எண் 198/1992 என்பதும் வேறு வேறு என்று கூறுவது சரியல்ல. மத்திய புலனாய்வுத்துறை மேற்கொண்ட ஆய்வுகள் பாபரி மஸ்ஜித்-ஐ இடிக்க நடந்த சதி ஒரே பெரிய சதி, இடித்ததும் அந்த பெரிய சதியின் பிரிக்க முடியாத ஒரு பகுதிதான். இது குறித்து நாங்கள் 49 வழக்குகளை ஒரே வழக்காக பதிவு செய்திருக்கின்றோம். இதில் பாபரி மஸ்ஜித் இடிக்க வேண்டும் என்ற பெரிய சதியை நிறைவேற்றிட ஒவ்வொருவரும் ஆற்றிய பங்கினைக்குறிப்பிட்டுள்ளோம்.
 
இந்த வழக்குகள் பாபரி மஸ்ஜித் இடிப்பில் ஒவ்வொருவரும் ஆற்றிய பங்கினைத் தனித்தனியாகச் சாட்சி யங்களுடன் விரித்துரைக்கின்றன. வழக்கு எண் 198/1992 இல் பெயர் குறிப்பிடப் பட்டவர்கள் அங்கே போடப்பட்டிருந்த மேடையில் நின்றுக் கொண்டு குழுமி இருந்த கூட்டத்தை சட்டத்திற்குப் புறம்பாக வன்முறைகளில் ஈடுபடுத்தினார்கள். இதுதான் (பாபரி மஸ்ஜித்) அந்தக் கட்டடம், இடிக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்தது. அதனால் இவர்கள் தாம் முக்கிய குற்றவாளிகள்.
 
பள்ளிவாசலின் டூம் வீழ்ந்தவுடன் இவர்கள் தங்களுடைய கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தார்கள். அதோடு இனிப்புகளையும் வழங்கினார்கள். ஒருவரை ஒருவர் ஆறத் தழுவி அல்லோல கல்லோலப்பட்டார்கள். இவர்கள் மேடையில் நின்றுக் கொண்டு பேசிய பேச்சுகள் மத ஒற்றுமையைச் சீர்குலைத்தது. தேசிய ஒருமைப்பாட்டையும் பாதித்தது. அந்தக் கட்டடத்தை இடித்தது. அத்தோடு ஊடகத்தைச் சார்ந்தவர்களையும் தாக்கினார்கள். இத்தனையும் ஒரே குற்றந்தான். அவற்றை வெவ்வேறாகப் பிரித்திட இயலாது. இப்படி உச்ச நீதிமன்றத்தில் மத்தியப் புலனாய்வுத்துறை கூறியுள்ளது.
 
சிபிஐ -இன் தகிடுதத்தங்கள்: பாபரி மஸ்ஜித் இடிப்பில் சதி என்றொன்று இல்லை என்று அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்துத் தான் இந்த மேல்முறையீட்டை சிபிஐ உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதுது. இந்த வழக்கு டிசம்பர் 6 2012 அன்று நமது உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய புலனாய்வுத்துறை சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகிட வேண்டிய வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கே வந்திடவில்லை. அவர் சார்பில் ஒருவர் நீதிபதியிடம் ஆறு வாரத்திற்கு வழக்கை ஒத்தி வைக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். நீதிபதிகளே மத்திய புலனாய்வுத்துறை இந்த வழக்கில் மிகவும் மெத்தனமாக இருப்பதாகக் கூறியுள்ளது. (செய்தி ஆதாரம் தி ஹிந்து 7.12.2012)
 
அதே போல் மத்திய புலனாய்வுத்துறை தன்னுடைய மேல் முறையீட்டில் இடிக்கப்பட்டது வெறும் கட்டடம் தான் என்பதாகவே  குறிப்பிடுகின்றது. கி.பி.1528இல் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்கதொரு மஸ்ஜித் என்பது தான் பாபரி மஸ்ஜித்-இன் பெருமை. இந்தியாவின் பாரம்பரிய சின்னங்களுள் ஒன்று. ஆனால் இங்கே ஒரு வெற்றுக் கட்டடம் தான் என்பதாகவே காட்டப்படுகின்றது. இப்படித்தான் சிபிஐ இன் மனுவிலும் கூறப்பட்டுள்ளது.
 
இது மொத்த வழக்கும் பெற வேண்டிய மதிப்பையும் முக்கியத் துவத்தையும் குறைத்துக் காட்டுவதாகும். 20 ஆண்டுகளாகியும் மத்திய புலனாய்வுத்துறைக்கு இந்த வழக்கு முக்கிய வழக்காகத் தெரிந்திடவில்லை. இங்கே வழக்கை நடத்துவதைப் போல் ஒரு பாசாங்குக் காட்டினால் போதும் என்ற முடிவுக்கு மத்திய புலனாய்வுத்துறை ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிகின்றது. உச்சநீதிமன்ற நீதிபதிகளே இந்த மெத்தனப்போக்கு குறித்து தங்கள் வருத்தத்தை தெரிவித்துள்ளார்கள்
 
பால்தாக்கரே: இவர் பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பெற்ற முக்கிய குற்றவாளிகளுள் ஒருவர். இவர் நீதிமன்றங்களை எட்டிப்பார்க்காமலேயே இறந்து போய் விட்டார். இப்படி குற்றஞ்சாட்டப்பட்ட வர்கள் தாமாகவே இறந்து போகும் வரைக்கும் வழக்குத் தொடரும். இதுவே இந்தியாவில் சிறுபான்மையினருக்கு கிடைக்கும் நீதி. 
 

பாபரி மஸ்ஜித் வழக்கின் இப்போதைய நிலை:வழக்கறிஞர் ஜாஃபர் ஜீலானியுடன் ஒரு பேட்டி:

வழக்குகளின் இப்போதைய நிலை:

 

 வழக்குக் குறித்த ஆவணங்களை அலஹாபாத் உயர்நீதி மன்றம் இன்னும் உச்சநீதி மன்றத்திற்கு அனுப்பவில்லை உச்ச நீதிமன்றம் அவற்றை கேட்கவில்லையா?
 
பலமுறை உச்ச நீதிமன்றம் கேட்டுவிட்டது. ஆனால் அலஹாபாத் நீதிமன்றம் அனுப்பவில்லை. காரணம் அவர்கள் இன்னும் சில அறிக்கைகள் தயாராக வேண்டியுள்ளது எனக் கூறுகின்றார்கள். எதெல்லாம் தயாராக இருக்கின்றனவோ அவற்றை அனுப்பி இருக்கலாம். ஆனால் அவற்றையும் அனுப்பவில்லை. நாங்கள் தலைமை நீதிபதியிடம் முறையிட்டிருக்கின்றோம்.
அத்வானி முதலானோர் மீதான சதி வழக்கு அது நடந்து கொண்டிருக்கின்றது. 24 12 2012 இல் வந்தது மீண்டும் 5 1 2013 ல் வரும்.