Tuesday, 12 February 2013

அஃப்சல்குரு அவசரபலி: நமது கூட்டுமனசாட்சி திருப்தி அடைந்ததா? அல்லது நமது இரத்தத் தாகம் தணிந்ததா?     அஃப்சல்குருவின் தூக்கு குறித்து அருந்ததிராய் என்ற நாடறிந்த ஆய்வாளர் ஓர் கட்டுரையைதி ஹிந்துநாளிதழில் 10/02/2013-இல் எழுதி இருந்தார். அந்தக் கட்டுரையின் முக்கிய பகுதிகளை இங்கே தருகின்றோம்.

     இந்த நீண்ட கட்டுரையில் குறிப்பிட்டிருந்த பல தகவல்களை நாம் ஜனவரி 2013, வைகறை வெளிச்சத்தில் தந்திருந்தோம். அதில் இடம் பெறாதவற்றை இங்கே தருகின்றோம்.

     அருந்ததிராய், அக்கட்டுரைக்கு நக்கலாகஒரு முழுமையான ஜனநாயகம் (A Perfect Democracy) என தலைப்பிட்டிருந்தார். உண்மையில் இதற்குஎன்னடா இது ஜனநாயகம்?” என்று பொருள்.

அஃப்சல்குருவுக்கு எதிராக எந்த சாட்சியமும் நிருபிக்கப்படவில்லை:

     அவன் காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் நீண்ட நாட்களாக இருந்து வந்தவர். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் காவல் துறையிடம் சரணடைந்தவர். பின்னர் அவரை காவல் துறையினர் தங்களது சதித்திட்டத்தில் பயன்படுத்திக் கொண்டார்கள். இதுதான் உண்மை!

கைதுஎப்படி?

      அஃப்சல்குருவை எப்படி கைது செய்தார்கள்? என்பதற்கு காவல் துறையினர் சொன்ன பதில், “அன்று நாடாளுமன்றத் தாக்குதலின் மூளை எனக் குற்றம் சாட்டப்பட்ட S.A.R. ஜீலானிதான் தகவல் தந்தார்என்றார்கள்.

  அதாவது ”S.A.R. ஜீலானியை கைது செய்தோம், அவர்தான் எங்களை அஃப்சல்குருவிடம் அழைத்துச் சென்றார்என்றார்கள்.     ஆனால் அஃப்சல்குருவை கைது செய்ய அனுப்பப்பட்ட கைது ஆவணங்கள், S.A.R.ஜீலானி கைது செய்யப்படுவதற்கு முன்பே அனுப்பப்பட்டு விட்டன என்பதை தெளிவுபடுத்தின. நீதிமன்றத்தின் பார்வைக்கு இவற்றைக் கொண்டு வந்தபோது, இதனை நீதிமன்றம் ”a Malicial Contradiction” அப்பட்டமான முரண்பாடு என்றது. (இந்த அடிப்படையில் வழக்கை அது தள்ளுபடி செய்திருக்கலாம். அப்பாவிகளைத் தூக்கில் போடுவதற்கு, நீதிமன்றங்களும் துணை நின்றதால், நீதிமன்றம் ஒரே சொல்லில் அதிருப்தியைத் தெரிவித்துவிட்டு விட்ட்து.) இது நீதிமன்ற அநீதி.

சிம்கார்டு:
            அஃப்சல்குருவுக்கு சிம்கார்டை விற்பனை செய்தவர் என்று ஒருவரை அழைத்து வந்தார்கள். அவரது பெயர் கமல் கிஷோர். அவர் அஃப்சல்குருவுக்கு ஒரு சிம்கார்டை  விற்றதாகவும், அது டிசம்பர் 4, 2001 அன்று விற்பனை செய்யப்பட்ட்தாகவும் கூறினார். இந்த சிம்கார்டு வழியாகத்தான் நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்ட எல்லா தீவிரவாதிகளும் ஒன்றிணைக்கப்பட்டதாகக் கூறினார்கள்.

           ஆனால், நீதிமன்றத்தில் அரசின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட (Call Records) கைப்பேசி பதிவுகள் ,இந்தசிம்கார்டுநவம்பர் 6, 2001-இல் இருந்தே செயல்பட தொடங்கி இருந்தது என்பதை உறுதிபடுத்தின. ”இது போன்ற போலி ஆவணங்கள், தயாரிக்கப்பட்ட சாட்சியங்கள், நீதிமன்றத்தில் தோலுரித்து காட்டப்பட்டன. ஆனால், நீதிமன்றங்கள் காவல்துறையை மிகவும் மிருதுவாக கண்டித்தன .பொய்யை சாட்சியமாக ஏற்றுக் கொண்டன.”
  
 

 

 

 

 

 

 

லேப்டாப்:

     அஃபசலிடமிருந்து இரண்டு முக்கிய தடயங்கள் அல்லது ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் காட்டப்பட்டன. அவை 1) அவருடைய லேப்டாப், 2) அவருடைய செல்போன். இவற்றை கைப்பற்றியதாக எழுதப்பட்ட காதிதங்களில் கையெழுத்திட்ட சாட்சியங்கள், இரண்டு காவல் துறையினர்தாம். இவர்கள்தாம் அஃப்சல்குருவை நீண்ட நாட்கள் காவலில் வைத்திருந்தவர்கள், சித்திரவதை செய்தவர்கள், பணம் பறித்தவர்கள். (இந்த விவகாரத்தை நாம், வைகறை வெளிச்சம் ஜனவரி இதழில் வெளியிட்டிருந்தோம்.) முக்கிய ஆவணங்களை கைப்பற்றினால் அவற்றை சீல்வைத்துவிட வேண்டும். ஆனால் இவை எந்த நிலையிலும் சீல் வைக்கப்படவில்லை.

     இந்த லேப்டாப்-ஐ அவர்கள் திறந்தபோது அந்த லேப்டாப்பில், உள்துறை அமைச்சகத்தின் சார்பில் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைவதற்குத் தயாரிக்கப்பட்ட போலி நுழைவுச் சீட்டுகள், போலி அடையாள அட்டைகள் இவை மட்டுமே இருந்தன. இவை அல்லாமல் வேறேதுமில்லையா? என்று கேட்டதற்கு, காவல் துறையினர் கூறிய பதில், “இருந்தன, ஆனால் அவை அஃப்சல்குருவால் அழிக்கப்பட்டு விட்டன.” அதாவது, அஃப்சல்குரு தன்னை தூக்கில் போட்டிடத் தேவையான ஆவணங்களை மட்டுமே வைத்திருந்தார் மீதியை அழித்து விட்டார் எனக் கூறி இருந்தார்கள். எப்படி இருக்கிறது இவர்களின் நீதிபரிபாலனம்?

வழக்கறிஞர்:

     அஃப்சலுக்கு கீழ் நீதிமன்றங்களில், வழக்கறிஞர்களே வைக்கப்படவில்லை. உயர்நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட வழக்கறிஞர், அஃப்சல்குருவை ஒரு முறை கூட சந்திக்கவில்லை.

இவற்றிற்கெல்லாம்மேலாக:

            நாடாளுமன்றத் தாக்குதலுக்கு சென்றவர்களுடன் அஃப்சல்குரு செல்லவில்லை. அப்படி குற்றப் பத்திரிக்கையும் கூட அவர் மீது குற்றம் சுமத்திடவில்லை.

     அவரால் யாரும் கொலை செய்யப்படவில்லை. ஆனாலும், அவர் தூக்கிலடப்படுகின்றார், சிலரைத் திருப்திப்படுத்திட.

உண்மை:

   கிடைக்கும் சாட்சியங்களை முறையானதோர் ஆய்வுக்கு உட்படுத்தினால் உண்மையிலேயே நாடாளுமன்றத் தாக்கிட திட்டமிட்டவர்கள், அதனை செயல்படுத்தியவர்கள் கண்டுபிடிக்கப் படுவார்கள். அவர்களையெல்லாம் காப்பற்றத்தான், அஃப்சல்குரு தூக்கிலிடப்பட்டுள்ளார்.

பழியும்பாவமும்:

     நாடாளுமன்றத்தைத் தாக்கிடவேண்டும், பழியை முஸ்லிம்கள் மீது, குறிப்பாக கஷ்மீர் முஸ்லிம்கள் மீது போட வேண்டும், முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டிட வேண்டும், என்பதற்காக அதனை திட்டமிட்டவர்களும் செயல்படுத்தியவர்களும் ‘STF’ என்ற கஷ்மீர் சிறப்புப் படையினரும் டெல்லி (Special Police Cell) தனிகாவல் துறையினரும்தான். இதனை விரிவாக வைகறைவெளிச்சம் ஜனவரி2013 இதழ், நாடாளுமன்றத் தாக்குதல் வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள் என்ற நூல் இவற்றில் குறிப்பிட்டிருந்தோம். 
                                                      -   MGM

தொடர்புடைய மற்ற ஆக்கங்கள்:
  


No comments:

Post a Comment