Sunday, 17 February 2013

விஸ்வரூபங்களுக்கு முன்....விஸ்வரூபங்களுக்கு முன்....

1950களில் அமெரிக்கா, உலகில் ஒரு வல்லரசாக உயர்ந்தது. அந்த நாள் முதலே தன்னுடைய உலக ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இறுதியாக இருக்கப் போவது கம்யூனிசத்திற்கு அடுத்தாற்போல், இஸ்லாம்தான் என ஊர்ஜிதப் படுத்திக் கொண்டது.

            இந்த உண்மைகளை அமெரிக்காவின் வெளிவிவகாரத்துறையின் செயலாளர், Dulles அவர்கள் தான் எழுதிய (War and Peace) போரும் அமைதியும்என்ற நூலில் தெளிவு படுத்தினார்.

     தனது உலக ஆதிக்கத்தை அமெரிக்கா அன்பாலோ, அரவணைப்பாலோ ஏற்படுத்திட விரும்பவில்லை. மாறாக, போர்களின் மூலமே நிலைநிறுத்திட விரும்பியது. தனது உலக ஆதிக்கத் திட்டங்களுக்கு, மிகப்பெரிய எதிரியாக இஸ்லாத்தைத்தான் பார்த்தது அமெரிக்கா.

     ஆகவே, சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பின் இஸ்லாத்திற்கும் முஸ்லிம் நாடுகளுக்கும் எதிரான தனது திட்டங்களைக் கூர்மையாக்கியது. இஃது 1980களிலேயே பட்டவர்த்தனமான ஆய்வுகள், அறிக்கைகள் என வந்தன.

     இந்த காலகட்டத்தில் 1975 முதல் 1980 வரை அமெரிக்காவின் சார்பில் முஸ்லிம் நாடுகளில் கள ஆய்வுகளை நடத்தினார், ஆராய்ச்சியாளர் “John Esposito என்பவர். இஃது அமெரிக்காவின் வெளிவிவகாரத்துறைக்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு. இந்த ஆய்வுக்கு அவர் தந்த பெயர் (Voices of Resurgent Islam) “இஸ்லாமிய எழுச்சியின் குரல்கள்

            அதாவது இஸ்லாமிய எழுச்சியொன்று உலகில் குறிப்பாக முஸ்லிம் உலகில் எழுந்து வந்துகொண்டிருக்கிறது என்பதை தனது கள ஆய்வு உறுதி படுத்துகின்றது என்கின்றார்.

                முஸ்லிம் இளைஞர்கள், இஸ்லாத்தை தங்கள் நெஞ்சங்களில் சுமந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே, அவர்கள் தாங்கள்  வாழும் பகுதிகளில் இஸ்லாம் மேலொங்க வேண்டும், நிலைநாட்டப்பட வேண்டும், அது இழந்து  நிற்கும் கீர்த்தியை மீண்டும் பெற வேண்டும் என விரும்புகிறார்கள். இந்த இலட்சியம், தலைமுறைகளைத் தாண்டியும் வளர்ந்து கொண்டிருக்கிறது. இளைஞர்களின் இந்த ஆத்ம ஆசையைத்தான் இஸ்லாமிய எழுச்சியின் குரல்கள் என்கின்றார் மற்றும் முறையான திட்டங்களின்றி இதனை முறியடிக்க முடியாது என்கின்றார், ஜான் எஸ்போசிட்டா.

     அமெரிக்காவின் வெளிவிவகாரத்துறை தனது கொள்கைகளை விவாதிக்க ஓர் ஆவணத்தை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. அதில், அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைகள் எதன்படி இருக்க வேண்டும் என்ற ஆய்வுக் கட்டுரைகளை இடம்பெற செய்கிறார்கள். அதிலும் ‘John Exposito’ தனது ஆய்வுகளை இடம்பெற செய்தார். தனது ஆய்வு முடிவுகளை அத்தனை ஆய்வாளர்களும், சிந்தனையாளர்களும் விமர்சிக்க வேண்டும், எதிர்க்க வேண்டும், மறுக்க வேண்டும் என்பதே அவருடைய நோக்கம்.

காரணம்,
     விமர்சிப்பவர்களிடமிருந்தும் எதிர்ப்பவர்களிடமிருந்தும் வரும் கருத்துக்கள் தனது ஆய்வு எங்கே பழுது பட்டிருக்கின்றது, என்பதை எடுத்துச் செல்லும்? எங்கே தனது ஆய்வு பழுது பட்டிருக்கின்றது என்பதைத் தெரிந்தால் அதை சீர் செய்துவிடலாம்.

இப்படியொரு பழுதற்ற ஆய்வை அவர் ஏன் கொண்டு வந்திட வேண்டும்?

     இந்த வினாவின் விடை:- இஸ்லாத்தின் மேல் ஒரு பெரும் போரைத் தொடுத்திட வேண்டும். அந்தப் போரில் எந்த நிலையிலும் தோற்றுவிடக் கூடாது. அதனால் பழுதற்ற ஓர் போர்த் திட்டத்தை வரைந்திட வேண்டும் என்பதுதான். இந்த பின்னணியில் விமர்சனங்களை வரவேற்றபின், ஒரு ஆய்வரங்கத்திற்கு ஏற்பாடு செய்தார், ஜான் எஸ்போசிடொ.


        
 இவரது ஆய்வின் மேலுள்ள விவாத அரங்கம், அமெரிக்காவிலுள்ள (College of the Holy Cross) புனித சிலுவையின் கல்லூரியால் ஏற்பாடு செய்யப் பட்டது. இதற்கான முழு செலவையும் (USIA – United States of International Aid) அமெரிக்காவின் சர்வதேச உதவி நிறுவனம் ஏற்றுக் கொண்டது. ஆய்வரங்கம் 1980-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் நடந்தது.

     எதிர் கருத்துகளை அறிந்திட உலகிலுள்ள பல இஸ்லாமிய இயக்கத்தை சார்ந்தவர்களும் அழைக்கப் பட்டிருந்தார்கள். சிலர் கலந்து கொள்ளவும் செய்தார்கள். ஆய்வரங்கத்தின் கொள்கை ரீதியான விவாதத்திற்கு பின்வரும் இஸ்லாமிய அறிஞர்களின் சிந்தனைகளும் எழுத்துகளும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்டன.
  
  1)   Sayyid Qutb- Ideologue of Islamic Revival

ஷஹீத் செய்யித் குத்துப் – இஸ்லாமிய மறுமலர்ச்சியின் கொள்கைவாதி.      2)      Maulana Maududi and the Islamic State

மௌலானா மௌதூதி (ரஹ்)-யும் இஸ்லாமிய அரசும்   3)   Imam Khomeini – Four Stages of Understandings

இமாம் கொமைய்னி – நான்கு படித்தரங்களான புரிந்து கொள்ளும் தன்மை.

4)   Muhammed Iqbal and the Ialamic state

முகமது இக்பால் அவர்களும் இஸ்லாமிய அரசும்

   5)   Ali Shariati - Ideologue of Iranian Revolution 

அலீ ஷரீயத்தீ - இரானிய மறுமலர்ச்சியின் கொள்கைவாதி.


இங்கே நாம் கவனிக்க வேண்டியது, இஸ்லாமிய சிந்தனைப் போக்கில் வாழும் தலைமுறையால் போற்றப்படும் – படிக்கப்படும் அனைவரும் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டுள்ளார்கள். இத்தனைக்குப் பிறகு, வகுக்கப்படும் கொள்கைகள், போர்த் திட்டங்கள் முழுமையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

     அடுத்து, தனது இந்த ஆய்வுகளை ஒரு பெரும் நூலாகவும் வெளியிட்டார். அந்த நூல் 1983-ம் ஆண்டு வெளிவந்தது. அதனை (Oxford University Press) ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக பதிப்பகம் என்ற வெளியீட்டு நிறுவனம், வெளியிட்டது.

இந்த நூலின் வெளியீட்டோடு தனது ஆய்வையோ, அல்லது வேறு சொற்களால் சொன்னால் தனது இஸ்லாத்திற்கு எதிரான போர்த் திட்டத்தை வகுப்பதையோ நிறுத்திவிடவில்லை, ஜான் எஸ்போசிடொ.

தனது ஆய்வைத் தொடர்ந்தார், ஆனால் அவருடைய மொத்தத் திட்டத்தையும், இஸ்லாமிய உலகில் நடந்த  ஓர் நிகழ்வு தகர்த்தெறிய தயாரானது.

இன்ஷா அல்லாஹ்….

பகுதி – 2 விரைவில்…
-    M.G.M வைகறை வெளிச்சம்

தொடர்புடைய மற்ற ஆக்கங்கள்:

இஸ்லாமியர்களும் ஊடகச் சித்தரிப்புகளும்- MGM உரை

No comments:

Post a Comment